வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்கும் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் இவைதான்!! முதலிடத்தில் ஹூண்டாய் வென்யூ...

கடந்த 2021 ஏப்ரல் மாதத்தில் இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களில் டாப்-10 கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்கும் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் இவைதான்!! முதலிடத்தில் ஹூண்டாய் வென்யூ...

வெறும் 25 யூனிட்கள் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை காட்டிலும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதினால் இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை ஹூண்டாய் மோட்டார்ஸின் காம்பெக்ட் எஸ்யூவி மாடலான வென்யூ பிடித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்கும் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் இவைதான்!! முதலிடத்தில் ஹூண்டாய் வென்யூ...

கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 11,245 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே விட்டாரா பிரெஸ்ஸா கார்களை 11,220 யூனிட்கள் மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்கும் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் இவைதான்!! முதலிடத்தில் ஹூண்டாய் வென்யூ...

இவை இரண்டும் தற்போதைக்கு இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி கார்களாக உள்ளன. இதனால் கடந்த சில வருடங்களாகவே இவை இரண்டிற்கும் இடையே தான் இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடிக்கும் போட்டி நிலவி வருகிறது.

வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்கும் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் இவைதான்!! முதலிடத்தில் ஹூண்டாய் வென்யூ...

மேலும் கடந்த ஏப்ரலில் விற்பனையில் 10,000 யூனிட்களை கடந்த இரு காம்பெக்ட் எஸ்யூவி கார்களும் இவை தான். இதற்கு முந்தைய மார்ச் மாதத்திலும் விற்பனையில் வென்யூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை முந்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்கும் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் இவைதான்!! முதலிடத்தில் ஹூண்டாய் வென்யூ...

இதற்கு என்ஜின் தேர்வுகளின் எண்ணிக்கையை முக்கிய காரணமாக சொல்லலாம். ஏனெனில் விட்டாரா பிரெஸ்ஸாவில் ஒரே ஒரு என்ஜின் தேர்வு மட்டும் தான் கொடுக்கப்படுகிறது. ஆனால் வென்யூவில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு விதமான என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

Rank Model Apr'21 Mar'21 M-o-M (%)
1 Hyundai Venue 11,245 10,722 4.88
2 Maruti Vitara Brezza 11,220 11,274 -0.48
3 Kia Sonet 7,724 8,498 -9.11
4 Tata Nexon 6,938 8,683 -20.10
5 Mahindra XUV300 4,144 2,587 60.19
6 Ford Ecosport 3,820 5,487 -30.38
7 Nissan Magnite 2,904 2,987 -2.78
8 Renault Kiger 2,800 3,839 -27.06
9 Toyota Urban Cruiser 2,155 3,162 -31.85
10 Honda W-RV 1,194 978 22.09
வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்கும் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் இவைதான்!! முதலிடத்தில் ஹூண்டாய் வென்யூ...

இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தில் உள்ள கியாவின் சமீபத்திய அறிமுகமான சொனெட் 7,724 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கியா நிறுவனம் சமீபத்தில் தான் பிராண்டின் புதிய லோகோ உடன் சொனெட் மற்றும் செல்டோஸ் எஸ்யூவி கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது.

வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்கும் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் இவைதான்!! முதலிடத்தில் ஹூண்டாய் வென்யூ...

இதனால் சொனெட்டின் விற்பனை அடுத்த சில மாதங்களுக்கு ஏறுமுகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்காவது இடத்தில் டாடா நெக்ஸான் 6,938 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. அதுவே முந்தைய 2021 மார்ச்சில் 8,500க்கும் அதிகமாக நெக்ஸான் கார்கள் விற்கப்பட்டு இருந்தன.

வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்கும் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் இவைதான்!! முதலிடத்தில் ஹூண்டாய் வென்யூ...

ஆனால் ஐந்தாவது இடத்தில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் விற்பனை முந்தைய மார்ச் மாதத்தை காட்டிலும் சுமார் 60.19 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆம் மார்ச்சில் 2,500க்கும் சற்று அதிகமாக விற்கப்பட்டு இருந்த இந்த மஹிந்திரா காம்பெக்ட் எஸ்யூவி காரின் விற்பனை எண்ணிக்கை கடந்த ஏப்ரலில் 4,144 ஆகும்.

வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்கும் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் இவைதான்!! முதலிடத்தில் ஹூண்டாய் வென்யூ...

இவற்றிற்கு அடுத்த இடங்களில் உள்ள மாடல்களின் வரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 3,820 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. ஆனால் மார்ச்சில் 5,487 விற்கப்பட்ட இந்த ஃபோர்டு கார் ஐந்தாவது இடத்தில் இருந்தது.

வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்கும் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் இவைதான்!! முதலிடத்தில் ஹூண்டாய் வென்யூ...

7வது மற்றும் 8வது இடங்களில் முறையே 2,904 யூனிட்கள் மற்றும் 2,800 யூனிட்களின் விற்பனை உடன் நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் கார்கள் உள்ளன. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் ஹோண்டா டபிள்யூஆர்வி கார்கள் உள்ளன. இதில் ஹோண்டாவின் காம்பெக்ட் எஸ்யூவி காரின் விற்பனை 22.09 சதவீதம் அதிகரித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Compact SUV Sales April 2021. Read Full Details In Tamil.
Story first published: Sunday, May 9, 2021, 3:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X