ரூ.5 லட்சத்திற்குள் தற்போதைக்கு கிடைக்கும் கார்கள்!! கார் வாங்குவதற்கு முன் அவற்றை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!

இந்தியா இன்னும் வளர்ந்துவரும் நாடுகளின் வரிசையில் தான் உள்ளது. நம் நாட்டில் கார்களை ரூ.5 லட்சம் என்கிற விலையில் எதிர்பார்ப்போரின் எண்ணிக்கையே தற்போதைக்கு அதிகம். இதில் நீங்களும் ஒருவரா? ரூ.5 லட்சம் அல்லது அதற்கும் கீழ் விலை கொண்ட காரை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? உங்களுக்காகவே இந்திய சந்தையில் தற்சமயம் ரூ.5 லட்சத்திற்குள் விற்பனை செய்யப்பட்டு வரும் கார்களை பற்றி இனி பார்க்கலாம்.

ரூ.5 லட்சத்திற்குள் தற்போதைக்கு கிடைக்கும் கார்கள்!! கார் வாங்குவதற்கு முன் அவற்றை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!

மாருதி ஆல்டோ

இவ்வாறான மலிவான கார்களை பற்றி பார்க்கும்போது அதில் நிச்சயம் மாருதி ஆல்டோவின் பெயரை சேர்க்காமல் இருக்க முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பி தேர்வு செய்யக்கூடிய கார்களுள் ஆல்டோவும் உள்ளது. இன்றோ, நேற்றோ அல்ல பல ஆண்டுகளாக.

Engine 796cc
Mileage 32.0 kmpl
Max Power 40.36bhp
Max Torque 69Nm
Transmission Manual And Automatic
Top Speed 140 kmph
Fuel Type Petrol and CNG
Seating Capacity 5
Air-Con Yes
Power Steering Yes
Colour Options Solid White, Silky Silver, Granite Grey, Mojito Green, Cerulean Blue, Uptown Red
ரூ.5 லட்சத்திற்குள் தற்போதைக்கு கிடைக்கும் கார்கள்!! கார் வாங்குவதற்கு முன் அவற்றை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!

குறைவான விலை மற்றும் அதிகப்படியான மைலேஜ் இவை இரண்டும் தான் இந்த மலிவான மாருதி காரின் விற்பனைக்கு மிக முக்கிய காரணிகளாகும். மனைவி, குழந்தைகளுடன் என தனி குடும்பத்தில் வசிப்போரின் பிரதான தேர்வாக விளங்கும் இதனை அப்கிரேட் செய்து மிகவும் பாதுகாப்பான காராக கொண்டுவரவதில் மாருதி நிறுவனம் இறங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ரூ.5 லட்சத்திற்குள் தற்போதைக்கு கிடைக்கும் கார்கள்!! கார் வாங்குவதற்கு முன் அவற்றை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!

ஹூண்டாய் சாண்ட்ரோ

ஹூண்டாய் சாண்ட்ரோ இந்தியாவில் தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் மலிவான கார்களுள் ஒன்று. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்னர் 1998ல் முதன்முதலாக இந்தியாவில் சாண்ட்ரோ அறிமுகப்படுத்தப்பட்டது.

Engine 1086cc
Mileage 20.3 kmpl
Max Power 68.05bhp
Max Torque 99.04Nm
Transmission Manual
Top Speed 156 kmph
Fuel Type Petrol
Seating Capacity 5
Air-Con Yes
Power Steering Yes
Colour Options Typhoon Silver, Polar White, Titan Grey, Imperial Beige, Alpha Blue, Fiery Red, Diana Green
ரூ.5 லட்சத்திற்குள் தற்போதைக்கு கிடைக்கும் கார்கள்!! கார் வாங்குவதற்கு முன் அவற்றை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!

அதன்பின் விசாலான உட்புற கேபினினாலும், தரமான கட்டமைப்பினாலும் மற்றும் சிறந்த மைலேஜினாலும் இந்தியர்களின் ஃபேவரட் மாடலாகியது சாண்ட்ரோ. அதுமட்டுமில்லாமல் நம் நாட்டில் தென்கொரிய ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வலுவாக காலூன்ற அடித்தளம் அமைத்து கொடுத்தது என்றால் அதில் மிகையில்லை.

ரூ.5 லட்சத்திற்குள் தற்போதைக்கு கிடைக்கும் கார்கள்!! கார் வாங்குவதற்கு முன் அவற்றை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!

ரெனால்ட் க்விட்

ரூ.4.07 லட்சம் என்ற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையே ரெனால்ட்டின் இந்த மைக்ரோ-எஸ்யூவி காரின் அடையாளமாகும். இதனால் மிகவும் குறைவான விலையில், அதேநேரத்தில் தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்திற்கு ஏற்ற ஸ்டைலில் காரை வாங்க விரும்புபவர்களுக்கு க்விட் சரியானதாக இருக்கும்.

