பெங்களூரில் சோதனை செய்யப்பட்ட சிட்ரோன் சிசி21 காம்பெக்ட்-எஸ்யூவி!! ஸ்பை படங்கள் வெளியீடு!

சிட்ரோன் சிசி21 காம்பெக்ட் எஸ்யூவி கார் ஒன்று பெங்களூரில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்ட போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து நமக்கு பிரத்யேகமாக கிடைக்க பெற்றுள்ள ஸ்பை படங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பெங்களூரில் சோதனை செய்யப்பட்ட சிட்ரோன் சிசி21 காம்பெக்ட்-எஸ்யூவி!! ஸ்பை படங்கள் வெளியீடு!

சிட்ரோன் நிறுவனம் சமீபத்தில் சி5 ஏர்க்ராஸ் கார் மூலமாக இந்திய சந்தையில் களம் புகுந்தது. இதனை தொடர்ந்து சிட்ரோன் பிராண்ட்டில் இருந்து அடுத்ததாக காம்பெக்ட் எஸ்யூவி கார் ஒன்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் சோதனை செய்யப்பட்ட சிட்ரோன் சிசி21 காம்பெக்ட்-எஸ்யூவி!! ஸ்பை படங்கள் வெளியீடு!

சிசி21 என்ற குறியீட்டு பெயரால் அழைக்கப்பட்டுவரும் இந்த சிட்ரோன் எஸ்யூவி வாகனம் தான் தற்போது பெங்களூரில் அறிமுகத்திற்கு முன்னதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்கள் ட்ரைவ்ஸ்பார்க் வாசகர் ஒருவரால் கிடைக்க பெற்றுள்ளது.

பெங்களூரில் சோதனை செய்யப்பட்ட சிட்ரோன் சிசி21 காம்பெக்ட்-எஸ்யூவி!! ஸ்பை படங்கள் வெளியீடு!

மற்ற வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்படும் இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் இந்த ஸ்பை படங்களில் முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது.

பெங்களூரில் சோதனை செய்யப்பட்ட சிட்ரோன் சிசி21 காம்பெக்ட்-எஸ்யூவி!! ஸ்பை படங்கள் வெளியீடு!

இதனால் காரை நிழல்போன்றே பார்க்க முடிகிறது. இருப்பினும் காரின் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள மாசு உமிழ்வை அளவிடும் அராய் (ARAI) சோதனை கருவிகளை தெளிவாக பார்க்க முடிகிறது. சிசி21 மாடலின் கடைசி அராய் சோதனை ஓட்டமாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது.

பெங்களூரில் சோதனை செய்யப்பட்ட சிட்ரோன் சிசி21 காம்பெக்ட்-எஸ்யூவி!! ஸ்பை படங்கள் வெளியீடு!

சிட்ரோன் சி3 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்படுவதால், கிட்டத்தட்ட அதன் ஸ்டைலில் தான் சிசி21 காம்பெக்ட் எஸ்யூவி காட்சியளிக்கும். முன்பக்கத்தில் பெரிய க்ரில்லின் மத்தியில் ஹெட்லேம்ப்களுடன் இணைக்கப்பட்ட, க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட சிட்ரோன் பிராண்டின் லோகோ பொருத்தப்பட்டிருக்கும்.

பெங்களூரில் சோதனை செய்யப்பட்ட சிட்ரோன் சிசி21 காம்பெக்ட்-எஸ்யூவி!! ஸ்பை படங்கள் வெளியீடு!

சி3 மாடலில் ஹெட்லேம்ப்கள், டிஆர்எல் & லோகோ உள்ளிட்டவை காரின் முன்பக்கத்திற்கு X-வடிவத்தை வழங்குகின்றன. ஃபாக் விளக்குகள் முன்பக்க பம்பரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சிட்ரோன் காரின் பக்கவாட்டு பகுதியில் காற்று துளைகள் வழங்கப்படுகின்றன.

பெங்களூரில் சோதனை செய்யப்பட்ட சிட்ரோன் சிசி21 காம்பெக்ட்-எஸ்யூவி!! ஸ்பை படங்கள் வெளியீடு!

இரட்டை-நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ள இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் மேற்கூரை தண்டவாளங்களையும் எதிர்பார்க்கிறோம். உட்புறத்தில் சிசி21 மாடல் கூடுதல் சவுகரியத்திற்காக மெமரி வசதியுடன் இருக்கை அமைப்பை பெற்றுவரலாம்.

பெங்களூரில் சோதனை செய்யப்பட்ட சிட்ரோன் சிசி21 காம்பெக்ட்-எஸ்யூவி!! ஸ்பை படங்கள் வெளியீடு!

பின் இருக்கை வரிசை 60:40 என்கிற விகிதத்தில் பிரிக்கும் விதத்தில் வழங்கப்பட உள்ளது. இதனால் உட்புறத்தில், பின்பகுதியில் கூடுதல் இட வசதி கிடைக்கும். சிட்ரோன் சி3 மாடலில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் சோதனை செய்யப்பட்ட சிட்ரோன் சிசி21 காம்பெக்ட்-எஸ்யூவி!! ஸ்பை படங்கள் வெளியீடு!

அதிகப்பட்சமாக 5500 ஆர்பிஎம்-இல் 108 பிஎச்பி மற்றும் 1500 ஆர்பிஎம்-இல் 205 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் நிலையாக டிரான்ஸ்மிஷன் தேர்வாக வழங்கப்படலாம்.

பெங்களூரில் சோதனை செய்யப்பட்ட சிட்ரோன் சிசி21 காம்பெக்ட்-எஸ்யூவி!! ஸ்பை படங்கள் வெளியீடு!

சிட்ரோன் சிசி21 என தற்போதைக்கு அழைக்கப்பட்டுவரும் சி3 க்ராஸ்ஓவர் மாடலுக்கு ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், டாடா நெக்ஸான், நிஸான் மேக்னைட் போன்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் போட்டியாக விளங்கும். இந்த சிட்ரோன் காம்பெக்ட் எஸ்யூவி காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.10 லட்சத்தில் இருந்து எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen has confirmed the launch of its second product in the Indian market, which will be a compact SUV. It is currently codenamed Citroen CC21 and has been recently spotted testing in Bangalore ahead of its launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X