சிட்ரோனின் இந்தியாவிற்கான புதிய மினி எஸ்யூவி கார்!! டாடா பஞ்ச்-சிற்கு போட்டியா?

சிட்ரோன் சி3 சிறிய ரக காரின் டீசர் படம் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சிட்ரோனின் இந்தியாவிற்கான புதிய மினி எஸ்யூவி கார்!! டாடா பஞ்ச்-சிற்கு போட்டியா?

பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் சிட்ரோன் இந்திய சந்தையில் சி5 ஏர்க்ராஸின் மூலம் இந்த ஆண்டு துவக்கத்தில் நுழைந்தது. ஃபீல், ஷைன் என்ற இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிட்ரோன் சி5 ஏர்க்ராஸின் விலைகள் ரூ.29.90 லட்சம் மற்றும் ரூ.30.40 லட்சமாக உள்ளன.

சிட்ரோனின் இந்தியாவிற்கான புதிய மினி எஸ்யூவி கார்!! டாடா பஞ்ச்-சிற்கு போட்டியா?

சிகேடி தயாரிப்பான இது இந்திய சந்தையை பொறுத்தவரையில் பிரீமியம் தரத்திலான வாகனமாகும். சி5 ஏர்க்ராஸை தொடர்ந்து சிட்ரோன் அடுத்ததாக சிறிய அளவிலான, விலை குறைவான எஸ்யூவி காரை இந்திய சந்தைக்கென அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த ஆரம்ப நிலை சிட்ரோன் கார் இந்தியாவில் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்ரோனின் இந்தியாவிற்கான புதிய மினி எஸ்யூவி கார்!! டாடா பஞ்ச்-சிற்கு போட்டியா?

தோற்றத்தை பொறுத்தவரையில், சிட்ரோனின் இந்த மினி எஸ்யூவி ஐரோப்பாவில் விற்பனையில் உள்ள சி3 எஸ்யூவி காரையே பெரிதும் ஒத்திருக்கும். இருப்பினும் பரிமாண அளவுகளில் இந்திய வெர்சன் அளவில் சற்று சிறியதாக இருக்கலாம். இதற்கு காரணம் இந்த புதிய சிட்ரோன் மினி எஸ்யூவி கார் முழுக்க முழுக்க இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமான ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ளது.

சிட்ரோனின் இந்தியாவிற்கான புதிய மினி எஸ்யூவி கார்!! டாடா பஞ்ச்-சிற்கு போட்டியா?

சி3 மாடலின் ஒரிஜினல் ப்ளாட்ஃபாரத்தை பயன்படுத்தி கொள்ள போவதில்லை. சிட்ரோனின் இந்த இந்திய ப்ளாட்ஃபாரம் காம்பெக்ட் எஸ்யூவி, ஹேட்ச்பேக் & செடான் என வெவ்வேறு விதமான உடலமைப்புகளில், வெவ்வேறான என்ஜின்களுடன் கார்களை உருவாக்க ஏற்றதாக இருக்குமாம். இன்னும் சொல்லப்போனால், இதன் உதவியுடன் எலக்ட்ரிக்கல் அல்லது ஹைப்ரீட்டில் கூட வாகனங்களை உருவாக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

சிட்ரோனின் இந்தியாவிற்கான புதிய மினி எஸ்யூவி கார்!! டாடா பஞ்ச்-சிற்கு போட்டியா?

தற்போது சிட்ரோனின் இந்திய சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த டீசர் படத்தில், சிட்ரோன் லோகோவை கொண்ட கார் ஒன்றின் முன்பக்கத்தை மட்டுமே பார்க்க முடிகிறது. இதன் நேர்த்தியான முன்பக்கத்தில் க்ரோம் க்ரில் மற்றும் பிளவுப்பட்ட வடிவிலான ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிட்ரோனின் இந்தியாவிற்கான புதிய மினி எஸ்யூவி கார்!! டாடா பஞ்ச்-சிற்கு போட்டியா?

