Just In
- 2 hrs ago
20 வருடங்களுக்கு பிறகும் விற்பனையில் கெத்து காட்டும் மஹிந்திரா பொலிரோ... சேல்ஸ் எங்கயோ போயிருச்சு...
- 3 hrs ago
மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...
- 5 hrs ago
தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?
- 6 hrs ago
கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!
Don't Miss!
- News
ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை!
- Sports
வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்
- Movies
நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்!
- Finance
அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..!
- Lifestyle
திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெங்களூரில் முதல் லே மைசன் ஷோரூமை திறந்தது சிட்ரோன்!! சி5 எஸ்யூவி காருக்கான முன்பதிவு துவங்கும் தேதி அறிவிப்பு
இந்திய சந்தையில் சமீபத்தில் நுழைந்த சிட்ரோன் பிராண்ட் அதன் முதல் பெங்களூர் லே மைசன் ஷோரூமை திறந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பெங்களூரில் கன்னிகம் சாலையில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய ஷோரூம் மூலம் வாடிக்கையாளர்கள் இயற்பியல் முறையிலும், டிஜிட்டல் முறையிலும் கார் வாங்கும் அனுபவத்தை பெறலாம்.

இந்த அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க ATAWADAC (எந்த நேரத்திலும் எந்த சாதனத்திலும் எந்த உள்ளடக்கமும்) தொழிற்நுட்ப வசதியை தயாரிப்பு நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

இதன்படி ஷோரூமுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் தங்களது முதன்மை சலுகையான சி5 ஏர்கிராஸ் எஸ்யூவியை நேரடியாகப் பார்ப்பார்கள், அதே நேரத்தில் டிஜிட்டல் தளத்தைப் பயன்படுத்தி எஸ்யூவியைத் தனிப்பயனாக்கவும், அவர்களின் தேவைக்கேற்ப மாற்றியமைத்தும் பார்க்க முடியும்.

விற்பனை மட்டுமின்றி, பெங்களூரில் அமைத்துள்ள லா மைசன் சிட்ரோன் ஷோரூம் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு முழு அளவிலான விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் டெஸ்ட் டிரைவ் அனுபவங்களையும் வழங்கும். சிட்ரோன் நிறுவனம் நிதி, காப்பீடு மற்றும் பிற சலுகைகளையும், 30 நிமிட உத்தரவாத வர்த்தக வசதியையும் இந்த ஷோரூமில் வழங்கவுள்ளது.

பெங்களூரில் தற்போது திறக்கபட்டிருப்பது சிட்ரோன் பிராண்டின் மூன்றாவது இந்திய ஷோரூம் ஆகும். முதல் டீலர்ஷிப் மையம் அகமதாபாத்திலும், இரண்டாவது ஷோரூம் நமது சென்னையில், ஆயிரம் விளக்கு பகுதியிலும் திறக்கப்பட்டது.

புதிய டீலர்ஷிப் மையத்தை திறந்தது குறித்து சிட்ரோன் இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவின் துணை தலைவர் ஜோயல் வெரானி கூறுகையில், "இந்த லா மைசன் சிட்ரோன் இயற்பியல்-டிஜிட்டல் ஷோரூம்கள் மூலம், இந்திய கார் நுகர்வோர் தனது கார் வாங்கும் அனுபவத்தை மேம்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். சி5 ஏர்கிராஸ் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்படும் நேரத்தில், சிட்ரோன் இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் லா மைசன் ஷோரூம்களை கொண்டிருக்கும்"

புதிய லா மைசன் சிட்ரோன் ஷோரூம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, தங்களின் வரவிருக்கும் சி5 ஏர்கிராஸ் எஸ்யூவிக்கான முன்பதிவு வருகிற மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. டீலர்ஷிப்பிலும் ஆன்லைனிலும் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள இந்த முன்பதிவிற்கான முன் தொகை ரூ.50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெலிவிரி பணிகள் கார் அறிமுகப்படுத்தப்பட்டு சில நாட்களிலேயே துவங்கப்பட்டுவிடும். சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்எஸ்ஏ உதவி, நிலையான 5-வருட உத்தரவாதம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படவுள்ளன.