ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் பிரபல கார் உற்பத்தி நிறுவனம்! ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுக்கே சவால் விடும் போலிருக்கே!

விலையுயர்ந்த சொகுசு கார்களை உற்பத்தி செய்து வரும் புகாட்டி நிறுவனம் ஸ்மார்ட் வாட்சுகளை உற்பத்தி செய்வதற்காக பிரபல விஐஐடிஓ நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் களமிறங்கும் பிரபல கார் உற்பத்தி நிறுவனம்... ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுகளுக்கு போட்டி!!

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்ச் வாட்ச்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் புதுமுக ஸ்மார்ட் வாட்சை உருவாக்க புகாட்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சொகுசு கார் உற்பத்தியாளர் விஐஐடிஏ எனும் நிறுவனத்துடன் கூட்டணி வைத்திருக்கின்றது.

ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் களமிறங்கும் பிரபல கார் உற்பத்தி நிறுவனம்... ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுகளுக்கு போட்டி!!

இந்த கூட்டணியின் அடிப்படையிலேயே ஸ்மார்ட் வாட்ச்களை இரு நிறுவனங்களும் உருவாக்க இருக்கின்றன. இந்த வாட்சுகள் புகாட்டி நிறுவனத்தின் புகழ்மிக்க ஏதேனும் ஓர் கார் மாடல் பிராண்ட் பெயரில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் களமிறங்கும் பிரபல கார் உற்பத்தி நிறுவனம்... ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுகளுக்கு போட்டி!!

மூன்று புதிய ஸ்மார்ட் வாட்சுகள் உருவாக்கப்பட இருக்கின்றன. அவற்றை, பிரதிபலிக்கும் கட்டிங்-எட்ஜ் தொழில்நுட்பத்தில் உருவாக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. மேலும், ஸ்மார்ட் வாட்சுகள் செராமிக் முன்னொட்டுடன் உருவாக்கப்பட இருக்கின்றன.

ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் களமிறங்கும் பிரபல கார் உற்பத்தி நிறுவனம்... ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுகளுக்கு போட்டி!!

இதுதவிர, 90 வித்தியாசமான ஸ்போர்ட் மோட், உடல் நலத்தைக் காணிக்கும் மற்றும் உடற்பயிற்சி செயலி ஆகிய வசதிகளும் இந்த ஸ்மார்ட் வாட்சில் இடம் பெற இருக்கின்றன. மேலும், ஜிபிஎஸ், இதய துடிப்பைக் கண்கானிக்கும் இரட்டை சென்சார்கள் போன்ற மிக முக்கியமான தொழில்நுட்பங்களும் இந்த வாட்சில் இடம்பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் களமிறங்கும் பிரபல கார் உற்பத்தி நிறுவனம்... ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுகளுக்கு போட்டி!!

இத்தகைய சிறப்பம்சங்களைப் பெற இருக்கும் புகாட்டி வாட்சுகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் களமிறங்கும் பிரபல கார் உற்பத்தி நிறுவனம்... ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுகளுக்கு போட்டி!!

ரப்பர் மணிக்கட்டு பட்டை அல்லது டைட்டானியம் பட்டை ஆகிய இரு விதமான தேர்வுகளிலும் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் ஸ்மார்ட் வாட்சுகள் கிடைக்க இருக்கின்றன. இத்துடன், இன்னும் சில தேர்வுகளையும் நிறுவனம் இவ்வாட்சில் புகாட்டி வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் களமிறங்கும் பிரபல கார் உற்பத்தி நிறுவனம்... ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுகளுக்கு போட்டி!!

390 x 390 பிக்சல் எல்இடி தொடுதிரை இந்த வாட்சில் இடம்பெற இருக்கின்றது. இது மிக சிறந்த தொடுதல் உணர்வை வழங்கும். கீரல்களை தவிர்க்கும் வசதியுடன் இந்த திரை மற்றும் வாட்சின் பட்டை எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 79,521 என்ற அதிகபட்ச ஆரம்பவிலையில் இருந்து இந்த வாட்ச் விற்பனைக்குக் வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #புகாட்டி #bugatti
English summary
Bugatti and VIITA Joined For Make New Smartwatch Range. Read In Tamil.
Story first published: Wednesday, June 2, 2021, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X