Just In
- 55 min ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 8 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 10 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 13 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் கார் அறிமுகம்... பெரும் குறை பூர்த்தி... சொகுசு பிரியர்கள் மகிழ்ச்சி!!
பெரும் குறையாக நீடித்து வந்ததை பிஎம்டபிள்யூ நிறுவனம் புதுமுக காரின் அறிமுகத்தின் வாயிலாக தற்போது நிவர்த்தி செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் புதுமுக சொகசு கார் ஒன்றை இன்று (செவ்வாய்கிழமை) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது, 2 செரீஸ் கிரான் கூபே மாடலின் பெட்ரோல் வேரியண்ட் ஆகும். முன்னதாக டீசல் தேர்வில் மட்டுமே இந்த மாடல் விற்பனைக்குக் கிடைத்து வந்தநிலையில் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

பெட்ரோல் எஞ்ஜின் தேர்வு அறிமுகம் செய்யப்படாதது ஓர் பெரும் குறையாக நீடித்து வந்தநிலையிலேயே இந்த சம்பவத்தை பிஎம்டபிள்யூ செய்திருக்கின்றது. இக்காருக்கு அறிமுக விலையாக ரூ. 40.90 லட்சம் என்ற விலையை பிஎம்டபிள்யூ நிர்ணயித்துள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில மாடல்களை சென்னையில் உள்ள தொழிற்சாலையில் வைத்து தயாரிக்கத் தொடங்கியிருக்கின்றது. உற்பத்தி செலவைக் குறைத்து, வாகனங்களைக் குறைந்த விலையில் விற்க வேண்டும் என்ற நோக்கில் இந்த செயலில் அது ஈடுபட்டு வருகின்றது.

அவ்வாறு உள்ளூரில் தயாரிக்கப்பட்டதே தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் 220ஐ எம் ஸ்போர்ட். இக்காரையே ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் இரு டீசல் எஞ்ஜின் தேர்வுகளுடன் பிஎம்டபிள்யூ இணைத்திருக்கின்றது. இது ஓர் 2.0 லிட்டர் ட்வின் ட்ர்போ 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் ஆகும்.

இந்த எஞ்ஜின் 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் இயங்கக் கூடியது. 190 எச்பி மற்றும் 280 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இக்காரில் சொகுசு வசதிகள் மட்டுமின்றி எக்கசக்கமான தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

புதிய வடிவத்திலான ஸ்போர்ட் இருக்கைகள், பின்பக்க இருக்கையாளர்களுக்கான சொகுசு வசதிகள் கொண்ட இருக்கைகள், பனோரமா க்ளாஸ் சன்ரூஃப், எல்இடி மின் விளக்குகள் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு வசதிகள் இக்காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதிக இடவசதி கொடுக்கும் வகையில் இக்கார் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக, முன்பக்க டிரைவர் மற்றும் பயணி ஆகிய இருவர்க்கும் அதிக இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பின்பக்கத்தில் லக்கேஜ்களை அதிகளவில் ஏற்றிக்கொள்ளும் வகையில் சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது, பின்பக்க இருக்கையை முழுமையாக மடித்து வைத்துக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

அவ்வாறு இருக்கையை முழுமையாக மடித்துக் கொள்ளும்போது 430 லிட்டர் வரையிலான பூட் ஸ்பேஸை நம்மால் பெற முடியும். 220ஐ எம் ஸ்போர்ட் காரை இரு பிரத்யேக நிற தேர்வில் வழங்க பிஎம்டபிள்யூ முடிவு செய்திருக்கின்றது. மிஸானோ ப்ளூ மற்றும் ஸ்நேப்பர் ராக்ஸ் ஆகிய நிற தேர்வுகளில் வழங்க இருப்பதாக பிஎம்டபிள்யூ அறிவித்துள்ளது.

இந்த பிரத்யேக நிற தேர்வுகளுடன் அல்பைன் வெள்ளை, கருப்பு சஃபையர், மெல்போர்ன் சிவப்பு மற்றும் ஸ்டார்ம் பே ஆகிய நிறத்தேர்வுகளிலும் இக்கார் கிடைக்க இருக்கின்றது. இதேபோன்று, காருக்குள் இருக்கும் இருக்கைகளையும் தனித்துவமான நிறங்களில் வழங்க இருப்பதாக பிஎம்டபிள்யூ கூறியிருக்கின்றது.