விலையுயர்ந்த பென்ட்லீ சொகுசு காரை டேங்கர்போல் மாற்றிய ரஷ்யர்கள்... மிரள வைக்கும் வீடியோ!!

பென்ட்லீ சொகுசு காரை ரஷ்ய இளைஞர்கள் சிலர் டேங்கர்போல் மாற்றியமைத்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

விலையுயர்ந்த பென்ட்லீ சொகுசு காரை டேங்கர்போல் மாற்றிய ரஷ்யர்கள்... மிரள வைக்கும் வீடியோ!!

பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் பென்ட்லீ. இந்நிறுவனத்தின் பிரபல லக்சூரி கார்களில் ஒன்றே கான்டினென்டல் ஜிடி. பல இளைஞர்களின் கனவு வாகனமாக இருக்கும் இக்காரை ரஷ்ய இளைஞர்கள் சிலர் டேங்கர் வாகனத்தைப் போல் மாற்றியமைத்திருக்கின்றனர். ரஷ்ய இளைஞர்களின் இந்த செயல் உலக சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலையுயர்ந்த பென்ட்லீ சொகுசு காரை டேங்கர்போல் மாற்றிய ரஷ்யர்கள்... மிரள வைக்கும் வீடியோ!!

இளைஞர்களின் இச்செயலால் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி சொகுசு கார் மாடர்ன் மான்ஸ்டர் டேங்கராக மாறியிருக்கின்றது. இந்த கார் பற்றிய வீடியோவை அவர்கள் அகாடெமிஜி (AcademeG) எனும் யுட்யூப் சேனலில் பதிவேற்றியிருக்கின்றனர். இந்த வீடியோவே தற்போது இளைஞர்கள் மத்தியில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

விலையுயர்ந்த பென்ட்லீ சொகுசு காரை டேங்கர்போல் மாற்றிய ரஷ்யர்கள்... மிரள வைக்கும் வீடியோ!!

முன்னதாக இதே இளைஞர்கள் பிஎம்டபிள்யூ இ30 3 செரீஸ் செடான் ரக சொகுசு காரையும் ஃபைட்டர் ஜெட் விமானத்தின் எஞ்ஜினைக் கொண்டு மாற்றியமைத்திருந்தனர். இந்தநிலையிலேயே கூடுதல் பார்வையாளர்களைக் கவரும் நோக்கில் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரை மான்ஸ்டர் டேங்க் வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றனர்.

விலையுயர்ந்த பென்ட்லீ சொகுசு காரை டேங்கர்போல் மாற்றிய ரஷ்யர்கள்... மிரள வைக்கும் வீடியோ!!

மான்ஸ்டர் டேங்கராக மாறியிருக்கும் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஓர் முதல் தலைமுறை வாகனமாகும். இதனையே 'அல்ட்ராடேங்க்' எனும் பெயரில் ரஷ்ய இளைஞர்கள் மாற்றியமைத்துள்ளனர். மிக குறைந்த விலையில் செகண்ட் ஹேண்ட் சந்தையில் பெற்றே இவ்வாறு அவர்கள் மாற்றியமைத்ததாகக் கூறப்படுகின்றது.

விலையுயர்ந்த பென்ட்லீ சொகுசு காரை டேங்கர்போல் மாற்றிய ரஷ்யர்கள்... மிரள வைக்கும் வீடியோ!!

இது ஓர் 6.0 லிட்டர் ட்வின் டர்போ டபிள்யூ12 எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜினில் மிகப்பெரிய கோளாறு இருந்ததாகக் கூறப்படுகின்றது. இதனை சரி செய்வது மிக அதிக செலவீனத்தை ஏற்படுத்தும். இதன் காரணத்தினாலேயே பழுதான எஞ்ஜினை நீக்கிய இளைஞர்கள், அதற்கு பதிலாக 4.3 லிட்டர் வி8 எஞ்ஜினைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

விலையுயர்ந்த பென்ட்லீ சொகுசு காரை டேங்கர்போல் மாற்றிய ரஷ்யர்கள்... மிரள வைக்கும் வீடியோ!!

இதனைக் கொண்டே தற்போது காருக்கு இயங்கும் திறனை அவர்கள் வழங்கியிருக்கின்றனர். தொடர்ந்து, டேங்கர் வாகனத்தைப் போன்று பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக ரப்பர் டிராக்குகளை அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். இதனால், மிகவும் சாதுவான சொகுசு காரைப் போன்று காட்சியளித்து வந்த பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் தற்போது மாடர்னான மான்ஸ்டர் டேங்கராக மாறியுள்ளது.

https://www.youtube.com/embed/taLvoVXFDmM?rel=0

Image Courtesy: AcademeG

இதற்கான செலவு பற்றிய தகவலை இளைஞர்கள் வெளியிடவில்லை. அதேசமயம், இந்த வாகனத்தில் பிரேக்கிற்கென தனியாக எந்தவொரு கருவியையும் அவர்கள் பொருத்தவில்லை என கூறப்படுகின்றது. இதற்கு ஸ்டியரிங் வீலினை வலது அல்லது இடது என திருப்பும்போது நிறுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது சற்று ஆபத்தானது என்பதை காட்டுகின்றது.

Most Read Articles

English summary
Bentley Continental GT Modified Into Monster Tank. Read In Tamil.
Story first published: Friday, February 5, 2021, 13:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X