Just In
- 59 min ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 8 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 10 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 13 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொரோனாவிற்கு மத்தியிலும் BMW கார்களை வாங்கி குவித்துள்ள இந்தியர்கள்!! 2020ல் எத்தனை கார் விற்பனையாகியுள்ளதா?!
கடந்த 2020ல் பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியாவில் டெலிவிரி செய்த கார்களின் எண்ணிக்கை வெளிவந்துள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ க்ரூப் கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 6,604 கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்துள்ளது. இதில் 6,092 பிஎம்டபிள்யூ கார்களும், 512 மினி கார்களும் அடங்கும்.

மோட்டார்சைக்கிள்களை பொறுத்தவரையில், பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் பிராண்ட் 2020ல் 2,563 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இதுகுறித்து பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியாவின் தலைவர் விக்ரம் பவா கருத்து தெரிவிக்கையில், "பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா புதிய சவால்கள் நிறைந்த கடினமான சூழலில் தனது எதிர்தெறிதல் மற்றும் உறுதியை வெளிப்படுத்தியுள்ளது.

எங்கள் பிராண்டுகளின் வலிமை, ஊழியர்கள் மற்றும் டீலர் கூட்டாளர்களின் அர்ப்பணிப்புடன் நன்கு கட்டமைக்கப்பட்ட செயல்பாடுகளே ஆகும். இதுவே எங்கள் வணிகத்தை விரைவாக மாற்றியமைத்து செயல்படச் செய்தது. பெரிய பொருளாதார குறிகாட்டிகள் மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை மேம்படுத்துவதன் மூலம், பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா குறிப்பிடத்தக்க செயல்திறன் மற்றும் வீரியத்துடன் வேகத்தை அதிகரித்துள்ளது.

நாங்கள் மிகவும் கடினமான ஆண்டின் இறுதியில் வலுவான முடிவுகளைப் பதிவுசெய்தோம், மேலும் இந்திய சொகுசு கார் சந்தையில் எங்களது பிரிவு பங்கை கணிசமாக செலுத்தினோம். இந்த புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் நாங்கள் 2021ஐ நோக்கி வருகிறோம்" என கூறினார்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1, பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 உள்ளிட்ட உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் விளையாட்டு செயல்பாட்டு வாகனம் (எஸ்.ஏ.வி) வரிசையில் பிஎம்டபிள்யூ இந்தியா 50% க்கும் அதிகமான தேவையை கண்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரும் அனைத்து பிராந்தியங்களிலும் வியக்க வைக்கும் தேவையை பெற்றுள்ளது. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஆகியவை செடான் பிரிவில் வலுவான பங்களிப்பாளர்களாக தங்கள் பாரம்பரிய பங்கைத் தொடர்ந்தன.

கடினமான தொழில் சூழ்நிலை இருந்தபோதிலும், மினி இந்தியா பிரீமியம் கார் பிரிவில் தனது சந்தைப் பங்கை வெற்றிகரமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த பிராண்ட் ஆண்டின் கடைசி காலாண்டில் ஆச்சிரியப்படுத்தும் வகையிலான செயல்திறன் மற்றும் வளர்ச்சியை கண்டுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மினி கண்ட்ரீமேன் விற்பனையில் 40% க்கும் அதிகமான பங்கை ஏற்றுள்ளது. மினி பிராண்டின் அடையாளமான மினி ஹாட்ச் மற்றும் பிரபலமான மினி கன்வெர்டபிள் ஆகியவை ஒவ்வொன்றும் மொத்த விற்பனையில் 23% பெற்றுள்ளன.

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் இந்தியா அனைத்து தடைகளையும் தாண்டி, தற்போதைய போக்குகளுக்கு எதிராக 2020ஆம் ஆண்டில் நம்பவே முடியாத அளவிற்கு வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதற்கு காரணம் புதிய அறிமுகங்களான பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் எனலாம்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேர்ந்து, மொத்த ஆண்டு விற்பனையில் 80%க்கும் அதிகமான பங்கை பெற்றுள்ளன. பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜி.எஸ் / ஜி.எஸ்.ஏ, பிஎம்டபிள்யூ எஃப் 750/850 ஜி.எஸ் மற்றும் பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்.ஆர் ஆகியவையும் கணிசமான விற்பனையை பிஎம்டபிள்யூ மோட்டோராட் பிரிவுக்கு பெற்று கொடுத்துள்ளன.