குறையவே குறையாது... இந்த கார்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம்... இதோ அதிக மதிப்பு உடைய 8 கார்களின் பட்டியல்!

குறிப்பிட்ட சில நிறுவனங்களின் குறிப்பிட்ட சில தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் எப்போதும் நற் மதிப்பு உண்டு. அப்படியான நான்கு சக்கர வாகன மாடல்கள் எவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். ஒட்டுமொத்தமாக 8 கார்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

குறையவே குறையாது... இந்த கார்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம்... இதோ அதிக மதிப்பு உடைய 8 கார்களின் பட்டியல்!

ஓர் புதிய கார் வாங்கிய அடுத்த கணமே அதன் மதிப்பில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை இழந்துவிடுகின்றது. இதுவே, அது ஓராண்டு வரை பயன்படுத்தப்பட்ட வாகனமாக இருந்தால் 30 சதவீதம் வரை அதன் மதிப்பை இழக்க நேரிடுகின்றது. அதாவது, ஓர் புதிய வாகனத்தை வாங்கி பயன்படுத்துவதனால் மட்டும் பல ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இழப்புகள் ஏற்படுகின்றன.

குறையவே குறையாது... இந்த கார்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம்... இதோ அதிக மதிப்பு உடைய 8 கார்களின் பட்டியல்!

ஆனால், இந்த மாதிரியான ஓர் இழப்பு குறிப்பிட்ட சில நிறுவனங்களின் குறிப்பிட்ட சில தயாரிப்புகளுக்கு இந்தியாவில் ஏற்படவில்லை. அவற்றிற்கு மட்டும் காலம் கூட கூட மதிப்பு கூடிக்கொண்டே வருகின்றது. அவை எவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, விற்பனைக்கு பின்னரும் இந்தியர்கள் மத்தியில் அதிக மவுசைக் கொண்டிருக்கும் 8 கார்கள் பற்றிய தகவலை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

குறையவே குறையாது... இந்த கார்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம்... இதோ அதிக மதிப்பு உடைய 8 கார்களின் பட்டியல்!

செவ்ரோலட் பீட் டீசல் (Chevrolet Beat Diesel)

செவ்ரோலட் நிறுவனம் அதன் வர்த்தக பணிகளை இந்தியாவில் ஒட்டுமொத்தமாக நிறுத்தியுள்ளது. இருப்பினும், இந்நிறுவனத்தின் ஒரு சில கார் மாடல்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில் நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான பீட் தற்போது இந்திய சாலைகளில் பயன்பாட்டில் இருக்கின்றது. இது இந்திய இளைஞர்களின் பிரியமான தயாரிப்புகளில் ஒன்றாக இருக்கின்றது.

குறையவே குறையாது... இந்த கார்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம்... இதோ அதிக மதிப்பு உடைய 8 கார்களின் பட்டியல்!

அதிக இட வசதி, சிறந்த ஹேண்ட்லிங் வசதி, மிக சிறந்த எரிபொருள் சிக்கனம் உள்ளிட்டவற்றிற்கு மிகவும் பெயர்போன வாகனமாக இது இருக்கின்றது. ஆகையால், தற்போது இக்காருக்கு இந்தியாவில் மதிப்பை இழக்காத வாகனமாக காட்சியளிக்கின்றது. இதன் அடக்கமான உருவ தோற்றம் நகர இயக்கத்திற்கு உகந்த வாகனமாக இது காட்சியளிக்கின்றது.

குறையவே குறையாது... இந்த கார்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம்... இதோ அதிக மதிப்பு உடைய 8 கார்களின் பட்டியல்!

மாருதி சுசுகி எஸ்எக்ஸ்4 (Maruti Suzuki SX4)

மாருதி சுசுகியின் மிக சிறந்த கார்களில் ஒன்றாக எக்ஸ்4 காட்சியளிக்கின்றது. அதிக இட வசதி, உறுதியான பெட்ரோல் எஞ்ஜின், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், பாராட்டத்தக்க ஹேண்ட்லிங் திறன் ஆகியவற்றைக் கொண்ட மிக சிறந்த வாகனமாக இது காட்சியளிக்கின்றது. பெட்ரோல் மட்டுமின்றி டீசல் எஞ்ஜின் தேர்விலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், இதன் பெட்ரோல் எஞ்ஜினுக்கே தற்போது மவுசு அதிகரித்து காணப்படுகின்றது.

