Just In
- 18 min ago
சிங்கிள் யூனிட்டைகூட விற்காமல் நாட்டை விட்டு வெளியேறும் சீன கார் நிறுவனம்! இப்படி ஒரு அடிய யாருமே எதிர்பாக்கல!
- 3 hrs ago
மவுசு துளியளவும் குறையல... மிக குறுகிய காலத்தில் 1.4 மில்லியன் டூ-வீலர்களை விற்பனை செய்த ஹீரோ! தரமான சம்பவம்!
- 3 hrs ago
மீண்டும் டாடாவை முந்தி 2வது இடத்திற்கு வந்த ஹூண்டாய்!! கார்கள் விற்பனையில் பலத்த போட்டி!
- 3 hrs ago
ராயல் என்பீல்டிற்கு மவுசு குறைகிறதா? இதை பார்த்தா அப்படி தான் தெரியுது...
Don't Miss!
- News
மத்திய நிலத்தடி நீர் ஆணைய உத்தரவு.. தமிழகத்திற்கு ஏன் பொருந்தாது? விளக்கும் பாஜக பிரமுகர்!
- Technology
போச்சு! WhatsApp-இல் இருந்தே ஒரே ஒரு உளவு பார்க்குற மேட்டரும் இப்போ போச்சு!
- Movies
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்னவாகும்... இப்படித்தான் ஆகும்!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்கள செல்வமும், புகழும் தேடி வருமாம்... இந்த அதிர்ஷ்ட ராசிகளில் உங்க ராசி இருக்கா?
- Finance
பழைய கார், பைக்-ஐ எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவது ஈசி.. எவ்வளவு செலவாகும் தெரியுமா..?!
- Sports
கேப்டனாக தினேஷ் கார்த்திக்கிற்கு முதல் வெற்றி.. பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரம்.. முழு விவரம்
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இத்தாலி, மிலான் நகர சாலைகளில் உலாவந்த இரு லக்சரி புகாட்டி கார்கள்!! ரசிகர்கள் செம்ம குஷி...!
புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் கார் இத்தாலியில் நடைபெற்ற மிலானோ மோன்ஸா ஓபன்-ஏர் மோட்டார் கண்காட்சியின் மூலம் உலகளவில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனுடன் புகாட்டி போலிட் என்ற ட்ராக்கில் மட்டும் பயன்படுத்தக்கூடிய ஹைப்பர் காரும் கண்காட்சியில் காட்சி தந்துள்ளது. இந்த ட்ராக்-ஒன்லி ஹைப்பர் கார் கடந்த ஆண்டில் வெளியிடப்பட்டது.

இந்த மோட்டார் கண்காட்சியில் இந்த இரு லக்சரி கார்களும் இத்தாலி, மிலான் நகர சாலைகளில் கம்பீரமாக, பொதுமக்களின் பார்வைக்காக உலாவந்தன. இதற்கு முன்னதாக புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் கார் சில தினங்களுக்கு முன்பு புகாட்டி நிறுவன தலைவர் ஸ்டீபன் விங்கெல்மனின் முன்னிலையில் இணையத்தில் வெளியானது.

இந்த புதிய சிரோன் மாடலில் 8.0 லிட்டர் டபிள்யூ16 என்ஜின் மற்றும் 4 டர்போக்கள் உடன் லக்சரியான சவுகரியம் மற்றும் அதிக செயல்திறன் வழங்கப்பட்டுள்ளதாக புகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே என்ஜின் தான் புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் 300+ என்ற ஹைப்பர்காரிலும் வழங்கப்படுகிறது.

ஆனால் சிரோன் சூப்பர் ஸ்போர்ட்டில் கூடுதல் வேகத்திற்காக சற்று கூடுதல் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த என்ஜினை புகாட்டி சற்று திருத்தியமைத்துள்ளது. மேலும், உலகின் அதிவேகமான தயாரிப்பு கார் என்பதை நிரூப்பிக்கும் வகையில் அமுக்கி சக்கரங்களுடன் பெரிய அளவிலான டர்போசார்ஜர்கள் மற்றும் புதிய சேசிஸ் சிரோன் சூப்பர் ஸ்போர்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி 23 கிலோ குறைக்கப்பட்ட எடை மற்றும் கீழ்நோக்கி தாழ்த்தப்பட்ட முன்பகுதியினால் காரின் காற்று இயக்கவியல் பண்பு மேம்பட்டுள்ளது. இவை எல்லாவற்றின் உதவியுடன் இந்த ஹைப்பர் காரை அதிகப்பட்சமாக மணிக்கு 440கிமீ வேகத்தில் ஓட்ட முடியும் என்கிறது புகாட்டி.

இந்த ஹைப்பர் ஸ்போர்ட்ஸ் காரை புகாட்டி நிறுவனம் வெறும் 30 யூனிட்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யவுள்ளதாகவும், இவை ஒவ்வொன்றின் விலையும் 3.2 மில்லியன் யூரோக்கள் (கிட்டத்தட்ட ரூ.28.50 கோடி) எனவும் ஏற்கனவே புகாட்டி தெரிவித்திருந்தது.

சிரோனின் அதே ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், புகாட்டி போலிட் அதிகப்பட்சமாக 1825 பிஎச்பி மற்றும் 1850 என்எம் டார்க் திறன் வரையிலான என்ஜின் ஆற்றலில் இயங்கக்கூடியதாக உள்ளது. இதன் மூலமாக சமீபத்தில் உருவாக்கப்பட்ட வேகமான மற்றும் எடை குறைவான வாகன கான்செப்ட், போலிட் என புகாட்டி தெரிவித்துள்ளது.

0-வில் இருந்து 100kmph வேகத்தை போலிட் கான்செப்ட் மாடலில் வெறும் 2.17 வினாடிகளில் எட்டிவிட முடியுமாம். ட்ராக்கில் பயன்படுத்தக்கூடிய இந்த ஹைப்பர் காருக்கு விலை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.