இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் ஆமதாபாத்தில் திறப்பு!

இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் ஆமதாபாத் நகரில் திறக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் ஆமதாபாத்தில் திறப்பு!

பிரான்ஸ் நாட்டை பிஎஸ்ஏ குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிட்ரோன் நிறுவனம் மிக விரைவில் இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. முதல் கார் மாடலை களமிறக்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு காலத்தில், அதாவது வரும் ஜனவரி- மார்ச் இடையிலான காலக் கட்டத்தில் தனது முதல் கார் மாடலாக சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை களமிறக்க உள்ளது.

இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் ஆமதாபாத்தில் திறப்பு!

இதற்கு ஏதுவாக நாடு முழுவதும் புதிய கார் ஷோரூம்களை திறக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் தனது முதல் கார் ஷோரூமை குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் திறந்துள்ளது.

இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் ஆமதாபாத்தில் திறப்பு!

இந்த புதிய சிட்ரோன் கார் ஷோரூமிற்கு தனித்துவமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. அதாவது, சிட்ரோன் நிறுவனத்தின் 'La Maison' என்ற உலகளாவிய ஷோரூம் டிசைன் கொள்கையின் அடிப்படையில் இந்த ஷோரூம் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் ஆமதாபாத்தில் திறப்பு!

'லா மெய்சன்' என்பது சிட்ரோனின் இல்லம் என்ற பொருள்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு இந்த சிறப்பு அம்சங்கள் கொண்ட ஷோரூம் தாத்பரியத்தை சிட்ரோன் அறிமுகப்படுத்தியது. உலக அளவில் மொத்தம் 100 லா மேசன் கட்டமைப்பிலான ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் ஆமதாபாத்தில் திறப்பு!

இந்த நிலையில், இந்தியாவில் தனது முதல் ஷோரூமை லா மெய்சன் என்ற இந்த கான்செப்ட் அடிப்படையில் வடிவமைத்து திறந்துள்ளது சிட்ரோன் நிறுவனம். இந்த ஷோரூம்கள் பிரத்யேக அடையாளங்களை கொண்டுள்ளது. அதாவது, பெயிண்ட் வண்ணம், உட்புற வடிவமைப்பு ஆகியவை சிட்ரோன் நிறுவனத்தின் லா மேசன் கான்செப்ட் அடிப்படையில் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் ஆமதாபாத்தில் திறப்பு!

மேலும், இந்த ஷோரூமில் கார்களை நேரடியாகவும், டிவி திரைகள் வாயிலாகவும் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. சொகுசு கார் ஷோரூம்களுக்கு இணையான அம்சங்களுடன் இந்த ஷோரூம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கார் வாங்கும் அனுபவத்தை வழங்கும் என்று சிட்ரோன் பெருமிதம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் ஆமதாபாத்தில் திறப்பு!

ஆமதாபாத் நகரை தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட நாட்டின் 10 முக்கிய பெரு நகரங்களில் புதிய கார் ஷோரூம்களை திறப்பதற்கு சிட்ரோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் கார் மாடல் அறிமுகத்திற்கு முன்னதாகவே இந்த ஷோரூம்கள் திறக்கப்பட்டு, புக்கிங் பணிகள் துவங்கப்படும்.

Most Read Articles

மேலும்... #சிட்ரோவன் #citroen
English summary
Citroen India is all set to launch its first product in the Indian market, the C5 Aircross sometime in Q1 of 2021. Ahead of its launch in the Indian market, the French carmaker is setting up its dealer and service network across the country.
Story first published: Friday, January 22, 2021, 9:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X