புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530ஐ எம் ஸ்போர்ட் ‘கார்பன் எடிசன்’ அறிமுகம்!! விலை ரூ.66.30 லட்சம்

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530ஐ எம் ஸ்போர்ட் கார்பன் எடிசன் கார் இந்திய சந்தையில் ரூ.66.30 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை பற்றிய விரிவான விபரங்களை இனி தொடர்ந்து பார்ப்போம்.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530ஐ எம் ஸ்போர்ட் ‘கார்பன் எடிசன்’ அறிமுகம்!! விலை ரூ.66.30 லட்சம்

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் நடுத்தர-அளவு செடான் மாடலில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன், இந்த ஜெர்மன் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் இந்திய தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது. ஸ்டாண்டர்ட் 5 சீரிஸ் மாடலில் இருந்து வேறுப்படுவதற்காக கார்பன் ஃபைபர் பாகங்கள் வெளிப்புறத்தில் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530ஐ எம் ஸ்போர்ட் ‘கார்பன் எடிசன்’ அறிமுகம்!! விலை ரூ.66.30 லட்சம்

இதன்படி கிட்னி வடிவிலான க்ரில் மற்றும் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற பக்கவாட்டு கண்ணாடிகளில் கார்பன் ஃபைபர் தொடுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய கார்பன் எடிசன் காரின் 18-இன்ச் சக்கரங்கள் ஜெட் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் பின்பக்க ஸ்பாய்லரும் கார்பன் ஃபைபர்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530ஐ எம் ஸ்போர்ட் ‘கார்பன் எடிசன்’ அறிமுகம்!! விலை ரூ.66.30 லட்சம்

விரும்பும் வாடிக்கையாளர்கள் பின்பக்க ஸ்பாய்லரை காரின் அல்பைன் வெள்ளை நிறத்திலும் பெறலாம் என்கிறது தயாரிப்பு நிறுவனம். புதிய 5 சீரிஸ் 530ஐ எம் ஸ்போர்ட் கார்பன் எடிசனின் உட்புற கேபின் ஆனது காக்னாக் கருப்பு நிறத்தில் பளிச்சிடும் தையல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530ஐ எம் ஸ்போர்ட் ‘கார்பன் எடிசன்’ அறிமுகம்!! விலை ரூ.66.30 லட்சம்

தொழிற்நுட்ப வசதிகளை பொறுத்தவரையில், பல-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பவர் இருக்கைகள், HUD உடன் முழு டிஜிட்டல் திரை மற்றும் 360-கோண கேமிரா உள்பட ஏகப்பட்டவை வழங்கப்பட்டுள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530ஐ எம் ஸ்போர்ட் ‘கார்பன் எடிசன்’ அறிமுகம்!! விலை ரூ.66.30 லட்சம்

காரின் பெயரில் உள்ள 530ஐ என்பதில், ஐ என்பது இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த காரில் வழங்கப்பட்டுள்ள 2.0 லிட்டர் இரட்டை-டர்போ பெட்ரோல் என்ஜினை குறிக்கிறது. அதிகப்பட்சமாக 248 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530ஐ எம் ஸ்போர்ட் ‘கார்பன் எடிசன்’ அறிமுகம்!! விலை ரூ.66.30 லட்சம்

புதிய 530இ எம் ஸ்போர்ட் ‘கார்பன் எடிசன்'-ஐ வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, பிஎம்டபிள்யூ இந்தியா நிதி சேவைகள் பிரிவு நான்கு வருடங்களுக்கு பிறகு உறுதியான திரும்ப பெறுதல் மற்றும் நெகிழ்வான இறுதி-கால விருப்பங்களுடன் ரூ.89,999 என்ற அனைத்தையும் உள்ளடக்கிய மாதாந்திர விலையினை வழங்கவுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530ஐ எம் ஸ்போர்ட் ‘கார்பன் எடிசன்’ அறிமுகம்!! விலை ரூ.66.30 லட்சம்

மேலும், தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் நெகிழ்வான நிதி தீர்வுகளை தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப வடிவமைத்து கொள்ள முடியுமாம். 5-சீரிஸ் செடான் மாடலின் வரிசையில் இந்த புதிய கார்பன் எடிசனை அறிமுகப்படுத்தி இருப்பது குறித்து பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பவாஹ் பேசுகையில், "பிம்டபிள்யூ 5 சீரிஸ் இந்தியாவில் மிகவும் வெற்றிக்கரமான பிரீமியம் எக்ஸிகியூட்டிவ் செடான்களில் ஒன்றாகும்.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530ஐ எம் ஸ்போர்ட் ‘கார்பன் எடிசன்’ அறிமுகம்!! விலை ரூ.66.30 லட்சம்

இந்த எக்காலத்திற்குமான இயந்திரம் அதன் சக்தி மற்றும் விளையாட்டின் சம அளவுகளில் எப்போதும் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. இப்போது புதிய ‘கார்பன் எடிசன்' மூலம், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் அதன் பிரிவில் மீண்டும் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. காரின் வெளிப்புறத்தில் வழங்கப்பட்டுள்ள கார்பன் ஃபைபர் கூறுகள் ஓட்டுனர் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் அமைந்துள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530ஐ எம் ஸ்போர்ட் ‘கார்பன் எடிசன்’ அறிமுகம்!! விலை ரூ.66.30 லட்சம்

இந்த புதிய பிஎம்டபிள்யூ 530ஐ எம் ஸ்போர்ட் எடிசன் டைனாமிக் பெட்ரோல் என்ஜின் மற்றும் புதுமையான தொழிற்நுட்ப அம்சங்களுடன் ஒரு மறக்க முடியாத பயண அனுபவத்தை உறுதிப்படுத்துகிறது" என்றார். இந்திய சந்தையில் வழக்கமான பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் காரின் விலைகள் ரூ.62.90 லட்சத்தில் இருந்து ரூ.72.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையில் உள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530ஐ எம் ஸ்போர்ட் ‘கார்பன் எடிசன்’ அறிமுகம்!! விலை ரூ.66.30 லட்சம்

530ஐ எம் ஸ்போர்ட் வேரியண்ட் மட்டுமின்றி, 520டி லக்சரி லைன் & 530டி எம் ஸ்போர்ட் என்கிற டீசல் வேரியண்ட்களிலும் இந்த பிஎம்டபிள்யூ செடான் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டீசல் வேரியண்ட்களில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் மற்றும் 3.0 லிட்டர், 6-சிலிண்டர் டீசல் (530டி மாடல்) என்கிற என்ஜின்கள் பொருத்தப்படுகின்றன.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530ஐ எம் ஸ்போர்ட் ‘கார்பன் எடிசன்’ அறிமுகம்!! விலை ரூ.66.30 லட்சம்

இதில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 188 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனையும், 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் 261 பிஎச்பி மற்றும் 620 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இவற்றுடனும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தான் வழங்கப்படுகிறது. விற்பனையில் இந்த பிஎம்டபிள்யூ செடான் காரின் டீசல் மாடல்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் முக்கியமான போட்டியாக விளங்குகிறது.

Most Read Articles
English summary
The new BMW 5 Series ‘Carbon Edition’ now in India.
Story first published: Thursday, October 21, 2021, 23:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X