எந்த காரிலும் இல்லை... உலகிலேயே பெரிய ப்ரேக்குகளை பெற்றுள்ள பெண்ட்லீ கார், காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு!!

உலகளவில் பிரபலமான பெண்ட்லீ நிறுவனம் அதன் காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு கூபே & கன்வெர்டபிள் கார்களில் நான்கு புதிய தொழிற்நுட்பங்களை கொண்ட அதிநவீன சேசிஸை புதியதாக பயன்படுத்தியுள்ளது.

எந்த காரிலும் இல்லை... உலகிலேயே பெரிய ப்ரேக்குகளை பெற்றுள்ள பெண்ட்லீ கார், காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு!!

இதன் காரணமாக இந்த க்ராண்ட் டூரர் வாகனத்தில் சுறுசுறுப்பும், செயல்திறனும், மற்றும் பயண அனுபவமும் அடுத்த நிலைக்கு சென்றுள்ளதாக பெண்ட்லீ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எந்த காரிலும் இல்லை... உலகிலேயே பெரிய ப்ரேக்குகளை பெற்றுள்ள பெண்ட்லீ கார், காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு!!

அடாப்டிவ் டேம்பிங்கை கொண்ட 3-சேம்பர் ஆக்டிவ் காற்று சஸ்பென்ஷன் உடன் இந்த புதிய சேசிஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது காரின் பேலன்ஸுக்கும், வலுவான அடித்தளத்திற்கும் முக்கியமான அங்கமாக விளங்கும் என கூறப்படுகிறது.

எந்த காரிலும் இல்லை... உலகிலேயே பெரிய ப்ரேக்குகளை பெற்றுள்ள பெண்ட்லீ கார், காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு!!

இதனுடன் புதியதாக தயாரிக்கப்பட்ட கார்பன் பீங்கான் ப்ரேக்குகள், வெவ்வேறான எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், அனைத்து சக்கர ட்ரைவிங்கிற்கான ஸ்டேரிங் சக்கரம் மற்றும் எலக்ட்ரானிக் லிமிடெட் ஸ்லிப் டிஃப்ரென்ஷியல் உள்ளிட்டவற்றையும் இந்த புதிய சேசிஸின் மூலமாக காரில் கூடுதல் தேர்வாக வழங்க முடியுமாம்.

எந்த காரிலும் இல்லை... உலகிலேயே பெரிய ப்ரேக்குகளை பெற்றுள்ள பெண்ட்லீ கார், காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு!!

காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு காரில் கம்ஃபர்ட் மோடில் ஒட்டு மொத்த பிடிமானமும் காரின் முன் மற்றும் பின் சக்கரங்களில் இருந்து சமமான அளவில் கிடைக்கும். அதேநேரம் ஸ்போர்ட் மோடில், பிடிமானமானது பின்சக்கரங்களுக்கு கிடைக்கும் டார்க் திறனை பொறுத்து கிடைக்குமாம்.

எந்த காரிலும் இல்லை... உலகிலேயே பெரிய ப்ரேக்குகளை பெற்றுள்ள பெண்ட்லீ கார், காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு!!

புதிய கார்பன் பீங்கான் ப்ரேக்கிங் சிஸ்டத்தின்படி முன் சக்கரங்களுக்கு 440மிமீ விட்டமுடைய டிஸ்க்குகள், புதிய 10-பிஸ்டன் காலிபர்களுடன் வழங்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய ப்ரேக்கிங் சிஸ்டம் உலகில் வேறெந்த காரிலும் வழங்கப்படுவதில்லை.

எந்த காரிலும் இல்லை... உலகிலேயே பெரிய ப்ரேக்குகளை பெற்றுள்ள பெண்ட்லீ கார், காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு!!

இதன் மூலம் இந்த பெருமையை பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு கார் பெற்றுள்ளது. மேலும் இந்த புதிய பீங்கான் ப்ரேக்கிங் சிஸ்டத்தினால் காரின் எடை கிட்டத்தட்ட 33 கிலோ வரையில் குறைந்துள்ளது.

எந்த காரிலும் இல்லை... உலகிலேயே பெரிய ப்ரேக்குகளை பெற்றுள்ள பெண்ட்லீ கார், காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு!!

எலக்ட்ரானிக் திடநிலை கண்ட்ரோல் (ESC), சீரற்ற மேற்பரப்புகளிலும் நிலைத்தன்மையை வழங்குவதன் மூலம் வாகனத்தை ஓட்டுவதில் அதிக சுதந்திரத்தை பெற முடியும். டைனாமிக் பயன்முறை (Mode)-இல் இருக்கும்போது, ஓட்டுனரின் விருப்பப்படி காரின் மூலைவிட்ட நிலைப்பாட்டை மாற்ற இந்த கண்ட்ரோல் சிஸ்டம் அனுமதிக்கும்.

எந்த காரிலும் இல்லை... உலகிலேயே பெரிய ப்ரேக்குகளை பெற்றுள்ள பெண்ட்லீ கார், காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு!!

ஏற்கனவே கூறியதுதான், புதிய அனைத்து-சக்கர ஸ்டேரிங் மற்றும் எலக்ட்ரானிக் கியர் டிஃப்ரென்ஷியல் மூலம் வாகனத்தின் சுறுசுறுப்பு மற்றும் நிலைத்தன்மை மேலும் மேம்பட்டுள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வேகத்தில் வளைவுகளில் திரும்பும்போது ஜிடி ஸ்பீடு காரின் பின் சக்கரங்கள் முன் சக்கரங்களுக்கு எதிர் திசையில் சுழன்று காரின் திசையை விரைவாக மாற்ற உதவும்.

எந்த காரிலும் இல்லை... உலகிலேயே பெரிய ப்ரேக்குகளை பெற்றுள்ள பெண்ட்லீ கார், காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு!!

அதிவேகத்தின் போது மட்டும் கார் கண்ட்ரோலை இழக்கக்கூடாது என்பதற்காக பின் சக்கரங்கள் முன்னோக்கி சுழலும் என பெண்ட்லீ தெரிவித்துள்ளது. பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு காரில் 0-வில் 60kmph வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிட முடியும். இந்த சொகுசு காரின் அதிகப்பட்ச வேகம் 335kmph ஆகும்.

Most Read Articles

மேலும்... #பென்ட்லீ #bentley
English summary
Bentley Continental GT Speed gets world's largest brakes.
Story first published: Thursday, May 6, 2021, 16:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X