பிஎம்டபிள்யூ 740எல்ஐ எம் ஸ்போர்ட் தனிப்பட்ட பதிப்பு கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஷோரூம் விலை ரூ.1.42 கோடி

பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் 740எல்ஐ எம் ஸ்போர்ட் தனிப்பட்ட எடிசன் காரை ரூ.1.42 கோடியில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்த பிஎம்டபிள்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

பிஎம்டபிள்யூ 740எல்ஐ எம் ஸ்போர்ட் தனிப்பட்ட பதிப்பு கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஷோரூம் விலை ரூ.1.42 கோடி

பிஎம்டபிள்யூ பிராண்டின் பிரதான செடான் கார்கள் வரிசையாக 7-சீரிஸ் விளங்குகிறது. அத்தகைய வரிசையில் புதிய வேரியண்ட்டாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 740எல்ஐ எம் ஸ்போர்ட் தனிப்பட்ட எடிசன், ஏகப்பட்ட ஆக்ஸஸரீகளுடன் முழுவதும் தொழிற்நுட்ப அம்சங்களால் நிரப்பப்பட்ட ஸ்பெஷல் காராக கொண்டுவரப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 740எல்ஐ எம் ஸ்போர்ட் தனிப்பட்ட பதிப்பு கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஷோரூம் விலை ரூ.1.42 கோடி

இந்த லக்சரி செடான் காருக்கான முன்பதிவுகள் இந்தியா முழுவதும் துவங்கப்ப்ட்டுள்ளன. ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே 740எல்ஐ எம் ஸ்போர்ட் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த பிஎம்டபிள்யூ காரினை டான்சானைட் நீலம் மற்றும் டிராவிட் க்ரே என்ற இரு நிறத்தேர்வுகளுடன் முன்பதிவு செய்யலாம்.

பிஎம்டபிள்யூ 740எல்ஐ எம் ஸ்போர்ட் தனிப்பட்ட பதிப்பு கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஷோரூம் விலை ரூ.1.42 கோடி

கதவுகளில், ஜன்னல் லைன்களில் என காரை சுற்றிலும் க்ரோம் தொடுதல் மின்னுங்கின்றன. இதனால் பக்கா சொகுசு கார் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இந்த வகையில் முன்பக்கத்தில் க்ரோம் தொடுதல் உடன் பிஎம்டபிள்யூவின் அடையாள ‘கிட்னி' வடிவிலான க்ரில் அமைப்பு இந்த காரிலும் தொடரப்பட்டுள்ளது.

இதன் இருபக்கங்களிலும் மேட்ரிக்ஸ் தொழிற்நுட்பத்துடன், பிளவுப்பட்ட வடிவில் எல்இடி ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன. காரின் வெளிப்பக்கத்தில் மற்ற சிறப்பம்சங்களாக 20-இன்ச் அலாய் சக்கரங்கள், இரட்டை க்ரோம் எக்ஸாஸ்ட் குழாய்கள் மற்றும் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

பிஎம்டபிள்யூ 740எல்ஐ எம் ஸ்போர்ட் தனிப்பட்ட பதிப்பு கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஷோரூம் விலை ரூ.1.42 கோடி

உட்புறத்தில் புதிய 740எல்ஐ எம் ஸ்போர்ட் தனிப்பட்ட எடிசனை வாடிக்கையாளர் தங்களது விருப்பத்திற்கு மாற்றி அமைத்து கொள்ளும் வாய்ப்பை பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கியுள்ளது. இதன்படி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அல்காண்ட்ரா ஹெட்லைனர், இருக்கைகளில் தலையணை மற்றும் முதுது தலையணை குஷின் உள்ளிட்டவற்றை தனிப்பயனாக்க ஆக்ஸஸரீகளாக கூடுதல் தொகையை செலுத்தி வாடிக்கையாளர் வாங்கலாம்.