இந்த படத்துடன், தனது டுவிட்டர் பதிவில், இந்தியர்களுக்கான இந்திய தயாரிப்பு. உங்களை செப்டம்பர் 16ஆம் தேதி சந்திக்கிறோம் எனவும் சிட்ரோன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்றப்படி, இந்த காரின் உட்புறத்தில் என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை காட்டும் டீசர் எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை.

சிட்ரோனின் இந்தியாவிற்கான புதிய மினி எஸ்யூவி கார்!! டாடா பஞ்ச்-சிற்கு போட்டியா?

எங்களுக்கு தெரிந்தவரையில் இந்த புதிய சிட்ரோன் காரின் உட்புற கேபினில், பல-செயல்பாட்டு 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம், எந்தவொரு சப்போர்ட்டும் இல்லாமல் நிற்கக்கூடிய ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி கொண்ட தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கிறோம்.

சிட்ரோனின் இந்தியாவிற்கான புதிய மினி எஸ்யூவி கார்!! டாடா பஞ்ச்-சிற்கு போட்டியா?

அத்துடன் என்ஜினை ஸ்டார்ட்/ஸ்டாப் செய்வதற்கு அழுத்து பொத்தான், மடக்கும் வசதி கொண்ட பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள், ரிவர்ஸ் கேமிரா, பின் இருக்கை பயணிகளுக்கு ஏசி மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவையும் இந்த புதிய சிட்ரோன் மினி எஸ்யூவி காரில் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

சிட்ரோனின் இந்தியாவிற்கான புதிய மினி எஸ்யூவி கார்!! டாடா பஞ்ச்-சிற்கு போட்டியா?

உட்புறத்தை போல் இந்த புதிய காரின் என்ஜின் தேர்வுகள் குறித்தும் தற்போதைக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. ஆனால் நமக்கு இதுவரையில் கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்த மினி எஸ்யூவி காரில் மூன்று விதமான என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படலாம். இந்த வகையில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் இரு விதமான ட்யூன்களில் வழங்கப்பட உள்ளது.

சிட்ரோனின் இந்தியாவிற்கான புதிய மினி எஸ்யூவி கார்!! டாடா பஞ்ச்-சிற்கு போட்டியா?

இதில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வெர்சனில் என்ஜின் அதிகப்பட்சமாக 83 பிஎச்பி பவரையும், டர்போசார்ஜ்டு வெர்சனில் 110 எச்பி பவரையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். அதேநேரம் நெகிழ்வு எரிபொருளை பெற்றுவரும் முதல் காராகவும் இந்த சிட்ரோன் மினி எஸ்யூவி கார் விளங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்ரோனின் இந்தியாவிற்கான புதிய மினி எஸ்யூவி கார்!! டாடா பஞ்ச்-சிற்கு போட்டியா?

இவற்றுடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வும் இந்த மினி எஸ்யூவியில் வழங்கப்படலாம். ஆனால் அறிமுகத்தின்போது மேனுவல் தேர்வில் மட்டுமே இந்த கார் வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. ஆட்டோமேட்டிக் தேர்வு எதிர்காலத்தில் வழங்கப்படலாம். சி5 ஏர்க்ராஸை போல் அல்லாமல், இந்த மினி எஸ்யூவி காரை சிட்ரோன் நிறுவனம் 90- 95% இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

சிட்ரோனின் இந்தியாவிற்கான புதிய மினி எஸ்யூவி கார்!! டாடா பஞ்ச்-சிற்கு போட்டியா?

இதன் மூலம் இந்த காரின் விலையினை மற்றவைகளுக்கு போட்டியாக ரூ.6 லட்சத்தில் இருந்து தயாரிப்பு நிறுவனத்தால் நிர்ணயிக்க முடியும். இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த சிறிய-அளவு எஸ்யூவி கார் நம் நாட்டு சந்தைக்காக மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தைகளுக்காகவும் தயாரிக்கப்படலாம்.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
citroen new model teaser.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X