அலாய் சக்கரம் vs ஸ்டீல் சக்கரம் - இரண்டில் எது பெஸ்ட்? நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

அலாய் சக்கரம், ஸ்டீல் சக்கரம் இரண்டில் எது வாகனங்களுக்கு ஏற்றவை என்பது பற்றிய தகவலை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அலாய் சக்கரம் vs ஸ்டீல் சக்கரம் - இரண்டில் எது பெஸ்ட்? நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

வாகனங்களில் இன்றியமையாத பாகங்களில் ஒன்று சக்கரம். இயக்கத்திற்கு தேவையான மிக முக்கியமான பாகமவும் இது இருக்கின்றது. சிறந்த கையாளுதல் மற்றும் முடுக்கத்திற்கும் இதுவே உறுதுணையாக இருக்கின்றது. இத்தகைய மிக முக்கியமான பாகமாக இருக்கும் சக்கரம் அலாய் மற்றும் ஸ்டீல் என இரு ரகமாக விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அலாய் சக்கரம் vs ஸ்டீல் சக்கரம் - இரண்டில் எது பெஸ்ட்? நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

இதில் எது பெஸ்டானது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் காண இருக்கின்றோம். அதாவது, அலாய் அல்லது ஸ்டீல் இரண்டும் எந்த வீல் அதிக பயன்மிக்கவை என்பது பற்றிய தகவலைதான் நாங்கள் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அலாய் சக்கரம் vs ஸ்டீல் சக்கரம் - இரண்டில் எது பெஸ்ட்? நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

அலாய் வீல்:

அலாய் வீல்கள் எடை குறைந்தவை, அழகானவையாக இருக்கின்றன. அதேசமயம், அவற்றின் ஆயுட்காலம் குறைவு. அலாய் வீல்கள் இரண்டு அள்லது அதற்கு மேற்பட்ட ரக மெட்டல்களின் கலவையால் உருவாக்கப்படுகின்றன. பெரும்பாலும் நிக்கல், மக்னீசியம் அல்லது பிற மெட்டல்களே அலாய் உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது.

அலாய் சக்கரம் vs ஸ்டீல் சக்கரம் - இரண்டில் எது பெஸ்ட்? நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

இந்த கலவையுடனே அலுமினியம் சேர்க்கப்பட்டு எடை குறைந்த அலாய் வீல்கள் உருவாக்கப்படுகின்றன. இது எடை குறைவு என்பதால் நல்ல பேலன்ஸ், டியூரபிளிட்டி மற்றும் சிக்கனத்தை வழங்க இந்த வீல்கள் உதவுகின்றன. இதுவே அலாய் வீல்களில் கிடைக்கும் மிக முக்கியமான நன்மைகள் ஆகும்.

அலாய் சக்கரம் vs ஸ்டீல் சக்கரம் - இரண்டில் எது பெஸ்ட்? நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

குறிப்பாக, அலாய் வீல்கள் எஃகு சக்கரங்களைக் காட்டிலும் மிகவும் இலகுவானவை. ஆகையால், அதிகப்படியான வாகன ஓட்டிகளை இது கவர்ந்து வருகின்றது. இதுமட்டுமின்றி, நல்ல பிடிமானத்தை வழங்கவும், சிறந்த ஹேண்ட்லிங் வழங்கவும் இது உதவும். இதுமட்டுமின்றி, இதன் எடைக் குறைவு என்பதால் பல மடங்கு எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

அலாய் சக்கரம் vs ஸ்டீல் சக்கரம் - இரண்டில் எது பெஸ்ட்? நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

இத்துடன் இதன் உயரமும் சற்று அதிகமாக இருக்கும். எனவே, உயரமான பயண அனுபவத்தை வழங்கவும் இது உதவியாக இருக்கும். ஆகையால், ஸ்டீல் வீல்களைக் காட்டிலும் அலாய் வீல்கள் சிறந்த வீலாக காட்சியளிக்கின்றன. இதுமட்டுமின்றி நமக்கு பிடித்தமான பல வித ஸ்டைல்களில் அலாய் வீல்கள் விற்பனைக்குக் கிடைப்பதும் அது வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற காரணமாக இருக்கின்றன.

