ஒருத்தருக்கு மேல போக முடியாது... ஒற்றை இருக்கையுடன் சிட்ரோன் அமி மின்சார வாகனம் அறிமுகம்...

ஒரே ஒரு இருக்கை கொண்ட அமி எனும் மின்சார வாகனத்தை சிட்ரோன் நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஒருத்தருக்கு மேல போக முடியாது... ஒற்றை இருக்கையுடன் சிட்ரோன் அமி மின்சார வாகனம் அறிமுகம்...

ஃப்ரெஞ்சு நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் சிட்ரோன் நிறுவனம் மிக சமீபத்திலேயே இந்தியாவில் கால் தடம் பதித்தது. இந்திய வருகையை முன்னிட்டு நாட்டிற்கான முதல் காராக சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பரீமியம் ரக வாகனத்தை அறிமுகப்படுத்தியது.

ஒருத்தருக்கு மேல போக முடியாது... ஒற்றை இருக்கையுடன் சிட்ரோன் அமி மின்சார வாகனம் அறிமுகம்...

இதைத் தொடர்ந்து மேலும் சில முக்கிய தயாரிப்புகளையும் நாட்டில் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இதே பாணியையே உலக நாடுகள் சிலவற்றிலும் நிறுவனம் கையாண்டு வருகின்றது. அதாவது, புதிய தயாரிப்புகளின் வாயிலாக புதியா வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட தொடங்கியுள்ளது.

ஒருத்தருக்கு மேல போக முடியாது... ஒற்றை இருக்கையுடன் சிட்ரோன் அமி மின்சார வாகனம் அறிமுகம்...

இதனை உறுதிப்படுத்தும் வகையில், தனது நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல டிமாண்ட் நிலவி வரும் ஐரோப்பிய வாகன சந்தையில், தனது புதுமுக மின்சார வாகனத்தை நிறுவனம் வெளியீடு செய்துள்ளது.

ஒருத்தருக்கு மேல போக முடியாது... ஒற்றை இருக்கையுடன் சிட்ரோன் அமி மின்சார வாகனம் அறிமுகம்...

அமி (Ami cargo) எனும் மின்சார வாகனத்தையே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது கார்கோ பயன்பாட்டிற்கான வாகனம் ஆகும். சரக்கு மற்றும் டெலிவரி செய்ய ஏதுவான வாகனமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவேதான் அமி வாகனத்தில் ஒற்றை இருக்கை மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றது.

ஒருத்தருக்கு மேல போக முடியாது... ஒற்றை இருக்கையுடன் சிட்ரோன் அமி மின்சார வாகனம் அறிமுகம்...

மீதமிருக்கும் இடம் அனைத்தும் சரக்குகளை ஏற்றி செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இவ்வாகனத்தில் டிரைவரை தவிர வேறு யாராலும் பயணிக்க முடியாது. அமி கார்கோ வாகனத்தில் பயணிகளுக்கான இருக்கை கொடுக்கப்படதானலேயே இவ்வாறு நாங்கள் கூறுகின்றோம்.

ஒருத்தருக்கு மேல போக முடியாது... ஒற்றை இருக்கையுடன் சிட்ரோன் அமி மின்சார வாகனம் அறிமுகம்...

அதேசமயம், இந்த மின்சார வாகனம் சிறிய மற்றும் இலகு ரக பார்சல்களை மட்டுமே எடுத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், அதிக எடைக்கொண்ட மற்றும் பெரிய உருவ பொருட்களை ஏற்றி செல்வது சற்று கடினம்.

ஒருத்தருக்கு மேல போக முடியாது... ஒற்றை இருக்கையுடன் சிட்ரோன் அமி மின்சார வாகனம் அறிமுகம்...

பொருட்களை ஏற்றி செல்வதற்காக பாலிப்ரொப்பிலீனால் உருவாக்கப்பட்ட ஏழு பகுதி அறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை சரக்குகளை, அடுக்கியது அடுக்கியபடியே பயணிக்க உதவும். மேலும், இதன் கேபினை இரு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதியையும் சிட்ரோன் வழங்கியுள்ளது.

ஒருத்தருக்கு மேல போக முடியாது... ஒற்றை இருக்கையுடன் சிட்ரோன் அமி மின்சார வாகனம் அறிமுகம்...

இதன் வாயிலாக இரு நிலைகளில் இதன் உயரத்தை மாற்றியமைத்துக் கொள்ள முடியும். தொடர்ந்து, எந்த மாதிரியான சாக்கெட்டுகளிலும் சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும் அமி எலெக்ட்ரிக் வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக் சார்ஜ் செய்தால் சுமார் 75கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

ஒருத்தருக்கு மேல போக முடியாது... ஒற்றை இருக்கையுடன் சிட்ரோன் அமி மின்சார வாகனம் அறிமுகம்...

நகரங்களின் டெலிவரி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த குவாட்ரி ரக மின்சார வாகனத்தை சிட்ரோன் உருவாக்கியிருக்கின்றது. அதிகபட்சமாக 140 கிலோ அல்லது 260 லிட்டர் வரையிலான சரக்குகளை இந்த வாகனத்தில் ஏற்றி செல்லலாம். சிட்ரோன் அமி கார்கோவில் 5.5kWh லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒருத்தருக்கு மேல போக முடியாது... ஒற்றை இருக்கையுடன் சிட்ரோன் அமி மின்சார வாகனம் அறிமுகம்...

இதுவே, 8 பிஎச்பி திறனை வெளியேற்றக்கூடிய மின் மோட்டாருக்கு தேவையான மின்சார திறனை வழங்கும். இந்த வாகனத்தின் இந்திய வருகை குறித்த தகவலை இதுவரை சிட்ரோன் வெளியிடவில்லை. ஆகையால், இதன் இந்திய வருகை எதிர்பார்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

Most Read Articles

English summary
Citroen Unveiles Ami Cargo Electric Quadricyle In Europe. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X