BMW இந்தியாவில் நுழைந்து 14ஆண்டுகள் ஆயிருச்சாம்! இத்தன வருஷத்துல எத்தன வாகனங்களை விற்பனை செஞ்சிருக்காங்க?

பிஎம்டபிள்யூ (BMW) குழுமம் இந்தியாவில் கால் தடம் பதித்து 14 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளில் எத்தனை வாகனங்களை இந்திய சந்தையில் நிறுவனம் விற்பனைச் செய்திருக்கின்றது என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

BMW இந்தியாவில் நுழைந்து 14ஆண்டுகள் ஆயிருச்சாம்! இத்தன வருஷத்துல எத்தன வாகனங்களை விற்பனை செஞ்சிருக்காங்க?

பிரபல சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ, இந்தியாவில் வருகை தந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளில் சொகுசு வாகன உற்பத்தியாளர் எத்தனை எண்ணிக்கை வாகனங்களை நாட்டில் விற்பனைச் செய்திருக்கின்றது என்பது பற்றிய தகவலே தற்போது வெளியாகியுள்ளது.

BMW இந்தியாவில் நுழைந்து 14ஆண்டுகள் ஆயிருச்சாம்! இத்தன வருஷத்துல எத்தன வாகனங்களை விற்பனை செஞ்சிருக்காங்க?

நிறுவனம், இத்தனை ஆண்டுகளில் இதுவரை ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் யூனிட் வரையிலான சொகுசு வாகனங்களை மட்டுமே விற்பனைச் செய்திருக்கின்றது. இது இந்தியர்கள் மத்தியில் சொகுசு வாகனங்கள் மீதான மோகம் அதிகரித்து வருவதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இது மற்ற உலக நாட்டைக் காட்டிலும் குறைவு என்றாலும், இந்திய வாகன சந்தையைப் பொருத்தவரை இந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

BMW இந்தியாவில் நுழைந்து 14ஆண்டுகள் ஆயிருச்சாம்! இத்தன வருஷத்துல எத்தன வாகனங்களை விற்பனை செஞ்சிருக்காங்க?

அதேவேலையில், இவ்வளவு குறைவான எண்ணிக்கையில்தான் பிஎம்டபிள்யூ நிறுவனம் இத்தனை ஆண்டுகளில் வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றதா என கேள்வியை எழுப்பவும் செய்திருக்கின்றது. தொடர்ந்து, நிறுவனம் கடந்த ஆண்டைக் காட்டிலும், நடப்பு 2021 ஆண்டில் அதிகம் சொகுசு கார்களை விற்பனைச் செய்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

BMW இந்தியாவில் நுழைந்து 14ஆண்டுகள் ஆயிருச்சாம்! இத்தன வருஷத்துல எத்தன வாகனங்களை விற்பனை செஞ்சிருக்காங்க?

2020 வருடத்தைக் காட்டிலும் நிறுவனம் 70 சதவீதத்திற்கும் அதிகமான சொகுசு கார்களை நடப்பாண்டில் விற்பனைச் செய்திருக்கின்றது. 9,602 யூனிட் சொகுசு வாகனங்களை நிறுவனம் விற்பனைச் செய்திருக்கின்றது. நடப்பாண்டில் ஒன்பது மாதங்கள் மட்டுமே முடிவடைந்திருக்கின்ற நிலையில் இத்தகைய அதிகபட்ச விற்பனை எண்ணிக்கையை பிஎம்டபிள்யூ பெற்றிருக்கின்றது. ஆனால், கடந்த ஆண்டு முழுவதும் நிறுவனம் 8,500 யூனிட் வாகனத்தை மட்டுமே விற்பனைச் செய்திருக்கின்றது.

BMW இந்தியாவில் நுழைந்து 14ஆண்டுகள் ஆயிருச்சாம்! இத்தன வருஷத்துல எத்தன வாகனங்களை விற்பனை செஞ்சிருக்காங்க?

இந்த எண்ணிக்கையை முறியடிக்கும் வகையில் 9 மாதங்களில் 9,602 சொகுசு வாகனங்களை நிறுவனம் விற்பனை செய்திருக்கின்றது. தனது மூன்று விதமான பிராண்டுகளின் கீழாகவே இத்தனை எண்ணிக்கை வாகனங்களை நிறுவனம் விற்பனைச் செய்திருக்கின்றது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் இக்கட்டான சூழ்நிலை மற்றும் வாகனங்களுக்கான செமி-கன்டக்டர் பற்றாக்குறை என பல அவல நிலை தலை விரித்தாடின.

BMW இந்தியாவில் நுழைந்து 14ஆண்டுகள் ஆயிருச்சாம்! இத்தன வருஷத்துல எத்தன வாகனங்களை விற்பனை செஞ்சிருக்காங்க?

