சி5 ஏர்க்ராஸை தொடர்ந்து சிட்ரோனின் அடுத்த எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் கார் ஒன்று இந்தியாவில் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சி5 ஏர்க்ராஸை தொடர்ந்து சிட்ரோனின் அடுத்த எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சி3 ஏர்க்ராஸ் காரின் இந்த சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் காரின் சில பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

சி5 ஏர்க்ராஸை தொடர்ந்து சிட்ரோனின் அடுத்த எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

குறிப்பாக, எந்த நிறுவனத்தின் கார் இது என்பது தெரியாமல் இருப்பதற்காக காரின் முன் மற்றும் பின் பகுதியில் வழங்கப்படும் தயாரிப்பு நிறுவனத்தின் லோகோக்கள் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளன.

சி5 ஏர்க்ராஸை தொடர்ந்து சிட்ரோனின் அடுத்த எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இருப்பினும் ஆட்டோமொபைலில் ஆர்வம் உள்ளவர்கள் எவர் ஒருவராலும் இது சிட்ரோனின் தயாரிப்பு வாகனம் என்பதை எளிதாக கண்டுப்பிடித்துவிட முடியும். ஏனெனில் சிட்ரோன் கார்களுக்கே உண்டான வளைவுகள் மற்றும் லைன்களை இந்த சோதனை காரில் பார்க்க முடிகிறது.

சி5 ஏர்க்ராஸை தொடர்ந்து சிட்ரோனின் அடுத்த எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

சிட்ரோன் நிறுவனம் சி3 ஏர்க்ராஸ் மாடலை இந்தியாவில் நிச்சயம் அறிமுகப்படுத்தும் என்று உறுதியாக கூற இயலாது. ஆனால் ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான் மற்றும் கியா சொனெட்டிற்கு போட்டியாக சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவர சிட்ரோன் தயாராகி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன.

சி5 ஏர்க்ராஸை தொடர்ந்து சிட்ரோனின் அடுத்த எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இதனால் இந்த வகையில் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரான சி3 ஏர்க்ராஸ் நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது. சி3 ஏர்க்ராஸில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் உள்ளிட்டவை தேர்வுகளாக வழங்கப்படலாம் என வதந்திகள் வெளியாகி வருகின்றன.

சி5 ஏர்க்ராஸை தொடர்ந்து சிட்ரோனின் அடுத்த எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

பிஎஸ்ஏ மற்றும் ஃபோர்டு க்ரூப்புகள் இணைந்து உருவாக்கும் டுரா டார்க் டிடிசிஐ யூனிட்டை இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் சிட்ரோன் வழங்கலாம். ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இந்தியாவிலேயே உருவாக்கப்படும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இந்த கார் கொண்டுவரப்படலாம்.

சி5 ஏர்க்ராஸை தொடர்ந்து சிட்ரோனின் அடுத்த எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

அதேநேரம் ஆட்டோமேட்டிக் தேர்வும் சி3 ஏர்க்ராஸில் எதிர்பார்க்கப்படுகிறது. சிட்ரோன் பிராண்டின் மூலம் இந்திய சந்தையில் மீண்டும் நுழையும் பிஎஸ்ஏ க்ரூப் முதல் கார் மாடலாக இந்த ஏப்ரல் மாதத்தில் சி5 ஏர்க்ராஸை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது.

சி5 ஏர்க்ராஸை தொடர்ந்து சிட்ரோனின் அடுத்த எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்த சிட்ரோன் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் ஒரு பக்கம் நடைபெற்று வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. அறிமுகத்திற்கு முன்னதாக முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை அறிய அருகில் உள்ள டீலர்ஷிப் மையத்தினை அணுகவும்.

சி5 ஏர்க்ராஸை தொடர்ந்து சிட்ரோனின் அடுத்த எஸ்யூவி கார்!! இந்தியாவில் சோதனை ஓட்டம்!

சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் சமீபத்தில் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றை சிட்ரோன் திறந்திருந்தது நினைவுக்கூரத்தக்கது. ஒரே ஒரு 2.0 லிட்டர் டீசல் என்ஜின் உடன் விற்பனையை துவங்கவுள்ள சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் காரின் ஆரம்ப விலையை ரூ.30 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen C3 Aircross Spotted Testing In Kolkata. Read In Tamil.
Story first published: Friday, April 2, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X