இந்தியாவில் தயாரான முதல் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார்!! நமது தமிழ்நாட்டு தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளது...

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்து தொழிற்சாலையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் தயாரான முதல் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார்!! நமது தமிழ்நாட்டு தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளது...

க்ரூப் பிஎஸ்ஏ மீண்டும் சிட்ரோன் பிராண்டின் மூலமாக இந்திய சந்தைக்குள் நுழைய ஆயத்தமாகி வருகிறது. பியூஜியோட் போல் அல்லாமல் சிட்ரோன் பிராண்ட்டில் இருந்து நமது இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற கார்கள் வெளிவரவுள்ளன.

இந்தியாவில் தயாரான முதல் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார்!! நமது தமிழ்நாட்டு தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளது...

ஐரோப்பாவில், பிரான்ஸில் தலைமையிடத்தை கொண்டுள்ள சிட்ரோன் இந்திய சந்தையில் அதன் முதல் கார் மாடலாக சி5 ஏர்க்ராஸ் காரை கொண்டு வருகிறது. இதன் அறிமுகம் வரும் மாதங்களில் இருக்கலாம்.

இந்தியாவில் தயாரான முதல் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார்!! நமது தமிழ்நாட்டு தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளது...

ஆனால் உண்மையில் சிட்ரோனின் வருகை கடந்த வருடத்திலேயே இருக்க வேண்டியது. சி5 ஏர்க்ராஸ் காரை 10 ப்ரீமியம் ஷோரூம்களுடன் இந்த பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.

இந்தியாவில் தயாரான முதல் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார்!! நமது தமிழ்நாட்டு தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளது...

இந்த நிலையில் முதல் சி5 ஏர்க்ராஸ் கார் நமது தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்து வெளிவந்துள்ளது. அதேநேரம் இந்த கார்களில் பொருத்தப்படவுள்ள என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் தயாரிப்புகளுக்கு ஓசூரில் உள்ள தொழிற்சாலையை சிட்ரோன் நிறுவனம் பயன்படுத்தவுள்ளது.

இந்தியாவில் தயாரான முதல் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார்!! நமது தமிழ்நாட்டு தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளது...

மற்ற வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள சி5 காரின் அதே தோற்றத்தில்தான் இந்திய சி5 காரும் வடிவமைக்கப்பட்டிருப்பது வெளியாகியுள்ள படங்களை பார்க்கும்போது தெரிய வருகிறது. இந்த சிட்ரோன் காரில் மிக முக்கிய சிறப்பம்சமாக ஹைட்ராலிக் குஷின் சஸ்பென்ஷன் சிஸ்டம் வழங்கப்படவுள்ளது.

இந்தியாவில் தயாரான முதல் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார்!! நமது தமிழ்நாட்டு தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளது...

இதுமட்டுமின்றி பனோராமிக் சன்ரூஃப், ஒலியை உள்ளே அனுமதிக்காத ஜன்னல் கண்ணாடிகள், சாய்வான பின்பக்க இருக்கைகள், க்ரிப் கண்ட்ரோல் சிஸ்டம், ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை பார்க்க உதவும் வசதி, பார்க்கிங் உதவி, கால் அசைவில் செயல்படும் எலக்ட்ரிக் பின் கதவு, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றையும் சி5 ஏர்க்ராஸ் காரில் சிட்ரோன் வழங்குகிறது.

இந்தியாவில் தயாரான முதல் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார்!! நமது தமிழ்நாட்டு தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளது...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த சிட்ரோன் காரில் அதிகப்பட்சமாக 128 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 178 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
New Citroën C5 Aircross Suv Rolls Out From Thiruvallur Plant
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X