ஜீப் ஹைப்ரீட் காருக்கு விளம்பரம் தேடிதந்த ரொனால்டோ!! ஜூவெண்டஸின் புதிய ஜெர்ஸி இதுதான்!

ஜீப், தனித்துவமான பிராண்டாக விளங்கும் இதனை அமெரிக்காவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஃபியட் க்ரிஸ்லர் சொந்தமாக கொண்டுள்ளது.

ஜீப் ஹைப்ரீட் காருக்கு விளம்பரம் தேடிதந்த ரொனால்டோ!! ஜூவெண்டஸின் புதிய ஜெர்ஸி இதுதான்!

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் தனது சந்தையை நிலைநாட்டியுள்ள ஜீப், இன்று தொடங்கும் புதிய கால்பந்து போட்டி தொடருக்கு முன்னதாக இத்தாலிய கால்பந்து க்ளப் ஜூவெண்டஸுடனான தனது கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது.

ஜீப் ஹைப்ரீட் காருக்கு விளம்பரம் தேடிதந்த ரொனால்டோ!! ஜூவெண்டஸின் புதிய ஜெர்ஸி இதுதான்!

இதன்படி ஜூவெண்டஸ் அணியில் அங்கம் வகிக்கும் பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் க்றிஸ்டியானோ ரொனால்டோ உள்பட அணியின் முன்னணி வீரர்கள் ஜீப்பின் புதிய 4எக்ஸ்.இ முத்திரை பொறிக்கப்பட்ட புதிய ஜெர்ஸியை அணிந்தப்படி போட்டோ போஸ் கொடுத்துள்ளனர்.

ஜீப் ஹைப்ரீட் காருக்கு விளம்பரம் தேடிதந்த ரொனால்டோ!! ஜூவெண்டஸின் புதிய ஜெர்ஸி இதுதான்!

4எக்ஸ்.இ என்பது ஜீப் நிறுவனம் அதன் ப்ளக்-இன் ஹைப்ரீட் எலக்ட்ரிக் வாகன தொழிற்நுட்பத்திற்கு உலகளவில் வைத்துள்ள பெயராகும். 2021 ஜீப் வ்ராங்க்லர் 4எக்ஸ்.இ ப்ளக்-இன் ஹைப்ரீட் கார் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது.

ஜீப் ஹைப்ரீட் காருக்கு விளம்பரம் தேடிதந்த ரொனால்டோ!! ஜூவெண்டஸின் புதிய ஜெர்ஸி இதுதான்!

இரு எலக்ட்ரிக் மோட்டார்களுடன் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு என்ஜினை பெற்றுவந்துள்ள இந்த 2021 ஜீப் கார் வெறும் மின்சார ஆற்றலில் மட்டும் சுமார் 25 மைல்கள் தூரத்திற்கு எந்தவொரு இரைச்சலும் இன்றி, பூஜ்ஜிய மாசு உமிழ்வுடன் இயங்கி ஆச்சிரியப்படுத்தி இருந்தது.

ஜீப் ஹைப்ரீட் காருக்கு விளம்பரம் தேடிதந்த ரொனால்டோ!! ஜூவெண்டஸின் புதிய ஜெர்ஸி இதுதான்!

அதேநேரம் இந்த ஹைப்ரீட் எஸ்யூவி வாகனத்தை ஆஃப்-ரோட்டிற்கும் பயன்படுத்தலாம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஹைப்ரீட் ஜீப் காரை பின்னால் நிற்க வைத்தவாறு தான் ஜூவெண்டஸ் அணியினர் போஸ் கொடுத்துள்ளனர்.

ஜீப் ஹைப்ரீட் காருக்கு விளம்பரம் தேடிதந்த ரொனால்டோ!! ஜூவெண்டஸின் புதிய ஜெர்ஸி இதுதான்!

வ்ராங்லர் 4எக்ஸ்.இ காரில் 17 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி தொகுப்பின் மூலம் 375 எச்பி மற்றும் 637 என்எம் டார்க் திறனை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவே ஜீப் காம்பஸ் & ரெனிகேட் ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனங்களில் 11.4 kWh பேட்டரியே வழங்கப்படுகிறது.

ஜீப் ஹைப்ரீட் காருக்கு விளம்பரம் தேடிதந்த ரொனால்டோ!! ஜூவெண்டஸின் புதிய ஜெர்ஸி இதுதான்!

இந்த பேட்டரி தொகுப்பு அதிகப்பட்சமாக 240 எச்பி ஆற்றலையே வெளிப்படுத்தக்கூடியது. ஜூவெண்டஸ் அணியினரின் புதிய ஜெர்ஸியில் "ஜீப் 4எக்ஸ்.இ" என்ற கிராஃபிக்ஸ் மத்தியில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீப் ஹைப்ரீட் காருக்கு விளம்பரம் தேடிதந்த ரொனால்டோ!! ஜூவெண்டஸின் புதிய ஜெர்ஸி இதுதான்!

ஜீப் நிறுவனம் ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் இந்த இத்தாலியன் கால்பந்து அணியுடனான தனது ஸ்பான்ஸர் உறவை வலுப்படுத்துவதிலும் ஜீப் கவனத்தை செலுத்தி வருகிறது.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Cristiano Ronaldo and his Juventus teammates showcase new Jeep 4xe logo.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X