பெங்களுரூவில் பெண்ட்லீயின் 2021 பெண்டைகா & ஃப்ளையிங் ஸ்பர் கார்கள்!! நாடு முழுவதும் சுற்றுப்பயணம்...

பெண்ட்லீ இந்தியா நிறுவனத்தின் 2021 பெண்டைகா மற்றும் புதிய ஃப்ளையிங் ஸ்பர் மாடல்கள் பெங்களூருவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் கார்களின் லக்சரி மற்றும் சவுகரியத்தை உணரும் வகையில் இந்த பெண்ட்லீ கார்கள் இரண்டும் இந்தியா முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

பெங்களுரூவில் பெண்ட்லீயின் 2021 பெண்டைகா & ஃப்ளையிங் ஸ்பர் கார்கள்!! நாடு முழுவதும் சுற்றுப்பயணம்...

பெண்ட்லீ பிராண்டின் லக்சரி எஸ்யூவி மாடலான பெண்டைகா இதுவரையில் உலகளவில் 20,000க்கும் அதிகமான எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பெண்டைகாவின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4.01 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெங்களுரூவில் பெண்ட்லீயின் 2021 பெண்டைகா & ஃப்ளையிங் ஸ்பர் கார்கள்!! நாடு முழுவதும் சுற்றுப்பயணம்...

ஓனிக்ஸ் கருப்பு நிறத்தில் பெங்களூரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புதிய பெண்டைகா எஸ்யூவி காரில் 4.0 லிட்டர் இரட்டை-டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-இல் 542 பிஎச்பி மற்றும் 1960- 4500 ஆர்பிஎம்-இல் 770 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

பெங்களுரூவில் பெண்ட்லீயின் 2021 பெண்டைகா & ஃப்ளையிங் ஸ்பர் கார்கள்!! நாடு முழுவதும் சுற்றுப்பயணம்...

இந்த ட்ரான்ஸ்ஸ்மிஷன் என்ஜினின் ஆற்றலை காரின் அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும். பெண்டைகா காரின் முன்பக்கத்தில் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட பெரிய அளவிலான க்ரில், அதன் இரு பக்கங்களிலும் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்கள் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன.

பெங்களுரூவில் பெண்ட்லீயின் 2021 பெண்டைகா & ஃப்ளையிங் ஸ்பர் கார்கள்!! நாடு முழுவதும் சுற்றுப்பயணம்...

முன்பக்க பம்பரிலும் விலையுயர்ந்த தோற்றத்திற்காக க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி காரில் வழங்கப்படுவதை போன்றதான ஆந்தை வடிவிலான எல்இடி டெயில்லைட்டை பார்க்க முடிகிறது.

பெங்களுரூவில் பெண்ட்லீயின் 2021 பெண்டைகா & ஃப்ளையிங் ஸ்பர் கார்கள்!! நாடு முழுவதும் சுற்றுப்பயணம்...

புதிய பெண்டைகாவின் பக்கவாட்டு பகுதியில் முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்கும் விதத்தில் 22 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் காட்சித்தருகின்றன. விலையுயர்ந்த கார் என்ற வாக்கியத்தை நியாயப்படுத்தும் விதத்தில் ஜன்னல் கண்ணாடிகளின் வெளிப்புற ஓரங்கள் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன.

பெங்களுரூவில் பெண்ட்லீயின் 2021 பெண்டைகா & ஃப்ளையிங் ஸ்பர் கார்கள்!! நாடு முழுவதும் சுற்றுப்பயணம்...

அப்படியே உட்புறத்திற்கு சென்றால், இந்த எஸ்யூவி வாகனத்தின் உட்புற கேபின் பழுப்பு நிறத்தில் 10.9 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பல-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், கண்ட்ரோல்களுடன் பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெங்களுரூவில் பெண்ட்லீயின் 2021 பெண்டைகா & ஃப்ளையிங் ஸ்பர் கார்கள்!! நாடு முழுவதும் சுற்றுப்பயணம்...

இவற்றுடன் கேபினை ப்ரீமியம் தரத்தில் காட்டுவதற்காக பனோராமிக் சன்ரூஃப், பின் இருக்கை பயணிகளுக்கு சிறிய மாத்திரை-வடிவிலான ரிமோட் கண்ட்ரோல், பின்பக்க ஏசி துளைகள், யுஎஸ்பி சார்ஜிங் ஸ்லாட்கள் மற்றும் ப்ரீமியம் தரத்திலான ஆடியோ சிஸ்டம் போன்றவற்றையும் பெண்ட்லீ நிறுவனம் வழங்கியுள்ளது.

பெங்களுரூவில் பெண்ட்லீயின் 2021 பெண்டைகா & ஃப்ளையிங் ஸ்பர் கார்கள்!! நாடு முழுவதும் சுற்றுப்பயணம்...

