செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!

ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு பிரமாண்ட அளவில் தேவை அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எத்தனை சதவீதம் என தெரிந்தால் நிச்சயம் பிரம்மிச்சு போய்ருவீங்க. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

உற்பத்தி திறனைவிட பல மடங்கு தேவை அதிகரிப்பு... ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு தொடரும் பிரமாண்ட தேவை!!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஹூண்டாய் க்ரெட்டா காரும் ஒன்று. இந்த கார் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மட்டுமல்ல நிறுவனத்தின் அதிகம் டிமாண்டைப் பெறும் கார்களில் ஒன்று என ஹூண்டாய் அறிவித்திருக்கின்றது.

உற்பத்தி திறனைவிட பல மடங்கு தேவை அதிகரிப்பு... ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு தொடரும் பிரமாண்ட தேவை!!

அதாவது, தான் உற்பத்தி செய்வதைவிட இக்காருக்கு கிடைக்கும் புக்கிங் (எதிர்பார்ப்பு) மிக மிக அதிகம் என்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் ஹூண்டாய் இக்காரை உற்பத்தி செய்யும் எண்ணிக்கையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக டிமாண்ட் க்ரெட்டாவிற்கு நிலவி வருகின்றது.

உற்பத்தி திறனைவிட பல மடங்கு தேவை அதிகரிப்பு... ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு தொடரும் பிரமாண்ட தேவை!!

இந்த ஆச்சரிய மிகு தகவலை ஹீண்டாய் நிறுவனம் பிடிஐ தளத்திடம் கூறியிருக்கின்றது. இதுகுறித்து மேலும் பேசிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்எஸ் கிம், "க்ரெட்டா எஸ்யூவி காரை உலகளவில் தேவை அதிகரித்து வருகின்றது. நிறுவனத்தின் உற்பத்தியை விட தேவை மூன்று மடங்காக இருக்கின்றது. ஆகையால், காத்திருப்பு காலங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன" என்றார்.

உற்பத்தி திறனைவிட பல மடங்கு தேவை அதிகரிப்பு... ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு தொடரும் பிரமாண்ட தேவை!!

தொடர்ந்து பேசிய அவர், "தற்போது உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிப்களின் உற்பத்தி குறைந்து காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலும் க்ரெட்டாவின் உற்பத்தியை சமநிலைப்படுத்துவதில் நிறுவனம் தீவிரம் காட்டி வருகின்றது" என்றார்.

உற்பத்தி திறனைவிட பல மடங்கு தேவை அதிகரிப்பு... ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு தொடரும் பிரமாண்ட தேவை!!

ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா எஸ்யூவி காரை இந்தியாவில் கடந்த 2015ம் ஆண்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. தற்போது, இந்த மாடலின் இரண்டாம் தலைமுறை விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதனை மிக சமீபத்திலேயே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியது.

உற்பத்தி திறனைவிட பல மடங்கு தேவை அதிகரிப்பு... ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு தொடரும் பிரமாண்ட தேவை!!

இதில் இருக்கும் கவர்ச்சியான வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களே இக்காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க காரணமாக அமைந்துள்ளது. பனோரமிக் சன்ரூஃப், இணைப்பு வசதி, காற்றோட்டமான இருக்கைகள், மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய இருக்கைகள், காற்று வடிகட்டி கருவி, சாவியில்லா நுழைவு, க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் என எக்கசக்க வசதிகள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

உற்பத்தி திறனைவிட பல மடங்கு தேவை அதிகரிப்பு... ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு தொடரும் பிரமாண்ட தேவை!!

இவையே இக்காரின் பக்கம் மக்கள் குவிய காரணமாக இருக்கின்றது. ஹூண்டாய் நிறுவனம் 2020 ஆண்டில் ஒட்டுமொத்தமாக 4,23,642 யூனிட் கார்களை விற்பனைச் செய்திருந்தது. இதில், அதிகளவில் விற்பனை கார் மாடல்களில் ஒன்றாக க்ரெட்டா இருக்கின்றது. குறிப்பாக, கடந்த ஓராண்டு காலத்தில், 1.21 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி கார்கள் விற்பனையாகியுள்ளன.

உற்பத்தி திறனைவிட பல மடங்கு தேவை அதிகரிப்பு... ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு தொடரும் பிரமாண்ட தேவை!!

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா இந்தியாவில் அறிமுகமாகி ஒராண்டுகள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் பின்னர் கிடைத்த விற்பனை எண்ணிக்கையே மேலே நாம் பார்த்தது.

Most Read Articles
English summary
Demand For Hyundai Creta SUV Around Three Times As Much As The Production Capacity. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X