Swift-ஐ தொடர்ந்து பாதுகாப்பு தர ஆய்வில் மண்ணை கவ்விய மற்றுமொரு கார்... அட போங்க காருல போகுற ஆசையே போய்டுச்சு!

Suzuki Swift காரைத் தொடர்ந்து Renault நிறுவனத்தின் Duster எஸ்யூவி ரக காராகும் பாதுகாப்பு தரம் குறித்து செய்யப்பட்ட மோதல் ஆய்வில் பூஜ்ஜியம் ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Swift-ஐ தொடர்ந்து பாதுகாப்பு தர ஆய்வில் மண்ணை கவ்விய மற்றுமொரு கார்... அட போங்க காருல போகுற ஆசையே போய்டுச்சு!

Renault நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் Duster SUV-ம் ஒன்று. இந்த கார் இந்திய சந்தையைப் போலவே உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. அந்தவகையில், Renault நிறுவனம் Duster எஸ்யூவி காரை விற்பனைச் செய்து வரும் சந்தைகளில் தென் அமெரிக்காவும் ஒன்று.

Swift-ஐ தொடர்ந்து பாதுகாப்பு தர ஆய்வில் மண்ணை கவ்விய மற்றுமொரு கார்... அட போங்க காருல போகுற ஆசையே போய்டுச்சு!

இங்கு விற்கப்படுவது இரண்டாம் தலைமுறை Duster எஸ்யூவி ஆகும். இதனை 2019ம் ஆண்டு தென் அமெரிக்காவில் Renault விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இவை பிரேசில் நாட்டில் உள்ள சவோ ஜோஷே டூஸ் பின்ஹைஸ் (Sao Jose dos Pinhais) பிளாணட்டில் வைத்து உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Swift-ஐ தொடர்ந்து பாதுகாப்பு தர ஆய்வில் மண்ணை கவ்விய மற்றுமொரு கார்... அட போங்க காருல போகுற ஆசையே போய்டுச்சு!

ஆம், இங்கிருந்தே தென் அமெரிக்காவிற்கான Duster எஸ்யூவி கார்களை Renault ஏற்றுமதி செய்து விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த காரை சமீபத்தில் Latin NCAP அமைப்பு க்ராஷ் டெஸ்டிற்கு (மோதல் ஆய்விற்கு) உட்படுத்தியது. இந்த ஆய்வில் மிகவும் அதிர்ச்சிகரமான புள்ளிகளை Renault Duster பெற்றிருக்கின்றது.

Swift-ஐ தொடர்ந்து பாதுகாப்பு தர ஆய்வில் மண்ணை கவ்விய மற்றுமொரு கார்... அட போங்க காருல போகுற ஆசையே போய்டுச்சு!

Latin NCAP அமைப்பு Renault Duster காரின் பாதுகாப்புகுறித்த ஆய்வினையே மோதல் பரிசோதனையின் வாயிலாக மேற்கொண்டது. இந்த ஆய்வில் நன்கு செயல்படும் வாகனங்களுக்கு ஐந்து நட்சத்திரங்கள் வரை மதிப்பெண் வழங்கப்படும். ஆனால், தற்போது செய்யப்பட்டிருக்கும் க்ராஷ் டெஸ்டில் Renault Duster ஒரு ஸ்டார் ரேட்டிங்கைகூட வாங்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Swift-ஐ தொடர்ந்து பாதுகாப்பு தர ஆய்வில் மண்ணை கவ்விய மற்றுமொரு கார்... அட போங்க காருல போகுற ஆசையே போய்டுச்சு!

ஆம், பூஜ்ஜியம் எனும் ஸ்டார் ரேட்டிங்கையே இக்கார் பெற்றிருக்கின்றது. இந்த தகவல் ஒட்டுமொத்த வாகன உலகிற்குமே பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த புள்ளி விபரங்களானது பாதுகாப்பான பயணங்களுக்கு துளியும் தகுதியான கார் இது அல்ல என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

Swift-ஐ தொடர்ந்து பாதுகாப்பு தர ஆய்வில் மண்ணை கவ்விய மற்றுமொரு கார்... அட போங்க காருல போகுற ஆசையே போய்டுச்சு!

