சிரோன் சூப்பர் ஸ்போர்ட் காரின் டாப் ஸ்பீடு இதுதானா? சோதனை செய்து பார்த்த புகாட்டி!!

உலகின் வேகமான தயாரிப்பு காராக புகழப்படும் புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் காரின் புதிய படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

சிரோன் சூப்பர் ஸ்போர்ட் காரின் டாப் ஸ்பீடு இதுதானா? சோதனை செய்து பார்த்த புகாட்டி!!

சமீபத்தில் உலகளவில் வெளியிடப்பட்ட சிரோன் சூப்பர் ஸ்போர்ட் காரை புகாட்டி நிறுவனம் தீவிரமாக சோதனை செய்து வருகிறது. அத்தகைய சோதனை ஓட்டங்களில் ஒன்றின் போது எடுக்கப்பட்ட படங்கள் தான் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

சிரோன் சூப்பர் ஸ்போர்ட் காரின் டாப் ஸ்பீடு இதுதானா? சோதனை செய்து பார்த்த புகாட்டி!!

புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் காரின் இறுதிக்கட்ட சோதனையாக, அதன் அதிவேகத்தை சோதிக்கும் முயற்சியாக இது இருக்கலாம் என கூறப்படும் நிலையில், இந்த அதிவேக சோதனை ஓட்டம் ஃபோக்ஸ்வேகனின் எஹ்ரா-லெஸியன் சோதனை களத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிரோன் சூப்பர் ஸ்போர்ட் காரின் டாப் ஸ்பீடு இதுதானா? சோதனை செய்து பார்த்த புகாட்டி!!

சமீபத்திய ஓட்டத்தில் சிரோன் சூப்பர் ஸ்போர்ட் கார் அதன் டாப் ஸ்பீடாக 440kmph-ஐ எட்டியுள்ளது. ஆனால் இது 2019ல் சிரோன் சூப்பர் ஸ்போர்ட் 300+ மாடல் எட்டிய 490.48kmph வேகத்தை காட்டிலும் சற்று குறைவாகும்.

சிரோன் சூப்பர் ஸ்போர்ட் காரின் டாப் ஸ்பீடு இதுதானா? சோதனை செய்து பார்த்த புகாட்டி!!

அளவீடுகளை சரியாக மதிப்பீடு செய்ய சிரோன் சூப்பர் ஸ்போர்ட்டின் இந்த அதிவேக சோதனையில் பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான புகாட்டி கிட்டத்தட்ட 100 கூடுதல் சென்சார்களை பயன்படுத்தியுள்ளது. இவற்றின் மூலம் காரின் காற்று அழுத்தம் மற்றும் வெப்பநிலை உள்ளிட்ட முக்கிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிரோன் சூப்பர் ஸ்போர்ட் காரின் டாப் ஸ்பீடு இதுதானா? சோதனை செய்து பார்த்த புகாட்டி!!

புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட்டும், சூப்பர் ஸ்போர்ட் 300+ காரும் பல தொழிற்நுட்ப அம்சங்களில் ஒரு மாதிரியாக உள்ளன. இந்த வகையில் இரண்டிலும் 8.0 லிட்டர் குவாட்-டர்போ டபிள்யூ16 என்ஜினை புகாட்டி நிறுவனம் பொருத்தியுள்ளது.

சிரோன் சூப்பர் ஸ்போர்ட் காரின் டாப் ஸ்பீடு இதுதானா? சோதனை செய்து பார்த்த புகாட்டி!!

இந்த குவாட்-டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 1,578 பிஎச்பி மற்றும் 1,600 என்எம் டார்க் திறனை பெறுவதற்கு போதுமானதாக உள்ளது. இந்த இரு சிரோன் கார்களுக்கு இடையேயான முக்கிய மாற்றம் டிரான்ஸ்மிஷனில் கொண்டுவரப்பட்டுள்ளது.

சிரோன் சூப்பர் ஸ்போர்ட் காரின் டாப் ஸ்பீடு இதுதானா? சோதனை செய்து பார்த்த புகாட்டி!!

சிரோன் சூப்பர் ஸ்போர்ட்டில் 403kmph வேகத்தை எட்டும் வரையில் 7வது கியருக்கு மாற்ற முடியாது. டாப் ஸ்பீடான 440kmph வரையில் சூப்பர் ஸ்போர்டின் ஹேண்ட்லிங்கை எங்களது பொறியியலாளர் திருத்தியமைத்துள்ளனர் என்று புகாட்டி நிறுவனத்தின் சேசிஸ் வடிவமைப்பு பிரிவின் முதன்மை அதிகாரி ஜச்சின் ஸ்வால்பே தெரிவித்துள்ளார்.

சிரோன் சூப்பர் ஸ்போர்ட் காரின் டாப் ஸ்பீடு இதுதானா? சோதனை செய்து பார்த்த புகாட்டி!!

இதனால் அதிவேகத்திலும் சிரோன் சூப்பர் ஸ்போர்ட் கார் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவொரு சமரசமுமின்றி செயல்படும் என்பது மட்டும் உறுதி. அல்ட்ரா-எக்ஸ்க்ளூசிவ் காராக கொண்டுவரப்படும் சிரோன் சூப்பர் ஸ்போர்ட் வெறும் 60 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிரோன் சூப்பர் ஸ்போர்ட் காரின் டாப் ஸ்பீடு இதுதானா? சோதனை செய்து பார்த்த புகாட்டி!!

அதேநேரம் சிரோன் சூப்பர் ஸ்போர்ட் 300+ காரின் 30 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளன. இவை இரண்டும் புதிய ஸ்பிளிட்டர், ஃபெண்டர்களின் வட்ட வடிவிலான காற்று துளைகள், வித்தியாசமான சக்கரங்கள், நீட்டிக்கப்பட்ட பின்பகுதி உள்ளிட்டவற்றால் வேறுப்படுகின்றன.

Most Read Articles
மேலும்... #புகாட்டி #bugatti
English summary
Bugatti Chiron Super Sport Tested To Staggering 440 Kmph Top Speed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X