வெறும் 500 மாதிரிகள் மட்டுமே விற்கப்பட உள்ள பிஎம்டபிள்யூ ஸ்பெஷல் எடிசன் கார்!! இந்தியாவிற்கும் வருகிறது...!

அல்ட்ரா எக்ஸ்க்ளூசிவ் காராக பிஎம்டபிள்யூ எக்ஸ்7 டார்க் ஷடோவ் எடிசன் எஸ்யூவி இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

வெறும் 500 மாதிரிகள் மட்டுமே விற்கப்பட உள்ள பிஎம்டபிள்யூ ஸ்பெஷல் எடிசன் கார்!! இந்தியாவிற்கும் வருகிறது...!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிரதான எஸ்யூவி மாடலாக உள்ள எக்ஸ்7-இன் டார்க் ஷடோவ் எடிசன் கடந்த ஆண்டில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இதன் இந்திய அறிமுக குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

வெறும் 500 மாதிரிகள் மட்டுமே விற்கப்பட உள்ள பிஎம்டபிள்யூ ஸ்பெஷல் எடிசன் கார்!! இந்தியாவிற்கும் வருகிறது...!

இருப்பினும் இந்த காரை வாங்குவது சற்று கடினம் தான் என்றே தோன்றுகிறது. ஏனெனில் எக்ஸ்7 மாடலின் இந்த ஸ்பெஷல் எடிசன் வெறும் 500 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு உலகளவில் விற்பனை செய்யப்பட உள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

வெறும் 500 மாதிரிகள் மட்டுமே விற்கப்பட உள்ள பிஎம்டபிள்யூ ஸ்பெஷல் எடிசன் கார்!! இந்தியாவிற்கும் வருகிறது...!

இந்த ஸ்பெஷல் எடிசன் எஸ்யூவி காரின் விலை ரூ.1 கோடியாக இந்திய சந்தையில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் எக்ஸ்7-இன் டாப் எம்50ஐ வேரியண்ட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

வெறும் 500 மாதிரிகள் மட்டுமே விற்கப்பட உள்ள பிஎம்டபிள்யூ ஸ்பெஷல் எடிசன் கார்!! இந்தியாவிற்கும் வருகிறது...!

கருப்பு நிறம் என்று சொல்வதை காட்டிலும் மெட்டாலிக் ஷேடில் உள்ள உறைந்த பனியின் க்ரே நிறம் என்று தான் சொல்ல வேண்டும். அதேநேரத்தில் அடர் கருப்பு நிறங்களை ‘கிட்னி' வடிவிலான க்ரில், மேற்கூரை தண்டவாளங்கள் மற்றும் பின்பக்க எக்ஸாஸ்ட் குழாய்களில் பார்க்க முடிகிறது.

வெறும் 500 மாதிரிகள் மட்டுமே விற்கப்பட உள்ள பிஎம்டபிள்யூ ஸ்பெஷல் எடிசன் கார்!! இந்தியாவிற்கும் வருகிறது...!

அதேபோல் காரின் அடர் க்ரே நிற உடலுக்கு ஏற்ப 22-இன்ச் வி-ஸ்போக் எம் லைட்-அலாய் சக்கரங்களும் ஜெட் ப்ளாக் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. உட்புறத்திலும் இந்த அடர் கருப்பு நிற ஃபார்முலா தொடர்கிறது. கேபின் மெரீனோ மற்றும் நப்பா லெதர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வெறும் 500 மாதிரிகள் மட்டுமே விற்கப்பட உள்ள பிஎம்டபிள்யூ ஸ்பெஷல் எடிசன் கார்!! இந்தியாவிற்கும் வருகிறது...!

கேபினின் சிறப்பம்சங்களாக பௌவர்ஸ் & வில்கின்ஸ் டைமண்ட் சவுண்ட் சிஸ்டம், பனோராமிக் சன்ரூஃப், ஹெட்-அப் திரை மற்றும் மஸாஜ் செயல்பாட்டுடன் உள்ள முன் இருக்கைகளை சொல்லலாம். இவற்றுடன் பிரத்யேகமான பிஎம்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் எக்ஸாஸ்ட் குழாயினையும் இந்த ஸ்பெஷல் எடிசன் கார் பெற்றுள்ளது.

வெறும் 500 மாதிரிகள் மட்டுமே விற்கப்பட உள்ள பிஎம்டபிள்யூ ஸ்பெஷல் எடிசன் கார்!! இந்தியாவிற்கும் வருகிறது...!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு எக்ஸ்7 டார்க் ஷடோவ் எடிசனில் 4.4 லிட்டர், இரட்டை-டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் உதவியுடன் அதிகப்பட்சமாக 530 பிஎஸ் மற்றும் 750 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

வெறும் 500 மாதிரிகள் மட்டுமே விற்கப்பட உள்ள பிஎம்டபிள்யூ ஸ்பெஷல் எடிசன் கார்!! இந்தியாவிற்கும் வருகிறது...!

இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய என்ஜின் அமைப்பின் உதவியில் இந்த ஸ்பெஷல் எடிசன் பிஎம்டபிள்யூ காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் எட்டிவிட முடியும். இந்த காரை அதிகப்பட்சமாக மணிக்கு 250கிமீ வேகத்தில் இயக்க முடியுமாம்.

Most Read Articles

English summary
Ultra-exclusive BMW X7 Dark Shadow Edition to be launched in India soon.
Story first published: Sunday, May 30, 2021, 22:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X