Just In
- 2 hrs ago
ஸ்கோடா ஆக்டேவியாவில் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட்!! புதுமையான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டது...
- 9 hrs ago
மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!
- 11 hrs ago
சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?
- 14 hrs ago
டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்!
Don't Miss!
- News
ஆக்சிஜன் பெட் தட்டுப்பாடு.. ரெம்டிசிவிர் மருந்து இல்லை.. டாக்டர்கள் போராட்டம்.. எங்க தெரியுமா?
- Sports
எவ்வளவு திமிர்.. அவரை ஓரம்கட்டிட்டு இப்ப போய் புலம்பினா எப்படி? வார்னரை வறுத்தெடுக்கும் பேன்ஸ்!
- Finance
தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..!
- Movies
'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது இவர் தான்
- Lifestyle
தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சாரட் வண்டி... ஆனா குதிரை இருக்காதாம்... அப்போ வண்டி எப்படிங்க ஓடும்!!
குதிரை இல்லா சாரட் வண்டி மீண்டும் குறிப்பிட்ட நகரத்தில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.

குதிரைகள் மூலம் ஓடக்கூடிய சாரட் வண்டிகள் முந்தைய காலங்களில் அதிக புகழ்வாய்ந்தவையாக இருந்தன. பொதுபோக்குவரத்து போன்ற பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்ட இவ்வாகனம், நாளடைவில் கல்யாணம் போன்ற சுப நிகழ்வுகளில் மட்டுமே பயன்படக் கூடிய வாகனமாக மாறியது.

இருப்பினும், அவற்றை நாடு முழுவதும் பரவலாகக் காண முடிந்தது. கடுமையான விதிகள் மற்றும் நெருக்கடிகள் ஆகியவை இணைந்து இந்த வாகனத்தின் பயன்பாட்டை முழுமையாக ஒழித்தே விட்டது. எனவே, தற்போது குதிரைகளை மட்டுமே கடற்கரை மற்றும் சில சுற்றுலா தளங்களில் மட்டுமே காண முடிகின்றது.

சுப நிகழ்வு ஊர்வலங்களுக்கு பலர் வாடகை வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால், இந்த வாகனங்கள் பயன்பாட்டிலேயே இல்லாத நிலை உருவாகியிருக்கின்றது. எனவே, சாரட் வாகனங்கள் வண்டிகள் தற்போது புழுதி படிந்து, இயற்கைக்கு (தூசி, மழை உள்ளிட்டவற்றிற்கு) இரையாகி வருகின்றது.

குதிரை சாரட் வாகனங்கள் மஹாராஷ்டிராவின் மும்பை நகரத்திலேயே அதிகளவில் பயன்பாட்டில் இருந்தன. இந்த நிலையிலேயே சில குறிப்பிட்ட காரணங்களுக்காக மும்பை உயர் நீதிமன்றம் குதிரை சாரட் வண்டிகள் இயக்கத்திற்கு கடந்த 2015ம் ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டது.

இதனால், சாரட் ரக வாகனங்களை மட்டுமே நம்பி பிழைப்பை நடத்தி வந்த பலர் வாழ்வாதரத்தை இழந்து, பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையிலும், சிலர் சாரட் வாகனங்களைப் பராமரித்து வருவாதகக் கூறப்படுகின்றது. அத்தகைய வாகனங்களை மின் இயக்கத்திற்கு மாற்றி மீண்டும் சாலையில் இயக்குவதற்கு அனுமதிக்குமாறு கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவிற்கு மஹாராஷ்டிரா அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் மீண்டும் மும்பை நகரத்தில் சாரட் வண்டிகள் இயங்குவதற்கான சாத்திய கூறுகள் உருவாகியிருக்கின்றது. உபோ ரைடஸ் (UBO Ridez) எனும் நிறுவனத்தின்கீழ் இவ்வாகனங்கள் இயங்க இருக்கின்றன. ஆனால், இதில் குதிரைகளை நம்மால் காண முடியாது என்பது வருத்தத்திற்கு தகவல் ஆகும். குதிரையின் அழகு ஓட்டமில்லா (டொக் டொக் சத்தமில்லா) வாகனங்களே நகரத்தில் இயக்கப்பட இருக்கின்றன.

குதிரைகளுக்கு பதிலாக மின் மோட்டார்களே இயக்கத்திற்காக பயன்படுத்தப்பட இருக்கின்றன. முதல் கட்டமாக 10 வாகனங்கள் மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா, மரினே டிரைவ் மற்றும் நாரிமன் ஆகிய பகுதிகளில் இயக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source: TOI
சாரட் வண்டிகள் ஒவ்வொன்றிலும் சுமார் ஆறு பேர் வரை பயணிக்கலாம். இவை, 19 சென்சூரிகளில் அதிக ஃபேமஸாக இருந்த வாகனங்கள். 2015 ஆண்டு விதிக்கப்பட்ட தடைக்கு பின்னர் இப்போதே அவை மீண்டும் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. அதுவும், குதிரைகள் இல்லாமல் அவை பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. ஆகையால், இந்த வாகனங்களின் வருகையை எதிர்நோக்கி மும்பை வாசிகள் மிகுந்த ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.