பட்ஜெட் விலை கார்களை காட்டிலும் மிக மிக அதிக விலையில் Ducati Monster பைக் அறிமுகம்... எவ்ளோனு கேட்டுடாதீங்க!!

பட்ஜெட் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் கார்களைக் காட்டிலும் மிக மிக அதிக விலையில் Ducati Monster பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இப்பைக்குறித்த மேலும் முக்கிய விபரங்களை இப்பிதிவில் பார்க்கலாம், வாங்க.

பட்ஜெட் விலை கார்களை காட்டிலும் மிக மிக அதிக விலையில் Ducati Monster பைக் அறிமுகம்... விலைய கேட்டீங்கன அசந்து போய்ருவீங்க!

பிரபல பிரீமியம் தர இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டுகாட்டி (Ducati) இந்தியாவில் புதுமுக பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. மான்ஸ்டர் (Monster) எனும் மாடலை நிறுவனம் இந்தியாவில் களமிறக்கி இருக்கின்றது. இப்பைக்கிற்கு மிக சமீபத்தில் ரூ. 1 லட்சம் என்ற முன்தொகையில் புக்கிங் பணிகளைத் தொடங்கியது.

பட்ஜெட் விலை கார்களை காட்டிலும் மிக மிக அதிக விலையில் Ducati Monster பைக் அறிமுகம்... விலைய கேட்டீங்கன அசந்து போய்ருவீங்க!

இந்த நிலையில் புதுமுக பைக்கை நாட்டில் இன்று (செப்டம்பர் 23) விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது, டுகாட்டி நிறுவனம். இதன் வாயிலாக தற்போது இந்திய சந்தையில் விற்பனக்குக் கிடைக்கும் பைக்குகளின் எண்ணிக்கையை நிறுவனம் அதிகரிக்கச் செய்திருக்கின்றது. புதிய மான்ஸ்டர் பைக்கிற்கு நிறுவனம் அறிமுகம் விலையாக ரூ. 10.99 லட்சம் என்ற உச்சபட்ச விலையை நிர்ணயித்திருக்கின்றது. இது பட்ஜெட் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய கார்களைக் காட்டிலும் மிக மிக அதிக விலை ஆகும்.

பட்ஜெட் விலை கார்களை காட்டிலும் மிக மிக அதிக விலையில் Ducati Monster பைக் அறிமுகம்... விலைய கேட்டீங்கன அசந்து போய்ருவீங்க!

அதே நேரத்தில் இது வெறும் ஆரம்ப நிலை மாடலின் விலை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் ரக பைக் ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கும் டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள், பிஎம்டபிள்யூ எஃப் 900 ஆர் மற்றும் கவாஸாகி இசட்900 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது.

பட்ஜெட் விலை கார்களை காட்டிலும் மிக மிக அதிக விலையில் Ducati Monster பைக் அறிமுகம்... விலைய கேட்டீங்கன அசந்து போய்ருவீங்க!

நடப்பாண்டின் தொடக்கத்திலேயே இப்பைக்கின் அறிமுகம் அரங்கேறி இருந்தநிலையில் தற்போதே மான்ஸ்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, டுகாட்டி. மான்ஸ்டர் (Monster) மற்றும் மான்ஸ்டர் ப்ளஸ் (Monster Plus) என இரு விதமான தேர்வுகளில் இப்பைக்கு விற்பனைக்குக் கிடைக்கும். இதில் மான்ஸ்டர் தேர்வைக் காட்டிலும் கூடுதல் விலைக் கொண்டதாக மான்ஸ்டர் ப்ளஸ் காட்சியளிக்கின்றது.

பட்ஜெட் விலை கார்களை காட்டிலும் மிக மிக அதிக விலையில் Ducati Monster பைக் அறிமுகம்... விலைய கேட்டீங்கன அசந்து போய்ருவீங்க!

இத்தேர்விற்கு நிறுவனம் ரூ. 11.24 லட்சம் என்ற விலையை நிர்ணயித்திருக்கின்றது. இரு வேரியண்டுகளிலும் லேசான வித்தியாசங்கள் நிலவுகின்றன. இந்த வித்தியாசத்தின் காரணத்தினாலேயே இரு தேர்வுகளுக்கும் இடையே விலையும் மாறுபட்டு காட்சியளிக்கின்றன. மான்ஸ்டர் ப்ளஸ் தேர்வில் ஃப்ளை ஸ்கிரீன் மற்றும் பிரத்யேக பின் இருக்கையாளருக்கான கவர் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன.

