தற்போதைய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் குறைந்த விலையில் எதை வாங்கலாம்? எக்ஸ்யூவி700 முதல் எஸ்-கிராஸ் வரையில்

இந்தியாவில் நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களுக்கான சந்தை சமீப ஆண்டுகளில் பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது. இவற்றை காட்டிலும் அளவில் சிறிய காம்பெக்ட் எஸ்யூவி கார்களும் ஒவ்வொரு மாதத்திலும் அதிகளவில் வாடிக்கையாளர்களை பெற்று வருகின்றன.

தற்போதைய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் குறைந்த விலையில் எதை வாங்கலாம்? எக்ஸ்யூவி700 முதல் எஸ்-கிராஸ் வரையில்

அளவில் சிறியதாக இருப்பதால் காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் விலைகளும் நடுத்தர-அளவு எஸ்யூவி காருடன் ஒப்பிடுகையில் சற்று குறைவு தான். இருப்பினும் காம்பெக்ட் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்டை வாங்குவதை காட்டிலும் நடுத்தர-அளவு எஸ்யூவி காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை வாங்கலாம் என்கிற எண்ணம் உங்களில் பலருக்கு இருக்கலாம்.

தற்போதைய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் குறைந்த விலையில் எதை வாங்கலாம்? எக்ஸ்யூவி700 முதல் எஸ்-கிராஸ் வரையில்

அத்தகையவர்களில் ஒருவரா நீங்கள்?. மலிவான வேரியண்ட்டிலாவது நடுத்தர-அளவு எஸ்யூவி காரை வாங்க விரும்புபவர்களுக்காக, சில பிரபலமான நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களின் விலை குறைவான வேரியண்ட்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தற்போதைய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் குறைந்த விலையில் எதை வாங்கலாம்? எக்ஸ்யூவி700 முதல் எஸ்-கிராஸ் வரையில்

மஹிந்திரா எக்ஸ்யூவி700 - ரூ.12.49 லட்சம் & ரூ,12.99 லட்சம்

மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் சமீபத்தில் தான் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புத்தம் புதிய மஹிந்திரா எஸ்யூவி காருக்கு இதுவரையில் மட்டுமே 50,000 முன்பதிவுகளை கடந்து சென்று கொண்டிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது.

தற்போதைய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் குறைந்த விலையில் எதை வாங்கலாம்? எக்ஸ்யூவி700 முதல் எஸ்-கிராஸ் வரையில்

ரூ.12.49 லட்சம் என்பது பெட்ரோல் என்ஜின் உடன் எக்ஸ்யூவி700 மாடலின் ஆரம்ப விலையாகும். ரூ.12.99 லட்சம் என்பது டீசல் என்ஜின் உடன். ஆனால் 6-ஸ்பீடு என்ற ஒற்றை டிரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே கிடைக்கும் எக்ஸ்யூவி700 காரை ஐந்து இருக்கை தேர்வில் மட்டுமே வாங்க முடியும். 7-இருக்கை தேர்வில் தற்போது வழங்கப்படுவதில்லை.

தற்போதைய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் குறைந்த விலையில் எதை வாங்கலாம்? எக்ஸ்யூவி700 முதல் எஸ்-கிராஸ் வரையில்

எம்ஜி அஸ்டர் - ரூ.9.78 லட்சம்

மஹிந்திரா எக்ஸ்யூவி700-ஐ தொடர்ந்து இந்திய சந்தையில் மிக சமீபத்தில் களமிறக்கப்பட்ட மாடல் தான் எம்ஜி அஸ்டர் ஆகும். போட்டி மாடல்களுக்கு மிகவும் சவாலான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இசட்.எஸ் எலக்ட்ரிக் காரின் பெட்ரோல் வெர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் குறைந்த விலையில் எதை வாங்கலாம்? எக்ஸ்யூவி700 முதல் எஸ்-கிராஸ் வரையில்

அதாவது 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மட்டும் தான் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது. இருப்பினும் இதன் ஆரம்ப நிலை ‘ஸ்டைல்' வேரியண்ட்டிலும் 10.1 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 3.5 இன்ச் வண்ணத்திரை உடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை வழங்கப்படுகின்றன.

தற்போதைய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் குறைந்த விலையில் எதை வாங்கலாம்? எக்ஸ்யூவி700 முதல் எஸ்-கிராஸ் வரையில்

கியா செல்டோஸ் - எச்டிஇ பெட்ரோல் -ரூ.9.95 லட்சம் & டீசல் -ரூ.10.65 லட்சம்

ஹூண்டாய் க்ரெட்டாவை போன்று தற்போதைக்கு நம் இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் நடுத்தர-அளவு எஸ்யூவி காராக கியா செல்டோஸ் விளங்குகிறது. பல மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பரில் விற்பனையில் க்ரெட்டாவை செல்டோஸ் முந்தியுள்ளதை நமது செய்தித்தளத்தில் கூட பார்த்திருந்தோம்.

தற்போதைய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் குறைந்த விலையில் எதை வாங்கலாம்? எக்ஸ்யூவி700 முதல் எஸ்-கிராஸ் வரையில்

க்ரெட்டாவை காட்டிலும் செல்டோஸ் குறைவான ஆரம்ப விலையினை கொண்டுள்ளது. கியா செல்டோஸின் ஆரம்ப நிலை வேரியண்ட்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் (115 பிஎஸ்/ 144 என்எம்) மற்றும் 1.5 லிட்டர் டீசல் (115 பிஎஸ்/ 250 என்எம்) என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

தற்போதைய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் குறைந்த விலையில் எதை வாங்கலாம்? எக்ஸ்யூவி700 முதல் எஸ்-கிராஸ் வரையில்

ஃபோக்ஸ்வேகன் டைகுன் - ரூ.10.49 லட்சம்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த செப்டம்பரில் இந்திய சந்தையில் டைகுன் மாடலை அறிமுகப்படுத்தியது. கடந்த மாத விற்பனையில் அதிகம் விற்பனையான ஃபோக்ஸ்வேகன் மாடலாக டைகுன் விளங்குகிறது. அதிகப்பட்சமாக 115 பிஎஸ் மற்றும் 178 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

தற்போதைய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் குறைந்த விலையில் எதை வாங்கலாம்? எக்ஸ்யூவி700 முதல் எஸ்-கிராஸ் வரையில்

மாருதி எஸ்-கிராஸ் - ரூ.8.59 லட்சம்

வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெறாமல் போன மிகவும் சில மாருதி கார்களில் எஸ்-கிராஸும் ஒன்று. அளவில் பெரியதாக உள்ளது, பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஷாக உள்ளது, எல்லாம் சரிதான், ஆனால் தொழிற்நுட்ப அம்சங்கள், இதில் தான் எஸ்-கிராஸ் பெரியதாக கோட்டைவிடுகிறது.

தற்போதைய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் குறைந்த விலையில் எதை வாங்கலாம்? எக்ஸ்யூவி700 முதல் எஸ்-கிராஸ் வரையில்

டாப் வேரியண்ட்களிலேயே இந்த பிரச்சனை என்றால், ஆரம்ப-நிலை வேரியண்ட்டை பற்றி சொல்லவா வேண்டும். இதனால் தான் இந்த அளவில் பெரிய மாருதி எஸ்யூவி காரின் விலை மற்றவைகளை காட்டிலும் குறைவான லட்சங்களில் இருந்து ஆரம்பிக்கிறது.

Most Read Articles
English summary
Best Entry-Level Variants Of Midsize SUVs – XUV700 To S-Cross.
Story first published: Saturday, October 23, 2021, 2:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X