லிஸ்ட்ல சென்னை உண்டு! 8முக்கிய நகரங்களில் இ-கார் விற்பனையகத்தை தொடங்கும் சீன நிறுவனம்! இனிதான் ஆட்டமே இருக்கு!

சீன நிறுவனத்தின் பிரபலமான மின்சார கார் ஒன்று சென்னையில் விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவைகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம், வாங்க.

லிஸ்ட்ல சென்னை உண்டு! 8 முக்கிய நகரங்களில் மின் வாகன விற்பனையகத்தை தொடங்கும் சீன நிறுவனம்! இனிதான் ஆட்டமே இருக்கு!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான வாரன் பஃபே-வின் ஆதரவில் இயங்கி வரும் சீன நிறுவனம் பிஒய்டி (BYD). அண்மையில் இந்நிறுவனம் அதன் புகழ் பெற்ற மின்சார கார் மாடல்களில் ஒன்றான எம்பிவி இ6 எனும் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

லிஸ்ட்ல சென்னை உண்டு! 8 முக்கிய நகரங்களில் மின் வாகன விற்பனையகத்தை தொடங்கும் சீன நிறுவனம்! இனிதான் ஆட்டமே இருக்கு!

இந்த காரை இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே தற்போது பிஒய்டி விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த நிலையில், தன் விற்பனை எல்லையை விரிவாக்கும் பணியில் பிஒய்டி களமிறங்கியிருக்கின்றது. இதுகுறித்த தகவலையே நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கும்.

லிஸ்ட்ல சென்னை உண்டு! 8 முக்கிய நகரங்களில் மின் வாகன விற்பனையகத்தை தொடங்கும் சீன நிறுவனம்! இனிதான் ஆட்டமே இருக்கு!

நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, நாட்டின் 8 முதன்மையான நகரங்களில் எம்பிவி இ6 மின்சார கார் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நடவடிக்கையின் அடிப்படையில் பிஒய்டி நிறுவனம் இந்தியாவின் 6 முக்கியமான வாகன விற்பனையாளர்களுடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது.

லிஸ்ட்ல சென்னை உண்டு! 8 முக்கிய நகரங்களில் மின் வாகன விற்பனையகத்தை தொடங்கும் சீன நிறுவனம்! இனிதான் ஆட்டமே இருக்கு!

சென்னை, பெங்களூரு, அஹமதாபாத், கொச்சி, மும்பை, நியூ டெல்லி, ஹைதராபாத் மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களையே தனது புதிய வர்த்தக நகரங்களாக பிஒய்டி நிறுவனம் தேர்வு செய்திருக்கின்றது. இந்த நகரங்களில் புதியதாக வர்த்தகத்தைத் தொடங்குவதற்காகவே பிஒய்டி ஆறு பிரபல விற்பனையாளர்களுடன் கூட்டணியைத் தொடங்கியுள்ளது.

லிஸ்ட்ல சென்னை உண்டு! 8 முக்கிய நகரங்களில் மின் வாகன விற்பனையகத்தை தொடங்கும் சீன நிறுவனம்! இனிதான் ஆட்டமே இருக்கு!

சென்னைக்காக குன் ஆட்டோ குழுமத்துடனும், அஹமதாபாத் நகரத்திற்காக கார்கோ மோட்டார்ஸுடனும், ஹைதரபாத்துக்காக மோடி குழுமத்துடன், கொச்சிக்காக இபிவிஎம் ஆட்டோகிராஃப்ட் உடன், நியூ டெல்லி - மும்பைக்காக லேண்ட்மார்க் ஆட்டமொபைல்ஸ் உடனும், மற்றும், பெங்களூரு - விஜயவாடா நகரங்களுக்காக பிபிஎஸ் மோட்டார்ஸ் குழுமத்துடனும் பிஒய்டி கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது.

லிஸ்ட்ல சென்னை உண்டு! 8 முக்கிய நகரங்களில் மின் வாகன விற்பனையகத்தை தொடங்கும் சீன நிறுவனம்! இனிதான் ஆட்டமே இருக்கு!

