உலகின் மிகவும் அழகான ஹைப்பர் கார் எது தெரியுமா?.. இதோட அழகுல மயங்காத கார் பிரியரே இருக்க முடியாது!!

உலகின் மிகவும் அழகான ஹைப்பர் கார் என்கிற பட்டத்தை புகாட்டி (Bugatti) நிறுவனத்தின் புதுமுக தயாரிப்பு ஒன்று தட்டிச் சென்றிருக்கின்றது. இந்த கார் இன்னும் விற்பனைக்கே வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலகின் மிகவும் அழகான ஹைப்பர் கார் எது தெரியுமா?.. இதோட அழகுல மயங்காத கார் பிரியரே இருக்க முடியாது!!

உலகின் மிக அழகான ஹைபர் கார் எனும் பட்டத்தை புகாட்டி (Bugatti) நிறுவனத்தின் பொலிட் (Bolide) கார் தட்டிச் சென்றிருக்கின்றது. 36ஆம் ஆண்டு ஆட்டோ இன்டர்நேஷனல் விழா பாரிஸ் நகரத்தில் நடைபெற்று வருகின்றது. பந்தய டிராக்கை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இக்காரை புகாட்டி நிறுவனம் ஓர் கான்செப்ட் மாடலாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்திருந்தது.

உலகின் மிகவும் அழகான ஹைப்பர் கார் எது தெரியுமா?.. இதோட அழகுல மயங்காத கார் பிரியரே இருக்க முடியாது!!

இதைத்தொடர்ந்து, நடப்பாண்டின் தொடக்கத்தில் அக்காரை தயாரிப்பு மாடலாக நிறுவனம் உயர்த்தியது. இந்த வெர்ஷனே தற்போது உலகின் மிகவும் ஹைப்பர் கார் மாடல் என்ற பட்டத்தைச் சூடியிருக்கின்றது. இந்த கார் இன்னும் பெயரே வைக்கப்படாத மூன்று ஹைப்பர் கார்கள் உடன் போட்டியிட்டது குறிப்பிடத்தகுந்தது.

உலகின் மிகவும் அழகான ஹைப்பர் கார் எது தெரியுமா?.. இதோட அழகுல மயங்காத கார் பிரியரே இருக்க முடியாது!!

அவற்றை, தன்னுடைய அழகமான மற்றும் கவர்ச்சியான உருவத்தால் பின்னுக்கு தள்ளி இவ்விருதை பொலிட் பெற்றிருக்கின்றது. தயாரிப்பு மாடலாக பொலிட் உயர்த்தப்பட்டிருந்தாலும், தற்போது அக்கார் சோதனையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது புகாட்டி நிறுவனம் பொலிட் காரை தொடர் சாலை பரிசோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தி வருகின்றது.

உலகின் மிகவும் அழகான ஹைப்பர் கார் எது தெரியுமா?.. இதோட அழகுல மயங்காத கார் பிரியரே இருக்க முடியாது!!

இப்போட்டியின் முக்கிய அடிப்படை தகுதி என்ன என்றால்?, போட்டியில் கலந்துக் கொள்ளும் ஹைப்பர் கார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான யூரோக்களுக்கு விற்கப்பட வேண்டும். ஸ்போர்ட்டியான தோற்றம் மற்றும் அதீத திறன் வெளிப்பாடு ஆகியவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே தகுதிகள் ஆகும்.

உலகின் மிகவும் அழகான ஹைப்பர் கார் எது தெரியுமா?.. இதோட அழகுல மயங்காத கார் பிரியரே இருக்க முடியாது!!

இவையனைத்திலும் எதிர்பார்த்ததைவிட புகாட்டி பொலிட் ஹைப்பர் கார் மிக சிறந்ததாக காட்சியளித்திருக்கின்றது. எனவேதான் இக்காரு உலகின் மிகவும் அழகிய ஹைப்பர் என்ற பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இறுதி உற்பத்தி மாடல் பொலிட் அடுத்து வரும் சில வருடங்களுக்கு விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகின் மிகவும் அழகான ஹைப்பர் கார் எது தெரியுமா?.. இதோட அழகுல மயங்காத கார் பிரியரே இருக்க முடியாது!!

ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் தகவல் இக்காரின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கின்றது. குறிப்பாக, ஹைப்பர் மற்றும் சூப்பர் கார் பிரியர்களை இந்த தகவல் சுண்டியிழுக்கும் வகையில் அமைந்திருக்கின்றது என்றே கூறலாம். புகாட்டி நிறுவனம் பொலிட் காரை ஸ்போர்ட்ஸ் ட்ராக்கை கருத்தில் கொண்டு உருவாக்கியிருக்கின்றது.

உலகின் மிகவும் அழகான ஹைப்பர் கார் எது தெரியுமா?.. இதோட அழகுல மயங்காத கார் பிரியரே இருக்க முடியாது!!

ஆகையால், மிகவும் தனித்துவமான உட்பகுதி, உடற்கூறுகளைக் கொண்டதாக பொலிட் காட்சியளிக்கின்றது. இந்த காரை வேறு எந்த தயாரிப்பின் பிரதிபலிக்காகவும் புகாட்டி உருவாக்கவில்லை என கூறப்படுகின்றது. இந்த காரின் கான்செப்ட் மாடலில் 8.0 லிட்டர், குவாட் டர்போ, டபிள்யூ16 கேசோலின் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 1,850 பிஎஸ் திறனை வெளியேற்றும் திறன் கொண்டது.

உலகின் மிகவும் அழகான ஹைப்பர் கார் எது தெரியுமா?.. இதோட அழகுல மயங்காத கார் பிரியரே இருக்க முடியாது!!

அதேவேலையில் இக்கார் ஸ்பெஷல் எரிபொருளான 110 ஆக்டேன் ரேஸ் எரிபொருளில் மட்டுமே இயங்கும். ஆனால், இதன் தயாரிப்பு வெர்ஷனில் 98 ஆக்டேன் எரிபொருளில் இயங்கக் கூடிய எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 1,600 பிஎஸ் வரை வெளியேற்றும் திறன் கொண்டது. புகாட்டி பொலிட் வாகனத்தின் ஒட்டுமொத்த எடை 1,450 கிலோ ஆகும்.

உலகின் மிகவும் அழகான ஹைப்பர் கார் எது தெரியுமா?.. இதோட அழகுல மயங்காத கார் பிரியரே இருக்க முடியாது!!

புகாட்டி பொலிட் ஹைப்பர் காருக்கு விருது பெற்றது பற்றி அக்காரை வடிவமைத்தவர் கூறியதாவது, "மிக சிறந்த வடிவமைப்பிற்காக கிடைக்கப்பட்டிருக்கும் இந்த விருது எங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு மரியாதை. எங்களின் புகழ்பெற்ற வடிவமைப்பாளர் குழுவிற்கு இந்த புகழ் சமர்பனம். புதுமையான ஸ்டைல் மற்றும் வசதியுடன் பொலிட் காரை உருவாக்க பாடுபட்ட ஒவ்வொருக்கும் இந்த விருது சென்று சேரும்" என்றார்.

உலகின் மிகவும் அழகான ஹைப்பர் கார் எது தெரியுமா?.. இதோட அழகுல மயங்காத கார் பிரியரே இருக்க முடியாது!!

புகாட்டி பொலிட் மிக மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். நிறுவனம் 40 யூனிட் பொலிட் ஹைப்பர் கார்களை மட்டுமே உருவாக்க திட்டமிட்டிருக்கின்றன. இந்த காரை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் 2024ம் ஆண்டில் டெலிவரி கொடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் மிகவும் அழகான ஹைப்பர் கார் எது தெரியுமா?.. இதோட அழகுல மயங்காத கார் பிரியரே இருக்க முடியாது!!

4.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மதிப்பில் 35 கோடிக்கும் அதிகமான விலையில் இது விற்பனைக்கு வர இருக்கின்றது. விற்பனைக்கு வரும்போது இதைவிட பல மடங்கு அதிக விலையில் வந்தாலும் சந்தேகிப்பதற்கு இடமில்லை. தற்போது கிடைத்திருக்கும் விருது இதன் விலையை உயர்த்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

மேலும்... #புகாட்டி #bugatti
English summary
Bugatti bolide hyper car gets the most beautiful hyper car award
Story first published: Wednesday, October 6, 2021, 13:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X