எஸ்யூவி தோற்றம் கொண்ட, சிறிய அளவிலான சிட்ரோன் சி3 உலகளவில் வெளியீடு!! இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது!

இந்திய சந்தைக்கான சிட்ரோன் சி3 எஸ்யூவி கார் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சிட்ரோன் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எஸ்யூவி தோற்றம் கொண்ட, சிறிய அளவிலான சிட்ரோன் சி3 உலகளவில் வெளியீடு!! இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது!

இந்திய சந்தையில் தனது திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்தி வரும் சிட்ரோன் நிறுவனம் இந்தியாவிற்கான அதன் இரண்டாவது தயாரிப்பை இன்று (செப்.16) வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 4 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ள இந்த புதிய சிட்ரோன் கார், எஸ்யூவி டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஸ்யூவி தோற்றம் கொண்ட, சிறிய அளவிலான சிட்ரோன் சி3 உலகளவில் வெளியீடு!! இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது!

சி3 என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள சிட்ரோனின் இந்த புதிய எஸ்யூவி கார் இந்தியாவில் உள்ள சிட்ரோனின் தொழிற்சாலையில் உருவாக்கப்பட உள்ளது. இதனால் சிட்ரோன் சி3 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை நமது இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற அளவில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

எஸ்யூவி தோற்றம் கொண்ட, சிறிய அளவிலான சிட்ரோன் சி3 உலகளவில் வெளியீடு!! இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது!

புதிய சி3 மாடலை எஸ்யூவி என சிட்ரோன் நிறுவனம் அழைக்கவில்லை. எஸ்யூவி-ஆல் கவரப்பட்டு உருவாக்கப்பட்டது என்றே சிட்ரோன் அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதன் விலையினை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையில் எதிர்பார்க்கிறோம். இத்தகைய ஏற்கக்கூடிய விலையில் பல கார்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

எஸ்யூவி தோற்றம் கொண்ட, சிறிய அளவிலான சிட்ரோன் சி3 உலகளவில் வெளியீடு!! இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது!

அவற்றிற்கு இணையாக, ஸ்போர்ட்டியான தோற்றத்திலேயே சிட்ரோன் சி3 வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஆங்காங்கே ஆரஞ்ச் நிறங்களுடன் அவற்றை காட்டிலும் மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் இந்த புதிய சிட்ரோன் எஸ்யூவி கார் காட்சியளிக்கிறது. சி3 ஏர்க்ராஸ் உடன் ஒப்பிடுகையில் சி3 முற்றிலுமாக மாறுப்பட்ட தோற்றத்தை கொண்டுள்ளது.

எஸ்யூவி தோற்றம் கொண்ட, சிறிய அளவிலான சிட்ரோன் சி3 உலகளவில் வெளியீடு!! இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது!

புதிய சி3 மாடலின் முன்பக்கத்தில் ட்ராப்சாய்டல் ஹெட்லேம்ப்கள், நேர்த்தியான தோற்றத்தில் டிஆர்எல்கள், மெஷ் க்ரில் மற்றும் நேர்த்தியான ஏர் டேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க ஃபாக் விளக்குகளை சுற்றிலும் ஆரஞ்ச் நிறம் கொடுக்கப்பட்டுள்ளதை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள படங்களில் பார்க்கலாம்.

எஸ்யூவி தோற்றம் கொண்ட, சிறிய அளவிலான சிட்ரோன் சி3 உலகளவில் வெளியீடு!! இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது!

வெளிப்பக்கத்தில் சிட்ரோன் சி3 சுற்றிலும் கருப்பு நிற பிளாஸ்டிக் க்ளாடிங்குகளை கொண்டுள்ளது. இவற்றுடன் காரின் பக்கவாட்டில் வழங்கப்பட்டுள்ள பளிச்சிடும் பாகங்கள் நமது இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என சிட்ரோன் நம்பிக்கை கொண்டுள்ளது. இதன் மெஷின் கட் அலாய் சக்கரங்கள் ஸ்போர்டியான இரட்டை-நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

எஸ்யூவி தோற்றம் கொண்ட, சிறிய அளவிலான சிட்ரோன் சி3 உலகளவில் வெளியீடு!! இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது!

