ஹோண்டா சிட்டிக்கு போட்டியாக வரும் சிட்ரோன் செடான் கார்... அறிமுகம் எப்போது?

ஹோண்டா சிட்டி காருக்கு போட்டியாக வரும் சிட்ரோன் செடான் கார் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற விபரம் வெளியாகி இருக்கிறது.

ஹோண்டா சிட்டிக்கு போட்டியாக வரும் சிட்ரோன் செடான் கார்... அறிமுகம் எப்போது?

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிட்ரோன் நிறுவனம் வரும் மார்ச் மாதத்தில் முதல் கார் மாடலுடன் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. முதல் மாடலாக சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிந்ததே.

ஹோண்டா சிட்டிக்கு போட்டியாக வரும் சிட்ரோன் செடான் கார்... அறிமுகம் எப்போது?

இந்த நிலையில், அடுத்து ஒரு சப்-காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி கார்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதில், சப்-காம்பேக்ட் எஸ்யூவி வரும் தீபாவளி பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஹோண்டா சிட்டிக்கு போட்டியாக வரும் சிட்ரோன் செடான் கார்... அறிமுகம் எப்போது?

இதைத்தொடர்ந்து, புத்தம் புதிய மிட்சைஸ் செடான் காரையும் இந்தியாவில் களமிறக்க சிட்ரோன் திட்டமிட்டுள்ளது. அதாவது, ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியான ரகத்தில் இந்த கார் வர இருக்கிறது.

ஹோண்டா சிட்டிக்கு போட்டியாக வரும் சிட்ரோன் செடான் கார்... அறிமுகம் எப்போது?

இந்த நிலையில், இந்த புதிய செடான் கார் வரும் 2023ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

ஹோண்டா சிட்டிக்கு போட்டியாக வரும் சிட்ரோன் செடான் கார்... அறிமுகம் எப்போது?

இந்த புதிய சிட்ரோன் மிட்சைஸ் செடான் கார் மாடலானது சிசி26 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. போட்டியாளர்களைவிட தனித்துவமான டிசைன் அம்சங்கள், அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் மிகச் சிறப்பான ஓட்டுதல் மற்றும் பயண அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த மாடலை முன்னிறுத்த சிட்ரோன் திட்டமிட்டுள்ளது.

ஹோண்டா சிட்டிக்கு போட்டியாக வரும் சிட்ரோன் செடான் கார்... அறிமுகம் எப்போது?

புதிய சிட்ரோன் செடான் காரில் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இதில், டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் கொடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், சிறப்பான இடவசதியுடன் இந்த கார் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும்.

ஹோண்டா சிட்டிக்கு போட்டியாக வரும் சிட்ரோன் செடான் கார்... அறிமுகம் எப்போது?

சென்னை அருகே திருவள்ளூரில் உள்ள சிகே பிர்லா குழுமத்திற்கு சொந்தமான ஆலையில்தான் சிட்ரோன் கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. எனவே, இந்த புதிய செடான் காரும் சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.

Most Read Articles
மேலும்... #சிட்ரோவன் #citroen
English summary
According to report, Citroen is planning to launch new midsize sedan car in India by 2023.
Story first published: Saturday, February 27, 2021, 10:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X