கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்!! இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்!

கார்கள் முதன்முதலாக தயாரிக்கப்பட்ட ஆரம்ப காலக்கட்டத்தில் ப்ரேக்குகள் மற்றும் ஹார்ன்களை தவிர்த்து வேறெந்த அம்சமும் பயணிகளின் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பிற்கு வழங்கப்படவில்லை. ஆனால் இப்போது தன்னிச்சையாகவே இயங்கக்கூடிய அளவிற்கு கார்களின் தொழிற்நுட்பங்கள் கண்டறியப்பட்டுவிட்டன.

கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்!! இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்!

இதனால், விபத்துகளின்போது பயணிகளின் பாதுகாப்பிற்கு குறைந்தப்பட்சம் முன் இருக்கை பயணிகளுக்கான காற்றுப்பைகள் ஆவது புதிய கார்களில் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வழங்கப்பட வேண்டும் என்று இந்திய அரசாங்கம் சமீபத்தில் ஆணை வெளியிட்டது. அதேநேரம் ஏற்கனவே விற்பனையில் உள்ள கார் மாடல்களுக்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஓட்டுனருக்கான காற்றுப்பைகள் உடன் குறைந்த விலையில் தற்சமயம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் சில கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்!! இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்!

மாருதி சுஸுகி ஆல்டோ 800

ஆல்டோ 800, இந்தியாவில் கார்களை பற்றிய ஆர்வம் உள்ளவர் எவர் ஒருவருக்கும் நன்கு பரீட்சையமான மாருதி தயாரிப்பு. பல வருடங்களாக மாருதி சுஸுகியின் சிறந்த விற்பனை மாடலாக விளங்கி வரும் இந்த சிறிய ரக காரில் ஓட்டுனர் பக்கவாட்டிற்கான காற்றுப்பை நிலையாக பொருத்தப்பட்டு வழங்கப்படுகிறது.

கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்!! இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்!

அதேநேரம் முன் இருக்கை பயணிக்கான காற்றுப்பையையும் ஆல்டோ 800 காரில் கூடுதல் தேர்வாக தயார்ப்பு நிறுவனம் வழங்குகிறது. ஆனால் ஆரம்ப நிலை வேரியண்ட்களில் இந்த பாதுகாப்பு அம்சம் வழங்கப்படுவதில்லை. மாருதி ஆல்டோ 800-இன் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.2.99 லட்சத்தில் இருந்து ரூ.4.48 லட்சம் வரையில் உள்ளன.

கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்!! இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்!

ஹூண்டாய் சாண்ட்ரோ

கடந்த 2018ல் புதிய தலைமுறை அப்கிரேடை பெற்றிருந்த சாண்ட்ரோ, ஹூண்டாய் நிறுவனம் ஸ்டாண்டர்டாக ஓட்டுனர் & முன் இருக்கை பயணி என இருவருக்குமான இரட்டை-காற்றுப்பைகள் உடன் இந்தியாவில் விற்பனை செய்யும் ஒரே கார் மாடலாக விளங்குகிறது.

கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்!! இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்!

ஆனால் முன் இருக்கை பயணிக்குமான காற்றுப்பை சாண்ட்ரோவின் ஸ்போர்ட்ஸ் (ஏஎம்டி) மற்றும் அஸ்டா மாடல்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. சாண்ட்ரோவின் விலைகள் தற்சமயம் ரூ.4.67 லட்சத்தில் இருந்து ரூ.6.35 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்!! இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்!

ரெனால்ட் க்விட்

பிரெஞ்சு கார் பிராண்ட்டான ரெனால்ட்டின் பிரபலமான சிறிய ரக காராக க்விட் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரில் முன் இருக்கை பயணிக்கான காற்றுப்பை கூடுதல் தேர்வாகவே வழங்கப்பட்டாலும், ஓட்டுனருக்கான காற்றுப்பை ஸ்டாண்டர்ட் அம்சமாக கொடுக்கப்படுகிறது. ரெனால்ட் க்விட்டின் விலைகள் ரூ.3.12 லட்சத்தில் இருந்து ரூ.5.31 லட்சம் வரையில் உள்ளன.

கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்!! இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்!

மாருதி சுஸுகி வேகன்ஆர்

இந்திய- ஜப்பானிய கூட்டணி நிறுவனமான மாருதி சுஸுகியின் வெற்றிகரமான கார் மாடல்களுள் ஒன்று வேகன்ஆர். ஹேட்ச்பேக் ரக காரான இதில் ஓட்டுனருக்கான காற்றுப்பை வேரியண்ட்கள் அனைத்திலும் வழங்கப்படுகிறது. ஆனால் முன் இருக்கை பயணிக்கான காற்றுப்பை வேகன்ஆரின் டாப் வேரியண்ட்டான இசட்.எக்ஸ்.ஐ-இல் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்!! இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்!

மற்ற வேரியண்ட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதல் பணம் செலுத்தியே இந்த வசதியை பெற முடியும். ரூ.4.65 லட்சத்தில் இருந்து ரூ.6.18 லட்சம் வரையில் இந்த மாருதி ஹேட்ச்பேக் காரின் விலைகள் உள்ளன.

கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்!! இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்!

மஹிந்திரா பொலிரோ

புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணங்க பிஎஸ்6 பொலிரோ கடந்த ஆண்டில் ரூ.7.54 லட்சத்தில் இருந்து ரூ.8.94 லட்சம் வரையிலான விலைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஓட்டுனருக்கான காற்றுப்பை உள்பட ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை பெறும் இந்த எஸ்யூவி வாகனம் தான் தற்சமயம் மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து அதிகளவில் விற்பனையாகும் காராக விளங்குகிறது.

கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்!! இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்!

இந்த பாதுகாப்பு அம்சங்களில் ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், பயணிகளின் எண்ணிக்கையை கண்டறியும் அமைப்பு, சீட் பெல்ட் அணியாததை நினைவுப்படுத்தும் வசதி உள்ளிட்டவை அடங்குகின்றன. இருப்பினும் முன் இருக்கை பயணிக்கான காற்றுப்பை பொலிரோவில் வழங்கப்படுவது இல்லை.

கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்!! இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்!

டட்சன் ரெடி-கோ

டட்சன் ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட் கார் ரூ.2.83 லட்சம் என்ற ஆரம்ப விலையில் கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்கிரேட் செய்யப்பட்ட ரெடி-கோ காரில் இபிடி உடன் ஏபிஎஸ், சீட்-பெல்ட் அணியாததை நினைவுப்படுத்துவான், பின்பக்க பார்க்கிங் உதவி சென்சார்கள், முன்பக்க டிஸ்க் ப்ரேக் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்!! இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்!

இரட்டை காற்றுப்பைகள் இந்த டட்சன் காரின் டாப் டி(O) வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. விலை குறைவான வேரியண்ட்களில் ஓட்டுனருக்கான காற்றுப்பை மட்டும் கொடுக்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Cars In India Which Are Available With Only The Driver-Side Airbag Safety Feature
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X