இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 20ஐ டெக் எடிசன்!! விலை ரூ.43 லட்சம்

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 20ஐ டெக் எடிசன் கார் இந்திய சந்தையில் ரூ.43 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 20ஐ டெக் எடிசன்!! விலை ரூ.43 லட்சம்

எக்ஸ்1 20ஐ மாடலின் புதிய டெக் எடிசனில் இருக்கை அமைப்புகள் சற்று மேலாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சாலையின் காட்சி சிறப்பானதாக இருக்கும் என்றும் பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 20ஐ டெக் எடிசன்!! விலை ரூ.43 லட்சம்

மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள எக்ஸ்1 20ஐ டெக் எடிசனை பிஎம்டபிள்யூ இணையத்தள பக்கத்தில் முன்பதிவு செய்யலாம். இந்த பிஎம்டபிள்யூ ஸ்பெஷல் எடிசன் காரின் முன்பக்கம் பெரியளவில், பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கே உண்டான 'கிட்னி' வடிவ க்ரில் அமைப்பை கொண்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 20ஐ டெக் எடிசன்!! விலை ரூ.43 லட்சம்

இத்துடன் காற்று ஏற்பான்கள், எல்இடி ஃபாக் விளக்குகளுடன் எல்இடி ஹெட்லைட்களுடன் காரின் முன்பக்கம் நம்மை வெகுவாக வசீகரிக்கிறது. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது காரின் தோற்றம் ஆப்பு வடிவில் காட்சியளிக்கிறது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 20ஐ டெக் எடிசன்!! விலை ரூ.43 லட்சம்

காரின் பக்கவாட்டில் கண்ணை கவரக்கூடிய கேரக்டர் லைன்களும், மேடுகளும் காரின் பின்பக்கம் வரையில் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் எல்இடி விளக்குகள், காரின் நிறத்தில் பொறிப்புகள் மற்றும் அளவில் பெரிய இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள் உள்ளன.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 20ஐ டெக் எடிசன்!! விலை ரூ.43 லட்சம்

ஸ்போர்டியான தோற்றத்தை வழங்கக்கூடிய அலாய் சக்கரங்கள் 18 இன்ச்சில் பொருத்தப்பட்டுள்ளன. எக்ஸ்1 20ஐ டெக் எடிசனிற்கு அல்பைன் வெள்ளை, சென்சாடெக் சிப்பி கருப்புடன் பைடோனிக் நீலம் (மெட்டாலிக்) என்ற இரு நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 20ஐ டெக் எடிசன்!! விலை ரூ.43 லட்சம்

உட்புறத்தில் இந்த டெக் எடிசன் கார் ப்ரீமியம் தரத்திலான லெதர் உள்ளமைவுடன் சுற்றிலும் விளக்குகள், பனோராமா கண்ணாடி மேற்கூரை உள்ளிட்டவற்றுடன் நன்கு விசாலமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஓட்டுனர் இருக்கை மட்டுமின்றி பயணிகளுக்கான இருக்கையும் மின்சாரம் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக உள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 20ஐ டெக் எடிசன்!! விலை ரூ.43 லட்சம்

பின் இருக்கை தலையணையை தேவைக்கு ஏற்றாற்போல் சாய்த்து கொள்ளலாம். மேலும் இந்த வரிசையில், மத்தியில் பாட்டில்களை வைக்க இரு ஹோல்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் பின் இருக்கை வரிசையை மடக்கி கொள்வதன் மூலம், பொருட்களை வைக்க கூடுதல் இடவசதியை பெறலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 20ஐ டெக் எடிசன்!! விலை ரூ.43 லட்சம்

டேஸ்போர்ட்டின் மீது ஐட்ரைவ் கண்ட்ரோலர் உடன் ஓட்டுனர் தேவையான தகவல்களை வழங்கக்கூடிய 10.25 இன்ச் மைய தகவல் திரை பொருத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் 205 வாட்ஸ் ஹைபை ஸ்பீக்கர் அமைப்பு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்டவையும் இந்த பிஎம்டபிள்யூ காரின் உட்புற கேபினில் அடங்குகின்றன.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 20ஐ டெக் எடிசன்!! விலை ரூ.43 லட்சம்

புதிய எக்ஸ்1 20ஐ டெக் எடிசனில் வழக்கமான 2.0 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 189 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 20ஐ டெக் எடிசன்!! விலை ரூ.43 லட்சம்

ஈக்கோ ப்ரோ, கம்ஃபர்ட் மற்றும் ஸ்போர்ட் என்ற மூன்று விதமான டிரைவிங் மோட்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பிஎம்டபிள்யூ ஸ்பெஷல் எடிசன் காரில் பயணிகள் பாதுகாப்பு அம்சங்களும் ஏகப்பட்டவை வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
BMW India has launched the BMW X1 20i Tech Edition today. The global leader in premium compact sports activity vehicle (SAV) segment is locally produced at BMW Group Plant Chennai, limited units of the exclusive edition can now be booked at shop.bmw.in.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X