மிக விரைவில் அறிமுகமாகிறது பிஎம்டபிள்யூவின் ஹைட்ரஜன் கார்... நம்ப முடியா அதிக ரேஞ்ஜை தரும்...

பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் அறிமுகம்குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மிக விரைவில் அறிமுகமாகிறது பிஎம்டபிள்யூவின் ஹைட்ரஜன் கார்... நம்ப முடியா அதிக ரேஞ்ஜை தரும்...

சொகுசு கார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பிரபல ஜெர்மானிய நிறுவனமான பிஎம்டபிள்யூ மிக விரைவில் ஹைட்ரஜன் ப்யூவல் செல்லால் இயங்கக் கூடிய சொகுசு காரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.

மிக விரைவில் அறிமுகமாகிறது பிஎம்டபிள்யூவின் ஹைட்ரஜன் கார்... நம்ப முடியா அதிக ரேஞ்ஜை தரும்...

தனது உலக புகழ்பெற்ற கார் மாடலான எக்ஸ்5 மாடலிலேயே ஹைட்ரஜன் ப்யூவல் செல் இ-ட்ரைவ் வசதியை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த வசதிக் கொண்ட வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதுகுறிப்பிடத்தகுந்தது.

மிக விரைவில் அறிமுகமாகிறது பிஎம்டபிள்யூவின் ஹைட்ரஜன் கார்... நம்ப முடியா அதிக ரேஞ்ஜை தரும்...

ஆம், ஹைட்ரஜன் ப்யூவல் செல்லில் இயங்கும் வாகனங்கள் தண்ணீர் நிறைந்த ஆவியை மட்டுமே வெளியேற்றும். ஆகையால், இதனால் மாசு என்பதற்கான பேச்சுக்கே இங்கு இடமில்லை. இத்தகைய சிறப்பு தொழில்நுட்ப வசதிக் கொண்ட காரையே பிஎம்டபிள்யூ 2022ம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய இருப்பதாக டுவிட்டர் பதிவின் வாயிலாக உறுதி செய்துள்ளது.

மிக விரைவில் அறிமுகமாகிறது பிஎம்டபிள்யூவின் ஹைட்ரஜன் கார்... நம்ப முடியா அதிக ரேஞ்ஜை தரும்...

ஹைட்ரஜன் கார் உற்பத்திக்காக ஹைட்ரஜன் நெக்ஸ்ட் எனும் வரிசையை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து, புதிய ஹைட்ரஜன் ப்யூவல் திறனில் இயங்கும் காருக்காக 125கிலோவாட் திறனை வெளிப்படுத்தக் கூடிய பவர்ட்ரெயினையும் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

மிக விரைவில் அறிமுகமாகிறது பிஎம்டபிள்யூவின் ஹைட்ரஜன் கார்... நம்ப முடியா அதிக ரேஞ்ஜை தரும்...

ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் என்பது மின்சார வாகனத்தைக் காட்டிலும் மிக சிறந்த பசுமை வாகனம் ஆகும். ஏன் என்றால் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்ய பல மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும்.

மிக விரைவில் அறிமுகமாகிறது பிஎம்டபிள்யூவின் ஹைட்ரஜன் கார்... நம்ப முடியா அதிக ரேஞ்ஜை தரும்...

ஆனால், ஹைட்ரஜன் ப்யூவல் செல்லை நிரப்ப சில நிமிடங்களே போதும். அதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருளை நிரப்புவது போலவே இது மிக எளிமையானது. பிஎம்டபிள்யூ எக்ஸ் அடிப்படையிலான ஹைட்ரஜன் நெக்ஸ்ட் காரில் ஹைட்ரஜன் ப்யூவல் செல்லை நிரப்புவதற்காக 700 சிறிய சிலிண்டர்கள் நிலை நிறுத்தப்பட இருக்கின்றன.

மிக விரைவில் அறிமுகமாகிறது பிஎம்டபிள்யூவின் ஹைட்ரஜன் கார்... நம்ப முடியா அதிக ரேஞ்ஜை தரும்...

அவை ஆறு கிலோ வரை ஹைட்ரஜனை சேமித்து கொள்ள உதவும். ஆகையால், நெடு நீண்ட தூர ரேஞ்ஜை நம்மால் பெற முடியும். ஹைட்ரஜன் ப்யூவல் செல் மின்சாரமாக மாற்றப்பட்டு அதன் பின்னரே இத்திறன் காருக்கு வழங்கப்படும். இதனை மின்சாரமாக மாற்றும் எந்திரம் காரின் அடிப்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிக விரைவில் அறிமுகமாகிறது பிஎம்டபிள்யூவின் ஹைட்ரஜன் கார்... நம்ப முடியா அதிக ரேஞ்ஜை தரும்...

இந்த புதிய வாகனத்தின் விலை மற்றும் பிற முக்கிய அம்சங்கள் பற்றிய தகவலை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. நாம் மேலே பார்த்த தகவல்களை மட்டுமே தற்போது நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இதன் வருகை 2022ம் ஆண்டு இருக்கும் என கூறியிருக்கும் நிறுவனம், அதன் துள்ளியமான அறிமுக தேதி விபரத்தை வெளியிடவில்லை.

மிக விரைவில் அறிமுகமாகிறது பிஎம்டபிள்யூவின் ஹைட்ரஜன் கார்... நம்ப முடியா அதிக ரேஞ்ஜை தரும்...

இந்த தகவல் மற்றும் இன்னும் சில முக்கிய (என்னவெல்லாம் சிறப்பு வசதிகள் இக்காரில் இடம் பெற இருக்கின்றன) தகவல்களை நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்போதே காரின் விலை மற்றும் ஒரு முறை முழுமையாக ப்யூவல் செல்லை நிரப்பினால் எத்தனை கிலோமீட்டர் பயணிக்கலாம் என்பது போன்ற அனைத்து முக்கிய தகவல்களும் வெளியாக இருக்கின்றது.

Most Read Articles

English summary
BMW Planning To Launch X5-Based Hydrogen Fuel Cell e-Drive Car In 2022. Read In Tamil.
Story first published: Friday, May 7, 2021, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X