இந்த நிலையிலும், கடந்த ஆண்டு சொகுசு கார் பிரிவில் நல்ல விற்பனை வளர்ச்சியை பெற்றிருப்பதை பிஎம்டபிள்யூ உறுதி செய்துள்ளது. நிறுவனம் பிஎம்டபிள்யூ, மினி மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டாராட் ஆகிய பிராண்டுகளில் அதன் பிரீமியம் தர மற்றும் சொகுசு வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது.

BMW இந்தியாவில் நுழைந்து 14ஆண்டுகள் ஆயிருச்சாம்! இத்தன வருஷத்துல எத்தன வாகனங்களை விற்பனை செஞ்சிருக்காங்க?

இதில் பிஎம்டபிள்யூ பிராண்ட் மற்றும் தனியாக நின்று மூன்றாம் காலாண்டில் 2,442 யூனிட் வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது. இது இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த நல்ல தரமான விற்பனை வரவேற்பு ஆகும். இது கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டைக் காட்டிலும் 93.3 சதவீதம் அதிகம் விற்பனை என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதேபோல் மினி நிறுவனம் 60.3 சதவீதம் அதிக விற்பனையைப் பெற்றிருக்கின்றது.

BMW இந்தியாவில் நுழைந்து 14ஆண்டுகள் ஆயிருச்சாம்! இத்தன வருஷத்துல எத்தன வாகனங்களை விற்பனை செஞ்சிருக்காங்க?

ஒட்டுமொத்தமாக 2021 ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 194 யூனிட் வரை மினி பிராண்ட் தயாரிப்புகள் விற்பனையாகி இருக்கின்றன. இவ்வாறு கடந்த காலங்களைக் காட்டிலும் லேசான விற்பனை அதிகரிப்பை தொடர்ச்சியாகப் பெற்று தற்போது நாட்டில் ஒரு லட்சம் யூனிட் விற்பனை என்ற வரலாற்று பதிவை பிஎம்டபிள்யூ இந்தியாவில் செய்திருக்கின்றது.

BMW இந்தியாவில் நுழைந்து 14ஆண்டுகள் ஆயிருச்சாம்! இத்தன வருஷத்துல எத்தன வாகனங்களை விற்பனை செஞ்சிருக்காங்க?

பிஎம்டபிள்யூ நிறுவனம் அண்மையில் புதிய எஎக்ஸ்ட்ரைவ்30டி ஸ்போர்ட் எக்ஸ்-ப்ளஸ் மற்றும் எக்ஸ்ட்ரைவ்40ஐ ஸ்போர்ட் எக்ஸ்-ப்ளஸ் ஆகிய இரு வேரியண்டுகளை இந்திய சந்தையில் அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதில் எக்ஸ்ட்ரைவ்30டி ஸ்போர்ட் எக்ஸ்-ப்ளஸ் வேரியண்டிற்கு ரூ. 79,50,000 என்ற விலையையும், எக்ஸ்ட்ரைவ்40ஐ ஸ்போர்ட் எக்ஸ்-ப்ளஸ் வேரியண்டிற்கு ரூ. 77,90,000 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BMW இந்தியாவில் நுழைந்து 14ஆண்டுகள் ஆயிருச்சாம்! இத்தன வருஷத்துல எத்தன வாகனங்களை விற்பனை செஞ்சிருக்காங்க?

இதுமாதிரியான தரமான மற்றும் அதிக சொகுசு வசதிகள் கொண்ட வாகனங்களின் அறிமுகத்தின் வாயிலாகவே பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டும் விதமாக நிறுவனம் இன்னும் பல புதிய தயாரிப்புகளை களமிறக்குவதில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

BMW இந்தியாவில் நுழைந்து 14ஆண்டுகள் ஆயிருச்சாம்! இத்தன வருஷத்துல எத்தன வாகனங்களை விற்பனை செஞ்சிருக்காங்க?

Source:moneycontrol

அந்தவகையில், மிக விரைவில் சி400ஜிடி எனும் அதிக பிரீமியம் தரம் கொண்ட மேக்ஸி ரக ஸ்கூட்டரை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்தியாவில் மேக்ஸி ரக ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இதனடிப்படையிலேயே சி400 ஜிடி மேக்ஸி ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய நிறுவனம் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. ரைடு-பை-ஒயர் தொழில்நுட்பம், சாவியில்லாமல் ஆன் செய்யும் வசதி, ஹீட்டட் க்ரிப்கள் மற்றும் இருக்கை, ஆட்டோ சவுண்ட் காலிபரேஷன் (Auto Sound Calibration) மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் என எக்கசக்க பிரீமியம் தர வசதிகளுடன் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருக்கின்றது.

Most Read Articles
English summary
Bmw group sales crosses 1 lakh units since entry in india
Story first published: Wednesday, October 6, 2021, 20:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X