Just In
- 19 min ago
கொஞ்ச நாள் காத்திருங்கள்... புதிய நிறங்களில் அறிமுகமாகின்றன 2021 ராயல் என்பீல்டு 650 பைக்குகள்!!
- 46 min ago
ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து தலைமை செயலகம் வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி... ஏன் தெரியுமா?
- 1 hr ago
காரில் கூடுதல் எரிபொருள் நிரப்ப முடியுமா? - சந்தேகத்திற்கான பதில்!
- 1 hr ago
மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டில் இந்தியாவில் உற்பத்தியாக உள்ள 2வது கார்... மிக சவாலான விலையில் வர வாய்ப்பு!
Don't Miss!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் வேலை..! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Movies
லாக்டவுனில் குண்டாகிட்டேன்...உடம்பை குறைக்கும் போட்டோ வெளியிட்ட பாவனா
- Lifestyle
பெண்களின் முக்கியமான முடி பிரச்சினையை குணப்படுத்த உதவும் வீட்டு வாத்தியங்கள் என்னென்ன தெரியுமா?
- Sports
செம டிரிக்.. இந்திய அணியின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த மாஸ்டர்பிளான்.. ஷாக் திருப்பம்!
- News
தேர்வு இல்லாமல் மாணவர்களை ஆல் பாஸ் செய்தது ஏன்? முதல்வர் எடப்பாடியார் விளக்கம்
- Finance
பர்சனல் லோன் பற்றிய ரகசியங்கள்.. தெரிந்து கொண்டு பின் கடன் வாங்குங்கள்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சூப்பரான வசதிகள்... 1,000 சிஎன்ஜி பஸ்களை வாங்கும் டெல்லி அரசு... ஏக்க பெருமூச்சு விடும் தமிழக மக்கள்...
டெல்லி அரசு 1,000 சிஎன்ஜி பேருந்துகளை கொள்முதல் செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1,000 தாழ்தள ஏசி சிஎன்ஜி பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான நிதிக்கு டெல்லி போக்குவரத்து கழக வாரியம் இன்று (ஜனவரி 6) ஒப்புதல் வழங்கியுள்ளது. தேசிய தலைநகரில் பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 1,000 தாழ்தள ஏசி சிஎன்ஜி பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

இந்த 1,000 புதிய பேருந்துகளும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாக இருக்கும். அத்துடன் சிசிடிவி கேமராக்கள், பேனிக் பட்டன்கள், ஜிபிஎஸ் உள்பட பல்வேறு அதிநவீன வசதிகளும் இந்த புதிய பேருந்துகளில் இடம்பெற்றிருக்கும். மேலும் இந்த புதிய பேருந்துகள் மாற்றுத்திறனாளிகளுக்கு நட்பாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 1,000 தாழ்தள ஏசி சிஎன்ஜி பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூறியபடி தலைநகர் டெல்லியில் பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. மக்கள் சொந்த வாகனங்களுக்கு பதிலாக பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதன் மூலம் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்க முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் இது சிஎன்ஜி பேருந்துகள் என்பதால், டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகவும் இது பார்க்கப்படுகிறது. தலைநகர் டெல்லியின் காற்று மாசுபாடு பிரச்னை குறித்து யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதற்கு பெட்ரோல், டீசல் வாகனங்களே மிக முக்கியமான காரணமாக உள்ளன.

எனவே அவற்றுக்கு பதிலாக சிஎன்ஜி போன்ற சுற்றுச்சூழலுக்கு நட்பான மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு ஊக்குவித்து வருகிறது. 1,000 சிஎன்ஜி பேருந்துகளை கொள்முதல் செய்யவிருப்பதும் அந்த நடவடிக்கைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசலுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி சுற்றுச்சூழலுக்கு நட்பானது. காற்றை அதிகம் மாசுபடுத்தாது. அத்துடன் வாகனங்களை இயக்குவதற்கான செலவும் பெட்ரோல், டீசலை போல் அல்லாது மிகவும் குறைவாக இருக்கும். எனவே இந்த புதிய சிஎன்ஜி பேருந்துகள் டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு கணிசமான லாபத்தை ஈட்டி தரும் எனவும் எதிர்பார்க்கலாம்.

டெல்லி அரசு மட்டுமல்லாது பல்வேறு மாநில அரசுகளும் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் பேருந்துகளை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால் டெல்லி போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் அதற்கான நடவடிக்கைகள் இன்னும் பெரிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை. என்றாலும் தமிழகத்திலும் வரும் காலங்களில் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் பேருந்துகளை அதிகளவில் பார்க்கலாம்.
Note: Images used are for representational purpose only.