பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் மாடலாக ஐஎக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காரின் விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் வெளிநாடுகளில் இரண்டு விதமான வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்தியாவில் ஐடிரைவ் 40 என்ற வேரியண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் சிறப்பு அம்சங்களையும், தோற்றத்தையும் இந்த கார் பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் ஐடிரைவ் 40 வேரியண்ட்டில் 76.6kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனுடன் இரண்டு மின் மோட்டார்களுடன் இந்த கார் இயங்கும். இந்த பேட்டரி தொகுப்பும், மின் மோட்டார்கள் மூலமாக இந்த கார் அதிகபட்சமாக 326 எச்பி பவரையும், 630 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 6.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும். இந்த காரில் இரண்டு ஆக்சில்களிலும் தலா ஒரு மின் மோட்டாருடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வந்துள்ளது. வெளிநாடுகளில் ஐடிரைவ் 50 என்ற அதிசெயல்திறன் மிக்க மற்றொரு வேரியண்ட்டிலும் விற்பனை செய்யப்படுகிறது.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் ஐடிரைவ் 40 வேரியண்டில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 425 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். சாதாரண 2.3kW சிங்கிள் ஃபேஸ் சார்ஜர் மூலமாக பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 36 மணிநேரமும், 11kW சார்ஜர் மூலமாக முழுமையாக சார்ஜ் ஏற்றுவதற்கு 11 மணிநேரமும் பிடிக்கும்.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காருக்கு 50kW ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும்போது பேட்டரியை 73 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் என்ற அளவுக்கு பேட்டரியை சார்ஜ் ஏற்றிவிட முடியும். இதே அளவை 150kW சார்ஜர் பயன்படுத்தினால் 31 நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிவிடலாம்.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த 2018ம் ஆண்டு பொது பார்வைக்கு வெளியிடப்பட்ட ஐநெக்ஸ்ட் கான்செப்ட் அடிப்படையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முகப்பு க்ரில் அமைப்பு பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பாரம்பரியத்தை பரைசாற்றுவது போல இரட்டை சிறுநீரக வடிவமைப்பு சாயல் இருந்தாலும், புதுமையான தோற்றத்திற்கு மாறி இருக்கிறது. அதற்கு இருபுறமும் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், வலிமையான பம்பர் அமைப்புடன் எஸ்யூவி கார்களுக்கு உரிய முரட்டத்தனத்தை காட்டுகிறது.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

கவர்ச்சிகரமான அலாய் வீல்கள், க்ராஸ்ஓவர் வடிவமைப்பை காட்டும் கூரை அமைப்பு, புடைப்பான பின்புற அமைப்புடன் வசீகரிக்கிறது. போட்டியாளர்களிடம் இருந்து இதன் டிசைன் தனித்துவம் பெறுகிறது. மேலும், பாதுகாப்பான ஓட்டுதல் முறையை வழங்கும் விதத்தில் க்ரில் அமைப்பில் ரேடார், சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார் பிஎம்டபிள்யூ நிறுவனத்திந் CLAR என்ற கட்டமைப்புக் கொள்கையின் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டமைப்பின் கீழ் கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினிய பாகங்கள் மூலமாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் பெரும்பான்மையான பாகங்களை மறுசுழற்சி செய்ய முடியும்.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில் அறுகோண வடிவிலான ஸ்டீயரிங் வீல் இடம்பெற்றிருப்பது புதுமையாக இருக்கிறது. இந்த காரில் 14.9 அங்குல திரையுடன் இன்ஃபபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முத்தாய்ப்பான விஷயங்களாக இருக்கின்றன. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் நவீனமான ஐடிரைவ் 8 சாஃப்ட்வேரில் இயங்குகிறது. ரோட்டரி கன்ட்ரோலரும் இருப்பது மிக முக்கிய அம்சமாக இருக்கிறது.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவிக்கு இணையான வடிவமைப்பை பெற்றிருந்தாலும், எக்ஸ்7 காருக்கு இணையான இடவசதியை இந்த ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. மேலும், அதிக பொத்தான்கள் இல்லாமல் உட்புற கட்டுப்பாட்டு அமைப்பு இருப்பதால் நவீன யுக மாடலாக காட்சி அளிக்கிறது. மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் இயற்கை மூலப்பொருட்களிலான அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவையும் சிறப்பு சேர்க்கின்றன.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் எலெக்ட்ரோ க்ரோமிக் பனோரமிக் சன்ரூஃப், மெமரி மற்றும் மசாஜ் வசதிகள் கொண்ட இருக்கைகள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், சர்ரவுண்ட் வியூ கேமரா, ரிவர்ஸ் அசிஸ்ட், 18 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில் ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட் வசதியுடன் இயங்கும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், லேன் சேஞ்ச் வார்னிங் சிஸ்டம், கொலிஷன் வார்னிங் சிஸ்டம் ஆகியவற்றை பெறறிருப்பதுடன் அண்மையில் யூரோ என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் ரூ.1.16 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இறக்குமதி செய்து டெலிவிரி கொடுக்கப்படும். இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி, ஆடி இ ட்ரான் மற்றும் ஜாகுவார் ஐ பேஸ் கார்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
BMW iX all-electric SUV launched in India.
Story first published: Monday, December 13, 2021, 14:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X