புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி வெளியானது!

அதிக சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய அறிமுக தேதி வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி வெளியானது!

நடுத்தர வகை சொகுசு செடான் கார்களில் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டி அதிகரித்துள்ளதையடுத்து, இந்த காருக்கு புதுப்பொலிவு கொடுத்து அதிக சிறப்பம்சங்களுடன் பிஎம்டபிள்யூ மேம்படுத்தி உள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி வெளியானது!

இந்த புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த ஆண்டு மே மாதம் உலக அளவில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், வரும் 24ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி வெளியானது!

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், சற்றே பெரிதாக்கப்பட்ட முன்புற க்ரில் அமைப்பு, மறுவடிவமைப்பு பெற்ற பம்பர்கள் மற்றும் மெல்லிய எல்இடி பகல்நேர விளக்குகளுடன் மாற்றம் கண்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி வெளியானது!

இந்த காரின் உட்புறத்தில் பெரிய அளவிலான மாறுதல்கள் இருக்காது. 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ரிமோட் முறையில் அப்டேட் பெறும் வசதி, அதிக வசதிகளுடன் கூடிய ஐ-டிரைவ் செயலி ஆகியவற்றுடன் வருகிறது.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி வெளியானது!

இந்த காரில் பார்க்கிங் மற்றும் ரிவர்ஸ் அசிஸ்ட், லேன் அசிஸ்ட், லேன் சேஞ்சிங் அசிஸ்ட் போன்ற தொழில்நுட்பங்களும் இடம்பெற இருக்கின்றன. இதனால், அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்பட்டு இருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி வெளியானது!

புதிய பிஎம்டபிள்யூ காரில் ஒரு பெட்ரோல் எஞ்சின் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின் தேர்வுகள் தொடர்ந்து தக்க வைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இதன் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 252 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 190 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி வெளியானது!

அடுத்து இதன் விலை செயல்திறன்மிக்க 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் 265 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மூன்று எஞ்சின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட உள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி வெளியானது!

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் ரூ.56 லட்சம் முதல் ரூ.70 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ், ஆடி ஏ6 மற்றும் வால்வோ எஸ்90 கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
BMW is all set to launch the facelifted 5 Series model in India on June 24, 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X