ஷோரூம் வளாகத்திற்குள் காட்சிதந்த பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப்-ட்ரக்!! படங்கள் வெளியீடு!

இசுஸு இந்தியா நிறுவனம் நடப்பு மே மாத துவக்கத்தில் அறிமுகப்படுத்திய பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான டி-மேக்ஸ் வி-க்ராஸ் மற்றும் டி-மேக்ஸ் ஹைலேண்டர் வாகனங்களின் படங்கள் மீண்டும் டீலர்ஷிப் வளாகத்தில் இருந்து காடிவாடி செய்திதளம் மூலமாக கிடைத்துள்ளன.

ஷோரூம் வளாகத்திற்குள் காட்சிதந்த பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப்-ட்ரக்!! படங்கள் வெளியீடு!

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய தலைமுறை டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்குகள் ஜப்பான் சந்தையில் 2019ல் அறிமுகப்படுத்தப்பட்டவை ஆகும். முந்தைய தலைமுறையில் இருந்து இதன் வெளிப்புற தோற்றத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை.

ஷோரூம் வளாகத்திற்குள் காட்சிதந்த பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப்-ட்ரக்!! படங்கள் வெளியீடு!

மிகவும் சிறிய அளவிலான காஸ்மெட்டிக் மாற்றங்கள் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளன. முன்பக்க ஹெட்லைட், அகலமான க்ரில், செவ்வக வடிவிலான டெயில்லைட்களின் வடிவம் அப்படியே வழங்கப்பட்டுள்ளது. புதியது எதுவென்று பார்த்தால் ஹை-லேண்டர் வேரியண்ட் தான்.

ஷோரூம் வளாகத்திற்குள் காட்சிதந்த பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப்-ட்ரக்!! படங்கள் வெளியீடு!

இசுஸு டி-மேக்ஸ் வாகனத்தின் வரிசையில் விலை குறைவான வேரியண்ட்டாக இது கொண்டுவரப்பட்டுள்ளது. விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும் இரட்டை முன்பக்க காற்றுப்பைகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

ஷோரூம் வளாகத்திற்குள் காட்சிதந்த பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப்-ட்ரக்!! படங்கள் வெளியீடு!

இதனுடன் டி-மேக்ஸ் ஹை-லேண்டரில் ஐசோஃபிக்ஸ் குழந்தைகளுக்கான இருக்கை ஹேங்கர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்ஸ், இபிடி உடன் ஏபிஎஸ், 6 வழிகளில் மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்துக்கொள்ளக்கூடிய ஓட்டுனர் இருக்கை, பின் இருக்கை பயணிகளுக்கும் மேனுவல் ஏசி மற்றும் வீல் கவர்கள் உடன் 16 இன்ச்சில் இரும்பு சக்கரங்கள் முதலியவையும் பொருத்தப்படுகின்றன.

ஷோரூம் வளாகத்திற்குள் காட்சிதந்த பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப்-ட்ரக்!! படங்கள் வெளியீடு!

சற்று விலை அதிகம் கொண்ட வி-கிராஸில் இருந்து ஹை-லேண்டரை வேறுப்படுத்தும் பாகங்களுள் இரும்பு சக்கரங்களை முக்கியமானவைகளாக சொல்லலாம். இசட் & இசட் பிரெஸ்டிஜ் என்கிற இரு விதமான ட்ரிம் நிலைகளில் டி-மேக்ஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஷோரூம் வளாகத்திற்குள் காட்சிதந்த பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப்-ட்ரக்!! படங்கள் வெளியீடு!

வழங்கப்படும் வசதிகள் இசட் மற்றும் இசட் பிரெஸ்டிஜ் ட்ரிம்களில் வித்தியாசப்படுகின்றன. பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட 2021 இசுஸு டி-மேக்ஸில் 1.9 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஷோரூம் வளாகத்திற்குள் காட்சிதந்த பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப்-ட்ரக்!! படங்கள் வெளியீடு!

அதிகப்பட்சமாக 163 பிஎஸ் மற்றும் 360 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்ற ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

ஷோரூம் வளாகத்திற்குள் காட்சிதந்த பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப்-ட்ரக்!! படங்கள் வெளியீடு!

மேலும் இவற்றுடன் 2-சக்கர ட்ரைவ் மற்றும் 4-சக்கர ட்ரைவ் தேர்விலும் இந்த பிக்அப் ட்ரக் வாகனம் கிடைக்கிறது. ஆனால் மேனுவல்-2சக்கர ட்ரைவ் தேர்வில் மட்டுமே கிடைக்கும் டி-மேக்ஸ் ஹை-லேண்டரின் விலை ரூ.16.98 லட்சமாக உள்ளது.

ஷோரூம் வளாகத்திற்குள் காட்சிதந்த பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப்-ட்ரக்!! படங்கள் வெளியீடு!

வி-கிராஸின் இசட் ட்ரிம்-இன் விலை மேனுவல்-2சக்கர ட்ரைவ் தேர்வுடன் ரூ.19.98 லட்சமாகவும், மேனுவல்-4சக்கர ட்ரைவ் தேர்வுடன் ரூ.20.98 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் -4சக்கர ட்ரைவ் தேர்வுடன் மட்டுமே கிடைக்கும் டி-மேக்ஸ் வி-க்ராஸ் இசட்-பிரெஸ்டிஜின் விலை ரூ.24.49 லட்சமாக உள்ளது.

Most Read Articles

மேலும்... #இசுஸு #isuzu
English summary
BS6 Isuzu D-Max V-Cross Starts Reaching Dealerships – HD Pics.
Story first published: Sunday, May 30, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X