அலாய் சக்கரம் vs ஸ்டீல் சக்கரம் - இரண்டில் எது பெஸ்ட்? நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

அதேசமயம், அலாய் வீல்களில் மிகப்பெரிய சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றின் பயன்பாட்டு காலம் சற்று குறைவு. ஆம், மிகப்பெரிய பள்ளம், மேடு அல்லது விபத்துகளை அலாய் வீல்கள் சந்திக்குமானால் எளிதில் நொறுங்கிவிடும் அல்லது நெளிந்து விடும். இவற்றை ரிப்பேர் செய்வது மிக கடினம்.

அலாய் சக்கரம் vs ஸ்டீல் சக்கரம் - இரண்டில் எது பெஸ்ட்? நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

ஆகையால், புதிய மாற வேண்டும் என்ற நிலை உருவாகும். இதுவே அலாய் வீலின் மிகப்பெரிய குறைபாடாக இருக்கின்றது. எனவேதான் குறைந்த விலை கார்களில் அலாய் வீல்களை கார் உற்பத்தியாளர்கள் வழங்க தயங்குகின்றனர்.

அலாய் சக்கரம் vs ஸ்டீல் சக்கரம் - இரண்டில் எது பெஸ்ட்? நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

ஸ்டீல் வீல்:

ஸ்டீல் சக்கரங்கள் அதிக உறுதியானவை, அதிக எடைக் கொண்டவையும் கூட. ஆகையால், இதில் அழகை எதிர்பார்க்க முடியாது. ஸ்டீல் உலோகத்தை மட்டுமே வைத்து இவை உருவாக்கப்படுகின்றன. அலாய் வீல்களுக்கு நீண்ட கால வரலாறு இருக்கின்றது. இவை நல்ல உழைக்கும் தன்மைக் கொண்டவை என்ற காரணத்தினால்தான் எஸ்யூவி மற்றும் கனரக வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அலாய் சக்கரம் vs ஸ்டீல் சக்கரம் - இரண்டில் எது பெஸ்ட்? நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

அலாய் வீலைக் காட்டிலும் குறைந்த விலையில் இவை விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஸ்டீல் வீல்களை நொறுக்குவது என்பது இயலாத ஒன்று. ஆகையால், இதன் பயன்பாட்டு காலம் மிக அதிகம். அதேசமயம், இவை எளிதில் துருப்பிடிக்கக் கூடியவை என்பதால் பராமரிப்பு அவ்வப்போது தேவைப்படுகின்றது.

அலாய் சக்கரம் vs ஸ்டீல் சக்கரம் - இரண்டில் எது பெஸ்ட்? நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

அதேசமயம், அதிக அதிர்வு மற்றும் பள்ளம் மேடுகளைக் கூட எளிதில் சமாளிக்கக் கூடியவையாக ஸ்டீல் சக்கரங்கள் இருக்கின்றன. அதேநேரத்தில், ஸ்டீல் வீலில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டாலும்கூட ரிப்பேர் செய்துவிட முடியும். ஆகையால், விவரம் தெரிந்தவர்கள் ஸ்டீல் வீலுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

அலாய் சக்கரம் vs ஸ்டீல் சக்கரம் - இரண்டில் எது பெஸ்ட்? நிச்சயம் இந்த தகவலை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க!

அதேசமயம், அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் ஹேண்ட்லிங்கிற்காக பெரும்பாலானோர் அலாய் வீல்களையே வாங்கி வருகின்றனர். ஆகையால் உங்களுக்கு எது ஏற்றதாக இருக்கின்றது என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள்.

Most Read Articles
English summary
Differences Between Alloy And Steel Wheels. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X