2021 பெண்டைகா உடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெண்ட்லீயின் 4-கதவு லக்சரி செடான் காரான ஃப்ளையிங் ஸ்பர் மாடல் கிளாசியர் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த செடான் காரில் 6.0 லிட்டர் டபிள்யூ12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பெங்களுரூவில் பெண்ட்லீயின் 2021 பெண்டைகா & ஃப்ளையிங் ஸ்பர் கார்கள்!! நாடு முழுவதும் சுற்றுப்பயணம்...

அதிகப்பட்சமாக 5,000- 6,000 ஆர்பிஎம்-இல் 626 பிஎச்பி மற்றும் 1350- 4500 ஆர்பிஎம்-இல் 900 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இதன் என்ஜின் உடன் இணைக்கப்பட்டுள்ள 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்ஜினின் ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கக்கூடியது.

பெங்களுரூவில் பெண்ட்லீயின் 2021 பெண்டைகா & ஃப்ளையிங் ஸ்பர் கார்கள்!! நாடு முழுவதும் சுற்றுப்பயணம்...

வெளிப்புற வெள்ளை நிறத்திற்கு ஏற்ப இந்த பெண்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் செடான் காரின் உட்புறம் ‘ஹாட்ஸ்பர்' என அழைக்கப்படும் சிவப்பு நிறத்தில் மென்மையான லெதர், மரத்தகடு மற்றும் அல்காண்ட்ரா பாகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெங்களுரூவில் பெண்ட்லீயின் 2021 பெண்டைகா & ஃப்ளையிங் ஸ்பர் கார்கள்!! நாடு முழுவதும் சுற்றுப்பயணம்...

இதன் கேபினில் ஹைலைட்களாக 12.3 இன்ச்சில் சுழலும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட், முழு-டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பல நிலைகளில் க்ளைமேட் கண்ட்ரோல், பல செயல்பாடுகளை வழங்கக்கூடிய ஸ்டேரிங் சக்கரம், கண்ணாடி ஸ்லைட்களுடன் சன்ரூஃப் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.

பெங்களுரூவில் பெண்ட்லீயின் 2021 பெண்டைகா & ஃப்ளையிங் ஸ்பர் கார்கள்!! நாடு முழுவதும் சுற்றுப்பயணம்...

ஃப்ளையிங் ஸ்பர் காரில் இருக்கைகள் அனைத்தும் தேவைக்கு ஏற்றாற்போல் கண்ட்ரோல் செய்யும் விதத்தில் உள்ளன. காரின் முன்பக்கத்தில் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட க்ரில் அமைப்பு கூடுதல் வேலைப்பாடுகளால் தங்க நிறத்தில் ஜொலிக்கிறது.

பெங்களுரூவில் பெண்ட்லீயின் 2021 பெண்டைகா & ஃப்ளையிங் ஸ்பர் கார்கள்!! நாடு முழுவதும் சுற்றுப்பயணம்...

கார்னரிங் விளக்குகளுடன் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்கள் படிக வடிவத்தில் உள்ளன. 2021 பெண்டைகாவை போன்று இந்த காரின் முன்பக்க பம்பரின் அடிப்பகுதியிலும் லக்சரி தோற்றத்திற்காக க்ரோம் தொடுதல் சேர்க்கப்பட்டுள்ளன.

பெங்களுரூவில் பெண்ட்லீயின் 2021 பெண்டைகா & ஃப்ளையிங் ஸ்பர் கார்கள்!! நாடு முழுவதும் சுற்றுப்பயணம்...

இந்த லக்சரி செடானின் பின்பக்கத்தில் B-வடிவில் பல்புகளுடன் சதுர வடிவில் எல்இடி டெயில்லேம்ப்கள், இரு முனைகளிலும் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. அலாய் சக்கரங்கள் 21 இன்ச்சில் உள்ளன.

பெங்களுரூவில் பெண்ட்லீயின் 2021 பெண்டைகா & ஃப்ளையிங் ஸ்பர் கார்கள்!! நாடு முழுவதும் சுற்றுப்பயணம்...

இந்தியாவில் பெண்ட்லீயின் சில்லறை வணிகத்தை 2003ல் இந்த லக்சரி கார் பிராண்டை நம் நாட்டில் அறிமுகப்படுத்திய எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸ் நிறுவனம் கவனித்து கொள்கிறது. மேலும் பெண்ட்லீ கார்களின் இந்த இந்திய சுற்றுப்பயணமும் எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸின் மேற்பார்வையில் தான் நடைபெற்று வருகிறது.

Most Read Articles

மேலும்... #பென்ட்லீ #bentley
English summary
2021 Bentley Bentayga & New Flying Spur Showcased In Bengaluru. Brand’s India Tour Reaches The City.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X