கொஞ்சம் நாள் முன்னாடிதான் விற்பனைக்கு வந்துச்சு... Hyundai Alcazar காரை வாங்கிய பிரபல பாஜக அமைச்சர்!

பாஜக கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல் பிரபலம் விற்பனைக்கு வந்து சில மாதங்களே ஆன Hyundai Alcazar எஸ்யூவி காரை வாங்கியிருக்கின்றார். இந்த காரின் விலை மற்றும் பிற முக்கிய விபரங்களை இப்பதிவில் காணலாம்.

கொஞ்சம் நாள் முன்னாடிதான் விற்பனைக்கு வந்துச்சு... Hyundai Alcazar காரை வாங்கிய பிரபல பாஜக அமைச்சர்!

Hyundai நிறுவனத்தின் புதுமுக கார் மாடலாக Alcazar எஸ்யூவி ரக வாகனம் இருக்கின்றது. இந்த கார் இந்திய சந்தையில் ஆறு இருக்கைகள் அல்லது ஏழு இருக்கைகள் வசதியுடன் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார் மாடலான Creta-வின் பெரிய சகோதரனாக இக்கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

கொஞ்சம் நாள் முன்னாடிதான் விற்பனைக்கு வந்துச்சு... Hyundai Alcazar காரை வாங்கிய பிரபல பாஜக அமைச்சர்!

இருப்பினும், க்ரெட்டாவைக் காட்டிலும் பன் மடங்கு சிறப்புமிக்க கார் மாடலாக அல்கஸார் காட்சியளிக்கின்றது. இக்காரையே உபி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் வாங்கியிருக்கின்றார். பாஜக கட்சியைச் சேர்ந்த சித்தார்த் நாத் சிங் இவரே புத்தம் புதிய அல்கஸார் கார் வாங்கியவர் ஆவார். அவர் ஸ்டாரி நைட் எனும் பெயிண்ட் ஸ்கீமில் கிடைக்கும் அல்கஸாரை வாங்கியிருக்கின்றார்.

கொஞ்சம் நாள் முன்னாடிதான் விற்பனைக்கு வந்துச்சு... Hyundai Alcazar காரை வாங்கிய பிரபல பாஜக அமைச்சர்!

ஹூண்டாய் நிறுவனத்தின் இரு பிரபல கார் மாடலாக க்ரெட்டா மற்றும் டக்சன் ஆகியவை இருக்கின்றன. இவை இரண்டிற்கும் இடையிலேயே புதிய அல்கஸார் அமர்ந்திருக்கின்றது. ஆகையால், அதிக பிரீமியம் தரம் வசதிக் கொண்ட வாகனமாக இது காட்சியளிக்கின்றது. இந்த காரணத்திற்காகவே உபி அரசியல் வட்டாரத்தின் முக்கிய நபர்களில் ஒருவரான சித்தார்த் நாத் வாங்கியிருக்கின்றார்.

கொஞ்சம் நாள் முன்னாடிதான் விற்பனைக்கு வந்துச்சு... Hyundai Alcazar காரை வாங்கிய பிரபல பாஜக அமைச்சர்!

இதுமட்டுமின்றி இன்னும் பல காரணங்கள் அவர் இக்காரை வங்க இருக்கின்றன. மிக முக்கியமாக காரின் பிரமாண்ட உருவம் மற்றும் அதிகப்படியான சிறப்பு வசதிகள் கொண்ட காராக அல்கஸார் இருக்கின்றது. அவை என்ன என்பதைக் கீழே காணலாம், வாங்க.

கொஞ்சம் நாள் முன்னாடிதான் விற்பனைக்கு வந்துச்சு... Hyundai Alcazar காரை வாங்கிய பிரபல பாஜக அமைச்சர்!

ஆம் உருவத்தில் மிக பிரமாண்டமாக காட்சியளிக்கும் அல்கஸார் அதிக பிரீமியம் மற்றும் சொகுசு வசதிகளைக் கொண்ட வாகனமாக காட்சியளிக்கின்றது. இது இந்தியாவில் ரூ. 16.30 லட்சம் தொடங்கி ரூ. 20.14 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இக்கார் மஹிந்திராவின் எக்ஸ்யூவி 700 மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் டாடா சஃபாரி ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது.