முன் பக்கமாக செய்யப்பட்ட மோதல் ஆய்வின்போது எரிபொருள் வெளியேறுவதற்கான அறிகுறி தென்பட்டிருக்கின்றது. இது பேராபத்தை விளைவிக்கக் கூடியது. இதேபோல் பக்கவாட்டு பகுதியில் மோதல் ஆய்வு செய்தபோது கார் ஒரு பக்கம் கவிழ்ந்திருக்கின்றது. மேலும், காரின் 'பி' பிள்ளர் மோசமாக பாதிப்படைந்து, கதவுகளும் திறந்திருக்கின்றது.

Swift-ஐ தொடர்ந்து பாதுகாப்பு தர ஆய்வில் மண்ணை கவ்விய மற்றுமொரு கார்... அட போங்க காருல போகுற ஆசையே போய்டுச்சு!

இத்தகைய மோசமான நிலையையே Renault Duster கார் LATIN NCAP க்ராஷ் டெஸ்டில் சந்தித்திருக்கின்றது. இந்த ஆய்வின் வாயிலாக காருக்குள் பயணிக்கும் பெரியர்வளுக்கு இது 29.47 சதவீதம் பாதுகாப்பையும், சிறுவர்களுக்கு 22.93 சதவீதம் பாதுகாப்பையும் வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இவை மிக மிக குறைவான புள்ளிகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Swift-ஐ தொடர்ந்து பாதுகாப்பு தர ஆய்வில் மண்ணை கவ்விய மற்றுமொரு கார்... அட போங்க காருல போகுற ஆசையே போய்டுச்சு!

எனவேதான் பூஜ்ஜிய ஸ்டார் ரேட்டிங் Renault Duster-க்கு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த கார் பாதசாரிகள் மற்றும் சாலை பயனர்களின் பாதுகாப்புகுறித்த மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 50.79 சதவீதம் புள்ளிகளைப் பெற்றிருக்கின்றது. தொடர்ந்து, காருக்குள் இருக்கும் பாதுகாப்பு கருவிகளுக்கு 34.88 சதவீதம் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

Swift-ஐ தொடர்ந்து பாதுகாப்பு தர ஆய்வில் மண்ணை கவ்விய மற்றுமொரு கார்... அட போங்க காருல போகுற ஆசையே போய்டுச்சு!

இந்த மிகக் குறைவான புள்ளிகளை Renault Duster காருக்கு வழங்க பல காரணங்கள் இருக்கின்றன. மிக முக்கியமாக லத்தீன் அமெரிக்காவில் விற்கப்படும் Renault Duster கார்களில் பக்கவாட்டு பகுதியில் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கூடிய ஏற் பேக்குகள் வழங்கப்படவில்லை. இத்துடன், இன்னும் சில பாதுகாப்பு அம்சங்களின் குறைபாடுகளும் இதில் தென்படுகின்றன.

Swift-ஐ தொடர்ந்து பாதுகாப்பு தர ஆய்வில் மண்ணை கவ்விய மற்றுமொரு கார்... அட போங்க காருல போகுற ஆசையே போய்டுச்சு!

இதன் விளைவாக Renault Duster மிகக் குறைவான புள்ளிகளைப் பெற்றிருக்கின்றது. அதேசமயம், இந்த காரில் இரு ஏற் பேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (ESC) மிக தரமானதாக வழங்கப்பட்டிருக்கின்றன. அதேவேலையில், தற்போது கிடைத்திருக்கும் முடிவுகளைக் கொண்டு உற்பத்தியாளர் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும்ப தொடங்கியுள்ளது.

அதாவது, முன்பக்கம் மோதல் ஆய்வு செய்தபோது ஏற்பட்ட எரிபொருள் கசிவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அதுகுறித்த ஆய்வை நடத்தி எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.இதேபோன்று, கதவுகள் மிக எளிதில் திறந்துகொண்டது குறித்தும் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இதற்கு முன்னதாக Suzuki Swift காரும் இதேபோல் மோதல் ஆய்வில் பூஜ்ஜியம் ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றது. இந்த தகவல்குறித்து முழுமையாக அறிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Brazil made renault duster gets zero star scores in latin ncap crash test
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X