பட்ஜெட் விலை கார்களை காட்டிலும் மிக மிக அதிக விலையில் Ducati Monster பைக் அறிமுகம்... விலைய கேட்டீங்கன அசந்து போய்ருவீங்க!

ஆனால், எஞ்ஜின் விஷயத்தை பொருத்தவரை இரண்டும் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. 2021 டுகாட்டி மான்ஸ்டர் பைக்கில் 937சிசி திரன் கொண்ட டெஸ்டஸ்ட்ரெட்டா எல்-ட்வின் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 110 பிஎச்பி மற்றும் 93 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

பட்ஜெட் விலை கார்களை காட்டிலும் மிக மிக அதிக விலையில் Ducati Monster பைக் அறிமுகம்... விலைய கேட்டீங்கன அசந்து போய்ருவீங்க!

ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் வசதியை இந்த எஞ்ஜின் கொண்டிருக்கின்றது. இது சிக்ஸ்-ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும். புதிய 2021 மான்ஸ்டர் அதன் முந்தைய மாடலைக் காட்டிலும் 18கிலோ குறைவாக உள்ளது. இது மிக சிறந்த ஹேண்ட்லிங்கை வழங்க ஏதுவாக இருக்கின்றது. எடைக் குறைந்து இருப்பதால் மிக சுலபமாக கையாளவும் வசதியாக இருக்கின்றது.

பட்ஜெட் விலை கார்களை காட்டிலும் மிக மிக அதிக விலையில் Ducati Monster பைக் அறிமுகம்... விலைய கேட்டீங்கன அசந்து போய்ருவீங்க!

இதேபோன்று மற்றும் ஓர் கவனிக்கக் கூடிய சிறப்பு வசதியாக பைக்கில் இடம் பெற்றிருக்கும் சஸ்பென்ஷன்கள் காட்சியளிக்கின்றன. மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதற்காக 43 மிமீ அளவுள்ள இன்வெர்டட் ஃபோர்க் மற்றும் ப்ரீ-லோடட் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் ஸ்விங்கர்ம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

பட்ஜெட் விலை கார்களை காட்டிலும் மிக மிக அதிக விலையில் Ducati Monster பைக் அறிமுகம்... விலைய கேட்டீங்கன அசந்து போய்ருவீங்க!

தொடர்ந்து, மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக 320 மிமீ அளவுள்ள டிஸ்க் முன் பக்கத்திலும், 245 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன் ப்ரெம்போ காலிபர்களும் கூடுதல் சிறந்த பிரேக்கிங்கிற்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

பட்ஜெட் விலை கார்களை காட்டிலும் மிக மிக அதிக விலையில் Ducati Monster பைக் அறிமுகம்... விலைய கேட்டீங்கன அசந்து போய்ருவீங்க!

2021 மான்ஸ்டர் பைக்கின் வெளிப்புற தோற்றம் புதிய அவதாரத்தில் காட்சியளிக்கின்றது. வட்ட வடிவ ஹெட்லேம்ப், முட்டை வடிவ எல்இடி மற்றும் எல்இடி டிஆர்எல் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் சேர்ந்து பைக்கிற்கு மிகவும் அழகான முகப்பு பகுதியை வழங்கும் வகையில் அமைந்துள்ளன.

பட்ஜெட் விலை கார்களை காட்டிலும் மிக மிக அதிக விலையில் Ducati Monster பைக் அறிமுகம்... விலைய கேட்டீங்கன அசந்து போய்ருவீங்க!

இவற்றுடன், ப்யூவல் டேங்கிற்கு மஃப்ளர், கருப்பு நிறத்திலான பிட்கள், உயரமான வால் பகுதி மற்றும் இரட்டை பேரல் எக்சாஸ்ட் ஆகியவையும் இப்பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன. இத்துடன், கூடுதல் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் வகையில் கார்னரிங் ஏபிஎஸ், வீலி கன்ட்ரோல், டுகாட்டி டிராக்சன் கன்ட்ரோல், டுகாட்டி பவர் லாஞ்ச் மற்றும் மூன்று விதமான ரைடிங் மோட்கள் (அர்பன், டூரிங் மற்றும் ஸ்போர்ட்) ஆகிய வசதிகள் 2021 மான்ஸ்டரில் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati launched 2021 monster and monster plus bike in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X