Image Courtesy: Learn To Drive

எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்

ஹூண்டாய் நிறுவனம் அல்கஸார் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பிரேடட் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் என இரு விதமான மோட்டார் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 159 பிஎஸ் மற்றும் 191 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

கொஞ்சம் நாள் முன்னாடிதான் விற்பனைக்கு வந்துச்சு... Hyundai Alcazar காரை வாங்கிய பிரபல பாஜக அமைச்சர்!

இதன் டீசல் எஞ்ஜின் 115 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இவையிரண்டிலும் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு தானியங்கி டார்க் கன்வெர்டர் தேர்வு வழங்கப்படுகின்றது. இத்துடன், கூடுதல் சிறப்பு வசதியாக இக்காரில் மூன்று விதமான டிரைவிங் மோட்கள் வழங்கப்படுகின்றன.

கொஞ்சம் நாள் முன்னாடிதான் விற்பனைக்கு வந்துச்சு... Hyundai Alcazar காரை வாங்கிய பிரபல பாஜக அமைச்சர்!

ஆனால், இவை தானியங்கி கியர்பாக்ஸ் வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகின்றது. ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று விதமான தேர்வுகளிலேயே அந்த மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பனி, மணல் மற்றும் மண் ஆகிய மூன்று விதமான டிராக்சன் கன்ட்ரோலும் வழங்கப்படுகின்றன.

கொஞ்சம் நாள் முன்னாடிதான் விற்பனைக்கு வந்துச்சு... Hyundai Alcazar காரை வாங்கிய பிரபல பாஜக அமைச்சர்!

அம்சங்கள்:

அல்கஸார் பேஸ் வேரியண்டிலேயே பன்முக அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பகல்நேர மின் விளக்குகள்,பனோரமிக் சன்ரூஃப், ஏழு அங்குல சூப்பர் விஷன் க்ளஸ்டர், ஆம்பிசியன்ட் லைட், ஸ்மார்ட் கீ, எல்இடி வால் பகுதி மின் விளக்குகள், சாவியில்லா நுழைவு வசதி, க்ரூஸ் கன்ட்ரோல், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், ரிமோட் எஞ்ஜின் ஸ்டார்ட், ஒயர்லெஸ் சார்ஜர் மற்றும் லெதர் விராப்பட் ஸ்டியரிங் வீல் மற்றும் கியர் க்நாப் உள்ளிட்டவை இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

கொஞ்சம் நாள் முன்னாடிதான் விற்பனைக்கு வந்துச்சு... Hyundai Alcazar காரை வாங்கிய பிரபல பாஜக அமைச்சர்!

இதுமட்டுமின்றி பாதுகாப்பிற்கான அம்சங்கள் பலவும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், ரியர் டிஸ்க் பிரேக், ட்யூவல் ஏர் பேக்ஸ், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஸ்டேபிளிட்டி மேனேஜ்மென்ட், தானியங்கி ஹெட்லேம்ப், எல்இடி பனி மின் விளக்கு, டயர் பிரஷ்ஷர் மானிட்டர், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரோக்ரோமிக் மிர்ரர், பின் பக்கத்தில் டிஃபாக்கர் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கொஞ்சம் நாள் முன்னாடிதான் விற்பனைக்கு வந்துச்சு... Hyundai Alcazar காரை வாங்கிய பிரபல பாஜக அமைச்சர்!

தொடர்ந்து, இதன் ஹை என்ட் வேரியண்டுகளில் முன் பக்க பார்க்கிங் சென்சார்கள், சைடு மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் கர்டைன்கள், சரவுண்ட் வியூவ் மானிட்டர், பிளைன்ட் ஸ்பாட் வியூவ் மானிட்டர், போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 10.25 இன்சிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் போன்ற உயர் ரக அம்சங்கள் அதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
Bjp minister sidharth nath singh buys hyundai alcazar suv
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X