பின்பக்கத்தில் மெட்டாலிக் ஷேடில், கார் சறுக்குவதை தடுக்கும் தட்டுடன் பெரிய அளவிலான பம்பர் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்க கதவில் சிட்ரோன் லோகோ கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. டெயில்லேம்ப்கள் சில மடிப்புகளை கொண்டுள்ளன. அதேநேரம் இந்த டெயில்லைட்கள் சற்று காரின் பக்கவாட்டு பகுதிக்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளன.

எஸ்யூவி தோற்றம் கொண்ட, சிறிய அளவிலான சிட்ரோன் சி3 உலகளவில் வெளியீடு!! இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது!

ஒற்றை மற்றும் ட்யூல்-டோன் நிறத்தேர்வுகளில் சி3 இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். இதில் இரட்டை-நிற பெயிண்ட் தேர்வுகளில் A,B மற்றும் C பில்லர்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்படும். அதேநேரம் காரை நீங்கள் இரட்டை-நிற பெயிண்ட்டில் வாங்கும்போது, மேற்கூரை, பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் மற்றும் பக்கவாட்டு கீழ்ப்பகுதி உள்ளிட்டவை பளிச்சிடும் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு வழங்கப்படும்.

எஸ்யூவி தோற்றம் கொண்ட, சிறிய அளவிலான சிட்ரோன் சி3 உலகளவில் வெளியீடு!! இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது!

இவற்றுடன் வாடிக்கையாளர்கள் தங்களது சி3 எஸ்யூவி காரை கஸ்டமைஸ்ட் செய்து கொள்ளும் வாய்ப்பையும் சிட்ரோன் நிறுவனம் வழங்கவுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளரே தனது சிட்ரோன் சி3 காரின் தோற்றத்தை தீர்மானித்து கொள்ள முடியும். இதற்காக பிராண்டின் சில அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் வழங்கப்பட உள்ளன.

எஸ்யூவி தோற்றம் கொண்ட, சிறிய அளவிலான சிட்ரோன் சி3 உலகளவில் வெளியீடு!! இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு சிட்ரோன் சி3 காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் டிரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. சி3 எஸ்யூவி காரில் டீசல் என்ஜின் தேர்வு வழங்கப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை.

எஸ்யூவி தோற்றம் கொண்ட, சிறிய அளவிலான சிட்ரோன் சி3 உலகளவில் வெளியீடு!! இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது!

ஆனால், நெகிழ்வு-எரிபொருள் என்ஜினை இந்திய சந்தையில் பெறவுள்ள முதல் கார் சிட்ரோன் சி3 என்பது மட்டும் உறுதியாக தெரியும். இந்த வகையில் இந்த சிட்ரோன் காரில் பெட்ரோலையும் பயன்படுத்தலாம், அதேநேரம் பெட்ரோல் உடன் எத்தனாலை கலந்தும் பயன்படுத்தலாம். பெட்ரோல் விலை விண்ணை தொட்டுவரும் தற்போதைய சூழ்நிலையில், இந்த நெகிழ்வு-எரிபொருள் என்ஜின் அம்சம் நிச்சயம் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும்.

எஸ்யூவி தோற்றம் கொண்ட, சிறிய அளவிலான சிட்ரோன் சி3 உலகளவில் வெளியீடு!! இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது!

இந்திய அரசாங்கமும் பெட்ரோல் உடன் எத்தனால் கலந்து பயன்படுத்துவதை அடுத்த 2022ஆம் ஆண்டிற்குள் 10%-ஆக அதிகரிக்க சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்த சதவீதத்தை 2030ஆம் ஆண்டிற்குள் 20% ஆக உயர்த்தவும் ஒன்றிய அரசு விரும்புகிறது.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen introduced much awaited C3 compact-suv in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X