Engine 999cc
Mileage 23.0 kmpl
Max Power 53.3bhp
Max Torque 72Nm
Transmission Manual
Top Speed 135 kmph
Fuel Type Petrol
Seating Capacity 5
Air-Con No
Power Steering No
Colour Options Outback Bronze, Planet Grey, Fiery Black, Moonlight Silver, Ice Cool White, Fiery Red
ரூ.5 லட்சத்திற்குள் தற்போதைக்கு கிடைக்கும் கார்கள்!! கார் வாங்குவதற்கு முன் அவற்றை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!

இந்த பிரெஞ்சு பிராண்ட் கார் 98 சதவீதம் இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டே வடிவமைக்கப்படுகிறது. இதனால் தான் ரெனால்ட் நிறுவனத்தால் இவ்வளவு குறைவான விலையினை நிர்ணயிக்க முடிந்துள்ளது. மலிவான விலையினை கொண்டிருப்பினும் ரெனால்ட் க்விட்டில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

ரூ.5 லட்சத்திற்குள் தற்போதைக்கு கிடைக்கும் கார்கள்!! கார் வாங்குவதற்கு முன் அவற்றை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!

மாருதி எஸ்-பிரெஸ்ஸோ

4 மீட்டருக்குள் கிடைக்கும் எஸ்யூவி ஸ்டைலிலான க்ராஸ்ஒவர் மாடல் தான் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ ஆகும். குறைவான விலை இந்த மாருதி காரின் சிறப்பம்சம் என்றாலும், எஸ்-பிரெஸ்ஸோவின் மலிவான வேரியண்ட்டில் கூட ஆற்றல்மிக்க என்ஜின் வழங்கப்படுகிறது.

ரூ.5 லட்சத்திற்குள் தற்போதைக்கு கிடைக்கும் கார்கள்!! கார் வாங்குவதற்கு முன் அவற்றை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!
Engine 998cc
Mileage 21.4 kmpl
Max Power 58.33bhp
Max Torque 90Nm
Transmission Manual And Automatic
Top Speed 140 kmph
Fuel Type Petrol
Seating Capacity 4 or 5
Air-Con No
Power Steering No
Colour Options Solid Sizzle Orange, Pearl Starry Blue, Metallic Granite Grey, Solid Fire Red, Metallic Silky Silver, Solid White

மேலும் சவுகரியமான இடவசதி உடனான சூழலையும் ஆரம்ப நிலை எஸ்-பிரெஸ்ஸோ வேரியண்ட்கள் பெறுகின்றன. இதனால் முதல்முறையாக கார் வாங்குவோர்க்கு மாருதியின் இந்த மைக்ரோ-எஸ்யூவி மாடல் சரியான தேர்வாக இருக்கும்.

ரூ.5 லட்சத்திற்குள் தற்போதைக்கு கிடைக்கும் கார்கள்!! கார் வாங்குவதற்கு முன் அவற்றை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!

டட்சன் ரெடி-கோ

நிஸானின் டட்சன் கோ மாடல் அதன் கம்பீரமான தோற்றத்தினாலும், ஏற்கக்கூடிய மைலேஜினாலும் சற்று பிரபலமாகியது. ஆனால் இன்னமும் இந்த டட்சன் கார் தனக்கான ஓர் இடத்தை பிடிக்க போராடி வருவதை சொல்லியே ஆக வேண்டும்.

ரூ.5 லட்சத்திற்குள் தற்போதைக்கு கிடைக்கும் கார்கள்!! கார் வாங்குவதற்கு முன் அவற்றை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!
Engine 799cc
Mileage 25.2 kmpl
Max Power 53.2bhp
Max Torque 72Nm
Transmission Manual
Top Speed 140 kmph
Fuel Type Petrol
Seating Capacity 5
Air-Con Yes
Power Steering No
Colour Options Lime, Silver, Grey, Ruby, White

கம்பீரமான தோற்றத்தில் இருப்பினும் டட்சன் ரெடி-கோ அளவில் சிறியதே. இதன் மைலேஜ் அளவு 25.2km/l ஆகும். இதன் விலை இந்த 5 கார்களிலேயே குறைவாக ரூ.3 லட்சத்தில் உள்ளது. இந்த விலையினால் ரெனால்ட் க்விட்டிற்கு சரியான நேரெதிர் போட்டி மாடலாக டடசன் ரெடி-கோ விளங்கி வருகிறது.

Most Read Articles
English summary
5 Affordable Cars In India You Can Buy (Under 5 Lakhs).
Story first published: Tuesday, September 21, 2021, 2:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X