பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் எடுத்த அதிரடி முடிவு! ராக்கெட் வேகத்துல உயர்ந்தா இப்படிதான் பண்ணுவாங்க!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு மிக அதிக வேகமாக உயர்ந்து வரும் காரணத்தினால் மக்கள் அதிரடி நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். அது என்ன முடிவு என்பது பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் எடுத்த அதிரடி முடிவு... ராக்கெட் வேகத்துல உயர்ந்தா இப்படிதான் முடிவெடுப்பாங்க! கொஞ்சநஞ்ச விலையா விக்குது...

பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் விண்ணை நோக்கி உயர்ந்து வருகின்றது. இதனால், தினசரி வாகன பயன்பாட்டாளர்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இல்லாத வகையில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசலின் விலை தற்போது உயர்ந்து வருகின்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் எடுத்த அதிரடி முடிவு... ராக்கெட் வேகத்துல உயர்ந்தா இப்படிதான் முடிவெடுப்பாங்க! கொஞ்சநஞ்ச விலையா விக்குது...

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்று ரூ. 104.52க்கும், டீசல் லிட்டர் ஒன்று ரூ. 100.59க்கும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. ஆளும் கட்சியான திமுக தலைமையிலான தமிழக அரசு எரிபொருளின் விலையைக் கணிசமாகக் குறைக்கும் வகையில் நடவடிக்கையை எடுத்தும் இந்த உச்சபட்ச விலையில் அவை விற்பனைக்குக் கிடைக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் எடுத்த அதிரடி முடிவு... ராக்கெட் வேகத்துல உயர்ந்தா இப்படிதான் முடிவெடுப்பாங்க! கொஞ்சநஞ்ச விலையா விக்குது...

இதே நிலைதான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றது. ஆகையால், நாட்டு மக்கள் அதிரடி முடிவை எடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். அதாவது, மக்கள் பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக இயற்கை எரிவாயு (சிஎன்ஜி)-ஆல் இயங்கும் வாகனங்களுக்கு மாற தொடங்கியிருக்கின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் எடுத்த அதிரடி முடிவு... ராக்கெட் வேகத்துல உயர்ந்தா இப்படிதான் முடிவெடுப்பாங்க! கொஞ்சநஞ்ச விலையா விக்குது...

குறிப்பாக, நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவின் பெங்களூரு நகரத்தில் சிஎன்ஜியால் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு மிக அதிகளவில் உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலமாகவே இவற்றின் எண்ணிக்கைத் தொடர்ச்சியாக உயர்ந்து வருவதாகவும், அதிலும், கடந்த 50 நாட்களில் சுமார் 16 சதவீதம் சிஎன்ஜியால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகவும் அத்தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் எடுத்த அதிரடி முடிவு... ராக்கெட் வேகத்துல உயர்ந்தா இப்படிதான் முடிவெடுப்பாங்க! கொஞ்சநஞ்ச விலையா விக்குது...

நேற்றைய தின நிலவரப்படி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பெட்ரோல் லிட்டர் ஒன்று ரூ. 111.34க்கும், டீசல் லிட்டர் ஒன்று ரூ. 102.23க்கும் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதுமாதிரியான உச்ச விலையிலேயே எரிபொருள்கள் கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் எடுத்த அதிரடி முடிவு... ராக்கெட் வேகத்துல உயர்ந்தா இப்படிதான் முடிவெடுப்பாங்க! கொஞ்சநஞ்ச விலையா விக்குது...

இதன் விளைவாக மக்கள் மாற்று திறன்களால் இயங்கும் வாகனங்களுக்கு மாற தொடங்கியிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே பெங்களூரூ நகரத்தில் சிஎன்ஜியால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கின்றது. தொடர்ச்சியாக, சிஎன்ஜி வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகின்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் எடுத்த அதிரடி முடிவு... ராக்கெட் வேகத்துல உயர்ந்தா இப்படிதான் முடிவெடுப்பாங்க! கொஞ்சநஞ்ச விலையா விக்குது...

இதுகுறித்து ஜிஏஐஎல் கேஸ் (GAIL Gas) அதிகாரிகள் கூறியதாவது, "கடந்த செப்டம்பர் 10 அன்று சிஎன்ஜி வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், 1,690 புதிய சிஎன்ஜி வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன. இதில், 1300 பெங்களூருவில் பயன்பாட்டில் உள்ளன. ஆட்டோ, கார், இலகு ரக வர்த்தக வாகனம் மற்றும் ஹெவி வர்த்தக வாகனம் என அனைத்தின் எண்ணிக்கையும் உயர தொடங்கியுள்ளன" என்றார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் எடுத்த அதிரடி முடிவு... ராக்கெட் வேகத்துல உயர்ந்தா இப்படிதான் முடிவெடுப்பாங்க! கொஞ்சநஞ்ச விலையா விக்குது...

தற்போது கர்நாடகா மாநிலத்தில் 12,300 சிஎன்ஜி வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றுடன் புதிய 1,690 சிஎன்ஜி வாகனங்களும் இணைந்திருக்கின்றன. பெங்களூருவில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் அதிகமான சிஎன்ஜி வாகனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் எடுத்த அதிரடி முடிவு... ராக்கெட் வேகத்துல உயர்ந்தா இப்படிதான் முடிவெடுப்பாங்க! கொஞ்சநஞ்ச விலையா விக்குது...

தற்போது சிஎன்ஜி வாகனங்களின் எண்ணிக்கை கர்நாடகத்தில் உயர்ந்திருப்பதால் அம்மாநிலத்தில் சிஎன்ஜியின் விற்பனையும் உயர்ந்திருக்கின்றது. ஆகையால், மிக விரைவில் புதிதாக 50 சிஎன்ஜி பங்க்குகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாத நிலவரப்படி நாள் ஒன்றிற்கு மாநிலத்தில் 23,500 கிலோ சிஎன்ஜி வாயு விற்பனையாகி வருகின்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் எடுத்த அதிரடி முடிவு... ராக்கெட் வேகத்துல உயர்ந்தா இப்படிதான் முடிவெடுப்பாங்க! கொஞ்சநஞ்ச விலையா விக்குது...

கடந்த செப்டம்பர் மாதம் வரை இதன் தேவை நாள் ஒன்றிற்கு 20 ஆயிரம் கிலோவாக மட்டுமே இருந்தது. எனவே வரும் எதிர்காலத்தில் சிஎன்ஜி தேவை மிகக் கடுமையாக உயரும் என நம்பப்படுகிந்றது. ஆகையால், சிஎன்ஜி விற்பனை நிலையங்களை அதிகரிக்கும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு வருகின்றது. எல்பிஜி வாகனங்களைக் காட்டிலும் சிஎன்ஜி வாகனங்களில் லாபம் அதிகம் ஆகும். எல்பிஜி ஆட்டோவில் ஒரு கிமீட்டருக்கு ரூ. 2.6 செலவாகும் எனில், சிஎன்ஜி வாகனங்களுக்ககு ரூ. 1.1 போதும். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் சிஎன்ஜி வாகனங்களுக்கு அதிரடியாக மாறி வருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Due to skyrocketing prices fuel many vehicle owners start to switch cng vechicles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X