Just In
- 1 hr ago
ஸ்கோடா ஆக்டேவியாவில் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட்!! புதுமையான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டது...
- 8 hrs ago
மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!
- 10 hrs ago
சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?
- 12 hrs ago
டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்!
Don't Miss!
- Sports
எவ்வளவு திமிர்.. அவரை ஓரம்கட்டிட்டு இப்ப போய் புலம்பினா எப்படி? வார்னரை வறுத்தெடுக்கும் பேன்ஸ்!
- News
அரசியல்வாதிகளை விடாமல் துரத்தும் கொரோனா..பல்லடம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருக்கு தொற்று உறுதி!
- Finance
தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..!
- Movies
'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது இவர் தான்
- Lifestyle
தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எலெக்ட்ரிக் பேருந்துகளின் சேவையை நிதிஷ் குமார் தொடங்கி வைத்த பின் நடந்த பரபரப்பு சம்பவம்... என்னனு தெரியுமா?
பீஹாரில் எலெக்ட்ரிக் பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 12 புதிய எலெக்ட்ரிக் தாழ் தள பேருந்துகளின் சேவையை பீஹார் மாநில அரசு தொடங்கியுள்ளது. பீஹார் மாநில முதல் அமைச்சர் நிதிஷ் குமார், இந்த புதிய எலெக்ட்ரிக் பேருந்துகளின் சேவையை கடந்த திங்கள் கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து நிதிஷ் குமார் கூறுகையில், ''பாட்னா நகரில் நாங்கள் ஏற்கனவே எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. அத்துடன் கார்பன் உமிழ்வு இல்லாமல், அவை சுற்றுச்சூழலுக்கு நட்பாகவும் உள்ளன. எனவே சாமானிய மக்களுக்கும் பயன்படும் வகையில் எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்வது என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்தோம்.

இதன்படி தற்போது 12 புதிய எலெக்ட்ரிக் பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது'' என்றார். பாட்னா-ராஜ்கிர் வழித்தடத்தில் 2 எலெக்ட்ரிக் பேருந்துகளும், பாட்னா-முஸாஃபர்பூர் வழித்தடத்தில் 2 எலெக்ட்ரிக் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. எஞ்சிய 8 எலெக்ட்ரிக் பேருந்துகளும் பாட்னாவின் வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும்.

இதற்கிடையே எலெக்ட்ரிக் பேருந்துகள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்ட பிறகு, பீஹார் சட்டசபை வளாகத்தில் ஒரு பேருந்து எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. சில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை கீழே இறக்கி விட்ட பிறகு, சட்டசபை ரவுண்டானாவில் அந்த பேருந்தின் ஓட்டுனர் யு-டர்ன் எடுக்க முயன்றார். அப்போது பேருந்து எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.

அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பான பகுதி என்பதால், இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இது சிறிய விபத்துதான். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதற்கிடையே பீஹார் மாநிலமும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் வேகமாக செயல்பட தொடங்கியுள்ளது.

காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காகவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், மத்திய அரசும், டெல்லி, குஜராத், கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் போன்ற பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம், சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விஷயத்தில் டெல்லி மாநில அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது, சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டையும் டெல்லி அரசு தற்போது ஊக்குவித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னர், புதிய எலெக்ட்ரிக் பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.