நேரமே சரியில்ல... பிரான்ஸ் கார் நிறுவனத்தை புலம்ப வைத்த இந்திய சந்தை... போக போக பிக்அப் ஆயிரும் விடுங்க!

இந்திய சந்தையில் சரியான தொடக்கம் கிடைக்காமல், சிட்ரோன் நிறுவனம் கவலையில் ஆழ்ந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நேரமே சரியில்ல... பிரான்ஸ் கார் நிறுவனத்தை புலம்ப வைத்த இந்திய சந்தை... போக போக பிக்அப் ஆயிரும் விடுங்க!

சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் நுழைந்தது. இந்திய சந்தைக்கான சிட்ரோன் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி களமிறக்கப்பட்டது. இது விலை உயர்ந்த கார் ஆகும். 29.90 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் (எக்ஸ் ஷோரூம்) சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

நேரமே சரியில்ல... பிரான்ஸ் கார் நிறுவனத்தை புலம்ப வைத்த இந்திய சந்தை... போக போக பிக்அப் ஆயிரும் விடுங்க!

எனினும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப ஏராளமான வசதிகளை சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பெற்றுள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் நுழைந்த சமயத்தில், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமெடுத்து விட்டது. இதன் காரணமாக சிட்ரோன் நிறுவனத்திற்கு இந்தியாவில் சிறப்பான தொடக்கம் அமையவில்லை.

நேரமே சரியில்ல... பிரான்ஸ் கார் நிறுவனத்தை புலம்ப வைத்த இந்திய சந்தை... போக போக பிக்அப் ஆயிரும் விடுங்க!

கடந்த ஜூன் மாதம் இந்திய சந்தையில் வெறும் 41 சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார்களை மட்டுமே சிட்ரோன் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் இங்கே சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 2 சதவீத வளர்ச்சியாகும். கடந்த மே மாதம் சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 40 சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

நேரமே சரியில்ல... பிரான்ஸ் கார் நிறுவனத்தை புலம்ப வைத்த இந்திய சந்தை... போக போக பிக்அப் ஆயிரும் விடுங்க!

ஃபீல் மற்றும் ஷைன் என மொத்தம் 2 வேரியண்ட்களில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஷைன் வேரியண்ட்டின் விலை 31.90 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

நேரமே சரியில்ல... பிரான்ஸ் கார் நிறுவனத்தை புலம்ப வைத்த இந்திய சந்தை... போக போக பிக்அப் ஆயிரும் விடுங்க!

இதில், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் மற்றும் ஹெட்லேம்ப்கள், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், டிராக்ஸன் கண்ட்ரோல், இஎஸ்பி, பார்க் அஸிஸ்ட், பனரோமிக் சன்ரூஃப், ஹேண்ட்ஸ்-ஃப்ரீ டெயில்கேட் மற்றும் 8.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

நேரமே சரியில்ல... பிரான்ஸ் கார் நிறுவனத்தை புலம்ப வைத்த இந்திய சந்தை... போக போக பிக்அப் ஆயிரும் விடுங்க!

3 சிங்கிள்-டோன் மற்றும் 4 ட்யூயல்-டோன் என மொத்தம் 7 வண்ண தேர்வுகளில் இந்த எஸ்யூவி காரை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். இந்த எஸ்யூவி காரில், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 177 ஹெச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

நேரமே சரியில்ல... பிரான்ஸ் கார் நிறுவனத்தை புலம்ப வைத்த இந்திய சந்தை... போக போக பிக்அப் ஆயிரும் விடுங்க!

இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்திற்கு 10 டீலர்ஷிப்கள் உள்ளன. அதே நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர் பகுதியில் உள்ள ஆலையில் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரை சிட்ரோன் நிறுவனம் அசெம்பிள் செய்து வருகிறது.

நேரமே சரியில்ல... பிரான்ஸ் கார் நிறுவனத்தை புலம்ப வைத்த இந்திய சந்தை... போக போக பிக்அப் ஆயிரும் விடுங்க!

சிட்ரோன் நிறுவனம் பிரான்ஸை சேர்ந்தது ஆகும். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்தான் சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது. ஆனால் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உள்ளிட்ட காரணங்களால், சிட்ரோன் நிறுவனத்திற்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. எனினும் வரும் காலங்களில் சிட்ரோன் நிறுவனம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen Registers 2 Per cent Growth In June 2021. Read in Tamil
Story first published: Saturday, July 3, 2021, 22:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X