பிஎம்டபிள்யூ 740எல்ஐ எம் ஸ்போர்ட் தனிப்பட்ட பதிப்பு கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஷோரூம் விலை ரூ.1.42 கோடி

ஆனால் உண்மையில் இந்த ஆக்ஸஸரீகளுடன் தான் இந்த லக்சரி செடான் காரை வாங்க வேண்டும். ஏனெனில் இந்த ஆக்ஸஸரீகளும் சேர்ந்தது தான், பிஎம்டபிள்யூ 740எல்ஐ எம் ஸ்போர்ட் தனிப்பட்ட எடிசன் காராகும். இவற்றுடன் வழக்கமான லக்சரி அம்சங்களும் இந்த ஸ்பெஷல் வேரியண்ட்டில் தொடரப்பட்டுள்ளன.

இந்த அம்சங்களில் பிரத்யேகமான நப்பா லெதர் உள்ளமைவு, மரத்துண்டு பதிப்புகள், கேபினை சுற்றிலும் விளக்குகள், பனோராமிக் கண்ணாடி சன்ரூஃப், 4-நிலைகளில் தானியங்கி க்ளைமேட் கண்ட்ரோல், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய, மசாஸ் வசதியுடன் இருக்கைகள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

பிஎம்டபிள்யூ 740எல்ஐ எம் ஸ்போர்ட் தனிப்பட்ட பதிப்பு கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஷோரூம் விலை ரூ.1.42 கோடி

இந்த பிஎம்டபிள்யூ செடான் காரின் உட்புற தொழிற்நுட்ப அம்சங்களாக 10.2 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, 10.2 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 7 இன்ச்சில் பின் இருக்கை பயணிகளுக்கான திரை, ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி, கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், பிஎம்டபிள்யூ சைகை கண்ட்ரோல் முதலியவை உள்ளன.

பிஎம்டபிள்யூ 740எல்ஐ எம் ஸ்போர்ட் தனிப்பட்ட பதிப்பு கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஷோரூம் விலை ரூ.1.42 கோடி

புதிய 740எல்ஐ காரில் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இரு டர்போசார்ஜர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. டர்போ சார்ஜர்கள், 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 6,500 ஆர்பிஎம்-இல் 335 பிஎச்பி மற்றும் 5,200 ஆர்பிஎம்-இல் 450 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 5.6 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த தனிப்பட்ட எடிசன் காரின் அதிகப்பட்ச வேகம் 250kmph ஆகும். ஸ்போர்ட், ஸ்போர்ட்+, கம்ஃபர்ட், கம்ஃபர்ட்+, ஈக்கோ ப்ரோ & அடாப்டிவ் என்கிற ஆறு விதமான டிரைவிங் மோட்களை கொண்டுள்ள இந்த லக்சரி செடான் காரில் அடாப்டிவ் காற்று சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 740எல்ஐ எம் ஸ்போர்ட் தனிப்பட்ட பதிப்பு கார் விற்பனைக்கு அறிமுகம்!! ஷோரூம் விலை ரூ.1.42 கோடி

இவற்றுடன் ஒரே பாதையில் இயங்குவதற்கான, பார்கிங் உதவி, ரிமோட் கண்ட்ரோல் பார்க்கிங் மற்றும் பிஎம்டபிள்யூ திரை சாவி போன்ற ஓட்டுனர் உதவி வசதிகளும் 740எல்ஐ எம் ஸ்போர்ட் தனிப்பட்ட எடிசனில் கொடுக்கப்பட்டுள்ளன.

பயணிகளின் பாதுகாப்பிற்கு,

  • 6 காற்றுப்பைகள்,
  • டைனாமிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்,
  • டைனாமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல்,
  • காரின் பக்கவாட்டு பகுதி சேதமடையாமல் தடுக்கும் வசதி,
  • ஐசோஃபிக்ஸ் குழந்தைக்கான இருக்கை
  • ஆட்டோ ஹோல்ட் வசதியுடன் எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக்
  • உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    இந்த தனிப்பட்ட எடிசன் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, தொலைவு மற்றும் மைலேஜ் சார்ந்த ஏகப்பட்ட கார் சேவை திட்டங்கள் வழங்கப்பட உள்ளன. காரின் நிலையை பொறுத்து சேவையையும், பராமரிப்பையும் வழங்கக்கூடியவைகளாக உள்ள இந்த திட்ட தேர்வுகள் ரூ.51,700 (3-வருட/ 40,000கிமீ)-இல் இருந்து ஆரம்பிக்கின்றன.

Most Read Articles

English summary
Bmw launched 740li m sport in india find here price features engine details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X