தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்!! ரேஸ் ட்ராக்கில் சோதனை!

புதிய 2 சீரிஸ் கூபே காரின் படங்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்!! ரேஸ் ட்ராக்கில் சோதனை!

பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள படங்களின் மூலம் இந்த புதிய 2 சிரீஸ் கூபே கார் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் இருப்பதை அறிய முடிகிறது.

தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்!! ரேஸ் ட்ராக்கில் சோதனை!

முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் இந்த கூபே கார் ரேஸ் ட்ராக்கில் அதன் ட்ரைவிங் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புகளை ட்யூனிங் செய்யும் நோக்கத்தில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்!! ரேஸ் ட்ராக்கில் சோதனை!

பின்சக்கர ட்ரைவ் செட்அப் உடன் தயாரிக்கப்படும் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபேவில் ஆற்றல்மிக்க இன்-லைன் 6-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படவுள்ளது. இந்த கூபே காரின் தயாரிப்பு பணிகளை பிஎம்டபிள்யூ நிறுவனம் நடப்பு 2021ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்!! ரேஸ் ட்ராக்கில் சோதனை!

தற்போது வெளியிடப்பட்டுள்ள படங்களில் கார் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளதால் காரில் வழங்கப்படவுள்ள டிசைன்களை பார்க்க முடியவில்லை. புதிய 2 சீரிஸ் கூபேவின் இந்த சோதனை மாதிரியில் இரு கதவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்!! ரேஸ் ட்ராக்கில் சோதனை!

இந்த யுக்தி அப்படியே தொடரப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கூபே காரின் இந்த சோதனை பிரபலமான நர்பர்கிங் ரேஸ் ட்ராக்கில் நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின் மூலம் காரின் சஸ்பென்ஷன் மட்டுமின்றி சேசிஸ், டேம்பிங், ஸ்டேரிங் மற்றும் ப்ரேக்கிங் அமைப்பையும் சோதனை குழு சோதித்து பார்த்திருக்கும்.

தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்!! ரேஸ் ட்ராக்கில் சோதனை!

இந்த சோதனைகளின் மூலம் அனைத்து விதமான சூழ்நிலையிலும் காரின் கட்டுப்படுத்தக்கூடிய ஹேண்ட்லிங், மூலைவிட்ட இயக்கவியல், அனைத்து வானிலை & சாலை நிலைமைகளிலும் உகந்த இழுவை மற்றும் சீரான பயணத்துடன் என்ஜினின் செயல்திறன் பண்புகள் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதை பிஎம்டபிள்யூவின் சோதனை பொறியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்!! ரேஸ் ட்ராக்கில் சோதனை!

புதிய 2 சீரிஸ் கூபே கார் அதன் எம் வெர்சனையும் (எம்240ஐ எக்ஸ்ட்ரைவ்) பெறவுள்ளது. இந்த கூபே காரில் இன்-லைன் 6-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது பிஎம்டபிள்யூவின் இரட்டை பவர் டர்போ தொழிற்நுட்பத்துடன் ஆற்றலை காருக்கு வழங்கும்.

தயாரிப்பு பணிகளில் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார்!! ரேஸ் ட்ராக்கில் சோதனை!

இந்த அமைப்பு அதிகப்பட்சமாக வெளிப்படுத்தவுள்ள 374 எச்பி பவர், 8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஸ்போர்ட் ட்ரான்ஸ்மிஷனின் உதவியுடன் காரின் அனைத்து சக்கரங்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதுவே இதன் எம் வெர்சனில் என்ஜினின் ஆற்றல் இண்டெலிஜண்ட் பிஎம்டபிள்யூ எக்ஸ்ட்ரைவ் அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டத்தின் மூலம் காருக்கு வழங்கப்படும்.

Most Read Articles
English summary
BMW Teases The New 2 Series Coupe. All Details In Tamil.
Story first published: Tuesday, May 18, 2021, 22:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X