செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த வாகனங்களுக்கே செம்ம மவுசு... 2020ல் அதிகம் விற்பனையான யூஸ்டு வாகனம்!

2020ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் சந்தையில் அதிகம் விற்பனையான வாகனம் எது என்பது பற்றிய தகவல் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த வாகனங்களுக்கே செம்ம மவுசு... 2020ல் அதிகம் விற்பனையான யூஸ்டு வாகனம்!

மக்கள் மத்தியில் புதிய வாகனங்களுக்கு கிடைத்து வருவதைப் போலவே, பயன்படுத்தப்பட்ட (யூஸ்டு) வாகனங்களுக்கும் அமோகமான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மக்கள் மத்தியில் தலை தூக்கத் தொடங்கிய பின்னர், அநேகர் சொந்த வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கினர்.

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த வாகனங்களுக்கே செம்ம மவுசு... 2020ல் அதிகம் விற்பனையான யூஸ்டு வாகனம்!

அதில், பலர் தங்களின் தனிப்பட்ட போக்குவரத்து பயன்பாட்டிற்காக செகண்ட் ஹேண்ட் வாகனங்களை தேர்வு செய்தனர். இதனால் கடந்த ஆண்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. அந்தவகையில், யூஸ்டு வாகன சந்தையில் அதிகம் விற்பனையான வாகனங்கள் எது என்பது பற்றிய தகவலேயே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த வாகனங்களுக்கே செம்ம மவுசு... 2020ல் அதிகம் விற்பனையான யூஸ்டு வாகனம்!

ட்ரூம்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், மாருதி சுசுகி நிறுவனத்தின் டிசையர் மாடலும், இருசக்கர வாகன பிரிவில் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக்குமே யூஸ்டு வாகன சந்தையில் அதிகம் விற்பனையான வாகனங்கள் என்பது தெரியவந்திருக்கின்றது.

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த வாகனங்களுக்கே செம்ம மவுசு... 2020ல் அதிகம் விற்பனையான யூஸ்டு வாகனம்!

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 8,38,827 பயன்படுத்தப்பட்ட கார்களும், 47,869 பயன்படுத்தப்பட்ட பைக்குகளும் 2020ம் ஆண்டில் விற்பனைச் செய்யப்பட்டிருக்கின்றன. இதில், டீசல் கார்கள் 65 சதவீதத்திலும், பெட்ரோல் கார்கள் 34 சதவீதத்திலும், சிஎன்ஜி கார்கள் 1 சதவீதமும் விற்பனையாகியிருக்கின்றன.

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த வாகனங்களுக்கே செம்ம மவுசு... 2020ல் அதிகம் விற்பனையான யூஸ்டு வாகனம்!

இதன்மூலம், தற்போதும் மக்கள் மத்தியில் டீசல் கார்கள் மீது அமோக வரவேற்பு நிலவி வருவது தெரிய வந்திருக்கின்றது. தொடர்ந்து, அதிகளவில் வெள்ளை, சில்வர் மற்றும் சாம்பல் ஆகிய நிறங்களிலான கார்களே விற்பனையாகியிருக்கின்றன. அதிலும், ஒட்டுமொத்த பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனையில் வெள்ளை நிற கார்களுக்கே மிக அமோகமான வரவேற்பு கிடைத்திருக்கின்றது.

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த வாகனங்களுக்கே செம்ம மவுசு... 2020ல் அதிகம் விற்பனையான யூஸ்டு வாகனம்!

சுமார், 49 சதவீதம் வரை அவை விற்பனைச் செய்யப்பட்டிருக்கின்றன. இதைத்தொடர்ந்து, சில்வர் நிற கார்கள் 16 சதவீதமும், சாம்பல் நிற கார்கள் 10 சதவீதமும் விற்பனையாகியிருக்கின்றன. இந்த தகவல் புதிய காரை செகண்டு வாகன சந்தையில் வாகனங்களை வாங்க மற்றும் விற்க உதவி பெரும் உதவியாக இருக்கும் என ட்ரூம்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த வாகனங்களுக்கே செம்ம மவுசு... 2020ல் அதிகம் விற்பனையான யூஸ்டு வாகனம்!

யூஸ்டு வாகன சந்தையில் அதிகம் விற்பனையாகியிருக்கும் மாருதி டிசையர் ஓர் காம்பேக்ட் செடான் ரக காராகும். இதனை பராமரிப்பது மிகவும் சுலபம். எனவேதான் மக்கள் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்த காரை அதிகம் வர்த்தக ரீதியான பயன்பாட்டில் நம்மால் காண முடிகின்றது.

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த வாகனங்களுக்கே செம்ம மவுசு... 2020ல் அதிகம் விற்பனையான யூஸ்டு வாகனம்!

இக்கார், 1.2 லிட்டர் ட்யூவர் ஜெட் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதே எஞ்ஜினைதான் மாருதி அதன் பலினோ கார்களிலும் பயன்படுத்தி வருகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 90 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. ரூ. 5.94 லட்சம் தொடங்கி ரூ. 8.90 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Source: India Today

Most Read Articles
English summary
Droom Unveils Best Selling Used Vehicles Of 2020. Read In Tamil.
Story first published: Tuesday, February 23, 2021, 12:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X