உலகின் அதிவேகமான புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் கார்!! விலையை கேட்டா மயக்கமே வருது...!

உலகின் வேகமான காராக தயாரிக்கப்பட்டுள்ள சிரோன் சூப்பர் ஸ்போர்ட் காரை பற்றிய விபரங்களை படங்களுடன் புகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகின் அதிவேகமான புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் கார்!! விலையை கேட்டா மயக்கமே வருது...!

உலகளவில் புகாட்டியின் சிரோன் கார்களுக்கு என்றே தனி மதிப்பு உள்ளது. ஏனெனில் தற்சமயம் உள்ள அதிகளவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் வேகமான கார் என்று பார்த்தால் அதில் புகாட்டி சிரோனும் ஒன்றாக இருக்கும்.

உலகின் அதிவேகமான புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் கார்!! விலையை கேட்டா மயக்கமே வருது...!

அத்தகைய சிறப்புமிக்க இந்த புகாட்டி ஹைப்ரீட் காரின் ஸ்போர்ட் வெர்சனும் விற்பனையில் உள்ளது. இது ஸ்டாண்டர்ட் சிரோனை காட்டிலும் கூடுதல் செயல்திறன்மிக்கதாக வடிவமைக்கப்படுகிறது. இதுவும் போதாது என்போர்க்காகவே சிரோன் சூப்பர் ஸ்போர்ட் கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

உலகின் அதிவேகமான புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் கார்!! விலையை கேட்டா மயக்கமே வருது...!

விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று சொல்வதை விட விற்பனை செய்யப்பட்ட சூப்பர்கார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் உலகம் முழுவதிலுமே வெறும் 30 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ள சிரோன் சூப்பர் ஸ்போர்ட்கள் அனைத்தும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.

உலகின் அதிவேகமான புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் கார்!! விலையை கேட்டா மயக்கமே வருது...!

3.2 மில்லியன் யூரோக்களில் (கிட்டத்தட்ட ரூ.28.50 கோடி) விலையினை பெற்றுள்ள இந்த சூப்பர் ஸ்போர்ட் கார் தான் தற்போதைக்கு, உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படும், சாலையில் ஓட்ட அனுமதி பெற்ற அதிவேகமான காராகும்.

உலகின் அதிவேகமான புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் கார்!! விலையை கேட்டா மயக்கமே வருது...!

இதற்காக சிரோனின் வழக்கமான தொழிற்நுட்ப பாகங்களில் ஏகப்பட்ட மாற்றங்களை புகாட்டி நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இவற்றில் முக்கியமானதாக, மிகவும் திறமையான அமுக்கி சக்கரங்களுடன் பெரிய டர்போசார்ஜர்கள், அதிவேகத்திற்காக புதிய சேசிஸ் மற்றும் தாழ்வான முன்பகுதி உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

உலகின் அதிவேகமான புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் கார்!! விலையை கேட்டா மயக்கமே வருது...!

இவை மட்டுமின்றி, காற்று இயக்கவியலுக்கு இணக்கமானதாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் ஸ்போர்ட் மாடலின் எடை கிட்டத்தட்ட 23 கிலோ வரையில் குறைந்துள்ளது. இவற்றுடன், நான்கு டர்போக்களுடன் முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட 8.0 லிட்டர் டபிள்யூ16 என்ஜினை புகாட்டி நிறுவனம் சிரோன் சூப்பர் ஸ்போர்ட்டில் பொருத்தியுள்ளது.

உலகின் அதிவேகமான புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் கார்!! விலையை கேட்டா மயக்கமே வருது...!

மேற்கூறப்பட்ட பிரத்யேக அம்சங்களினால் இந்த டபிள்யூ16 என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 1,600 எச்பி மற்றும் 1,600 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை பெற முடியும். இது வழக்கமான புகாட்டி சிரோன் மாடலை காட்டிலும் 100 எச்பி அதிகமாகும்.

உலகின் அதிவேகமான புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் கார்!! விலையை கேட்டா மயக்கமே வருது...!

0-வில் இருந்து 100kmph வேகத்தை 3 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் அடைந்தவிடக்கூடிய சிரோன் சூப்பர் ஸ்போர்ட் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 440கிமீ ஆகும். ஸ்டாண்டர்ட் சிரோன் உடன் ஒப்பிடுகையில் இந்த சூப்பர் ஸ்போர்ட் கார் 300kmph வேகத்தை 1 வினாடிக்கு முன்பாகவே எட்டிவிடக்கூடியது.

உலகின் அதிவேகமான புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் கார்!! விலையை கேட்டா மயக்கமே வருது...!

சிரோன் சூப்பர் ஸ்போர்ட் காரின் தயாரிப்பு பணிகளை பிரான்ஸில் உள்ள தொழிற்சாலையில் விரைவில் புகாட்டி நிறுவனம் துவங்கவுள்ளது. இந்த ஹைப்பர் ஸ்போர்ட்ஸ் கார்கள் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யும் பணிகள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #புகாட்டி #bugatti
English summary
Bugatti Chiron Super Sport, world's fastest car, debuts with 1,600 horsepower.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X