Just In
- 7 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 10 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 10 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 12 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Lifestyle
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உண்மையில் இதை செய்தாரா கார்திக் ஆர்யன்? என்னதான் காசு கொட்டி கிடந்தாலும் இப்படியா செய்வது! நம்பவே முடியல...
பிரபல இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் புதுமுக சொகுசு காரை வாங்குவதற்காக, அக்காரின் விலையைக் காட்டிலும் பல லட்சங்களை வாரி வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

பிரபல இந்தி திரைப்பட நடிகர் கார்த்திக் ஆர்யன் மிக சமீபத்தில் லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் எஸ்யூவி சொகுசு காரை வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் லம்போர்கினி உருஸ் காரைப் பயன்படுத்தும் திரைப் பிரபலங்களின் வரிசையில் அவரும் ஒருவராக இணைந்தார்.

இந்நிலையில், கார்த்திக் ஆர்யன் இக்காரைப் பெறுவதற்காக காரின் விலையைத் தவிர்த்து கூடுதல் பல லட்சங்களை செலவழித்திருப்பதாக ஷாக் தகவல்கள் வெளியாகியுள்ளன. லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காருக்கு இந்தியாவின் திரைப்பிரபலங்கள் மத்தியில் மட்டுமின்றி செல்வந்தர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதன் விளைவாக இக்காருக்கான காத்திருப்பு காலம் சில மாதங்களாக நீடித்து வருகின்றது.

இந்த காத்திருப்பைத் தவிர்ப்பதற்காகவே கார்த்திக் ஆர்யன் பல லட்சங்களை வாரி இரைத்திருக்கின்றார். 50 லட்சம் ரூபாய் வரை அவர் கூடுதலாக செலுத்தியிருக்கின்றனர். இதன் காரணத்தினால்தான் கார்த்திக் ஆர்யன் கைகளில் லம்போர்கினி உருஸ் உடனடியாக வந்து சேர்ந்திருக்கின்றது. அதேசமயம், இந்திய தொழிலதிபர்கள் பலர் முன்தொகையை செலுத்திவிட்டு பல மாதங்களாக இக்காரை பெறுவதற்காக பல மாதங்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களைப் பொறாமையில் ஆழ்த்தும் வகையிலேயே பல லட்சங்களை வாரி இரைத்து தனக்கான லம்போர்கினி உருஸ் காரை மிக விரைவில் (எக்ஸ்பிரஸ் வேகத்தில்) பெற்றிருக்கின்றார். லம்போர்கினி உருஸ் ஓர் அதிவேக திறன் கொண்ட எஸ்யூவி ரக காராகும். இந்த அதி-வேக காரையே மிக மிக அதிக வேகத்தில் கார்த்திக் ஆர்யன் பெற்றிருக்கின்றார்.

தற்போது இந்தியாவில் ரூ. 3 கோடிகள் என்ற விலையிலேயே லம்போர்கினி உருஸ் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இன்னும் சில கூடுதல் லட்சங்களுடன் இக்கார் விற்பனைக்கு வரும். ஆகையால், இந்தியர்கள் பலர் இதன் ஆன்-ரோடு விலையையே மிக மிக அதிகம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் காரின் ஆன்-ரோடு விலையைக் காட்டிலும் ரூ. 50 லட்சம் அதிகமாக செலவு செய்து கார்த்திக் ஆர்யன் இக்காரை வாங்கியிருப்பது அவரது ரசிகர்கள் பெரிய அதிர்வலையை உருவாக்கியுள்ளது.

இதுமட்டுமின்றி கார்த்திக் ஆர்யன் அவரது புத்தம் புதிய லம்போர்கினி உருஸ் காருக்கு பேன்சி பதிவெண்ணை வாங்கியிருக்கின்றார். இதற்காகவும் அவர் சில லட்சங்களை வாரி இரைத்திருக்களாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடிகரிடத்தில் ஏற்கனவே பல்வேறு சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

பிஎம்டபிள்யூ 5 செரீஸ் மற்றும் மினி கூப்பர் போன்ற லக்சூரி கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதுதவிர ராயல் என்பீல்டு பைக்கையும் அவர் பயன்பாட்டில் வைத்திருக்கின்றார். இதில், மினி கூப்பர் காரை கார்த்திக் ஆர்யன் அவரது அம்மாவிடம் இருந்து பரிசாக பெற்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காருக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. இது ஓர் உலகின் அதிவேக மற்றும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த எஸ்யூவி ரக காராகும். இக்காரில், 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 641 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 305 கிமீ ஆகும். அதேசமயம், இக்கார் வெறும் 3.6 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். எஸ்யூவி ரகத்தில் இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் திறனை வெளிப்படுத்தும் உலகின் முதல் கார் இதுவே ஆகும். எனவேதான் செல்வந்தர்கள் தொடங்கி முக்கிய பிரபலங்கள் பலர் இக்கார் பக்கம் ஈ போல் மொய்த்து வருகின்றனர்.
Source: National Herald
இந்தியாவில் சௌந்தர்யா ரஜினிகாந்த், ரன்வீர் சிங் போன்ற திரைநட்சத்திரங்கள் தொடங்கி முகேஷ் அம்பானி மற்றும் பூனவல்லா போன்ற தொழிலதிபர்கள் பலர் இக்காரை பயன்படுத்தி வருகின்றனர்.