பிஒய்டி இ6 ஓர் பிரீமியம் தர எம்பிவி ரக மின்சார வாகனமாகும். ரஇந்தியாவில் இந்த ரகத்தில் விற்பனைக்கு வரும் முதல் மின்சார கார் மாடலும் இதுவே ஆகும். ஆகையால், இந்த காரின் வருகை இந்திய மின் வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

லிஸ்ட்ல சென்னை உண்டு! 8 முக்கிய நகரங்களில் மின் வாகன விற்பனையகத்தை தொடங்கும் சீன நிறுவனம்! இனிதான் ஆட்டமே இருக்கு!

ஆனால், அந்த மகிழ்ச்சிக்கு ஆப்பு வைக்கும் வகையில் புதிய மின்சார காரை வர்த்தக துறையை மட்டுமே மையமாகக் கொண்டு விற்பனைக்குக் கொண்டு வருவதாக நிறுவனம் அறிவித்தது. அதாவது, தொழில் துறை நிறுவனங்களுக்கு மட்டுமே மட்டுமே விற்பனைச் செய்யப்படும் என தெரிவித்து.

லிஸ்ட்ல சென்னை உண்டு! 8 முக்கிய நகரங்களில் மின் வாகன விற்பனையகத்தை தொடங்கும் சீன நிறுவனம்! இனிதான் ஆட்டமே இருக்கு!

இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் வாடகை மற்றும் கால் டாக்ஸி போன்ற சேவை நிறுவனங்களுக்கு பிஒய்டியின் இ6 எம்பிவி மின்சார கார் விற்பனைக்குக் கிடைக்கும். ஆகையால், இதனை தனி நபர்கள் தங்களின் பயன்பாட்டிற்கு வாங்க முடியாத நிலை. இது இந்த காரை பெரிதும் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்கள் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

லிஸ்ட்ல சென்னை உண்டு! 8 முக்கிய நகரங்களில் மின் வாகன விற்பனையகத்தை தொடங்கும் சீன நிறுவனம்! இனிதான் ஆட்டமே இருக்கு!

இந்த காருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 29.15 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். வெகு நீண்ட காலமாக இக்கார் இந்திய சாலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தநிலையில், எந்தவொரு பெரிய ஆரவாரமும் இன்றி கடந்த நவம்பர் 1ம் தேதி அன்று இக்கார் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.

லிஸ்ட்ல சென்னை உண்டு! 8 முக்கிய நகரங்களில் மின் வாகன விற்பனையகத்தை தொடங்கும் சீன நிறுவனம்! இனிதான் ஆட்டமே இருக்கு!

பிஒய்டி இ6 எம்பிவி எலெக்ட்ரிக் காரில் 71.7 kWh பிளேடு பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 520 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இப்பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் வைத்து சார்ஜ் செய்தால் 35 நிமிடங்களில் 30 சதவீதத்தில் இருந்து 80 வரை மிக வேகமாக சார்ஜாகிவிடும்.

லிஸ்ட்ல சென்னை உண்டு! 8 முக்கிய நகரங்களில் மின் வாகன விற்பனையகத்தை தொடங்கும் சீன நிறுவனம்! இனிதான் ஆட்டமே இருக்கு!

இதுபோன்று பல்வேறு கவர்ச்சியான அம்சங்களை இந்த கார் தாங்கியிருக்கின்றது. 10.1 இன்சிலான திருப்பும் வசதிக் கொண்ட தொடுதிரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திரை ப்ளூடூத் இணைப்பு மற்றும் ஒய்ஃபை இணைப்பு ஆகிய வசதிகளைக் கொண்டது. இத்துடன், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், லெதர் இருக்கைகள், காரின் டிரைவர் மற்றும் முன்பக்க பயணியின் இருக்கையை 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்ட பிரீமியம் தர அம்சங்களும் இ6 மின்சார காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Chinese car maker byd joins hand with 6 auto dealers for expansion
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X