குறையவே குறையாது... இந்த கார்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம்... இதோ அதிக மதிப்பு உடைய 8 கார்களின் பட்டியல்!

மாருதி சுசுகி பலினோ (Maruti Suzuki Baleno)

மாருதி சுசுகி குடும்பத்தின் மற்றுமொரு சிறந்த தயாரிப்பாக பலினோ கார் இருக்கின்றது. மலிவான விலை, அதிக சிறப்பம்சங்க்ள் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை ஆகியவற்றிற்கு பெயர்போன தயாரிப்பாக இது இருக்கின்றது. ஆகையால், இக்காருக்கு இந்திய சந்தையில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20 முதல் 24 கிமீ வரை மைலேஜ் தரும்.

குறையவே குறையாது... இந்த கார்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம்... இதோ அதிக மதிப்பு உடைய 8 கார்களின் பட்டியல்!

ஃபோர்டு ஃபியஸ்டா (Ford Fiesta)

மிக கச்சிதமான ஸ்டைல், சிறந்த ஹேண்ட்லிங் ஆகியவை இதன் மறு விற்பனையை உச்சத்தில் வைத்திருக்கின்றது. இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எஞ்ஜின் அதிக உறுதியான மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கக் கூடியவையாக இருக்கின்றன.

குறையவே குறையாது... இந்த கார்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம்... இதோ அதிக மதிப்பு உடைய 8 கார்களின் பட்டியல்!

ஹோண்டா ஜாஸ் (Honda Jazz)

மிக சிறந்த உட்கட்டமைப்பிற்கு பெயர்போன வாகனமாக ஹோண்டா ஜாஸ் இருக்கின்றது. கவர்ச்சியான தோற்றம், சிறந்த ஹேண்ட்லிங் திறன், எரிபொருள் சிக்கனத்தை வழங்கக் கூடிய எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் காம்போ ஆகியவற்றில் மிக சிறந்த தயாரிப்பாக இது காட்சியளிக்கின்றது. இவையே இதன் மதிப்பை பல உயர்த்தி வைக்க காரணமாக இருக்கின்றன.

குறையவே குறையாது... இந்த கார்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம்... இதோ அதிக மதிப்பு உடைய 8 கார்களின் பட்டியல்!

ஸ்கோடா ஃபேபியா (Skoda Fabia)

நன் கட்டமைப்பு மற்றும் சிறந்த வடிவமைப்பைப் பெற்ற கார் மாடலாக ஃபேபியா இருக்கின்றது. இது கிளாஸ்-லீடிங் ஹேண்ட்லிங், நல்ல ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் மற்றும் திறமையான 1.4-லிட்டர் பம்ப் டியூஸ் டீசல் எஞ்சினையும் பெற்றிருக்கின்றது. இக்காரை வைத்திருப்போர் சந்தித்தி வரும் ஒரே ஒரு இன்னலாக அதிக சேவைச் செலவு இருக்கின்றது. அதே நேரத்தில் இக்கார் நீடித்து நிலைத்து நிற்கும் வகையில் உருவாக்கப்பட்ட கார் என்பதால் இதன் மதிப்பு சற்றே கூடுதலாக காட்சியளிக்கின்றது.

குறையவே குறையாது... இந்த கார்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம்... இதோ அதிக மதிப்பு உடைய 8 கார்களின் பட்டியல்!

ஸ்கோடா யெட்டி (Skoda Yeti)

பெரிய தோற்றமாகவும் இல்லாமல், சிறிய தோற்றமாக இல்லாமல் கணக்கச்சிதமான உருவ தோற்றத்தைக் கொண்ட காராக ஸ்கோடா யெட்டி காட்சியளிக்கின்றது. இக்காரை நிறுவனம் மிக சிறந்த குவாலிட்யில் கட்டியெழுப்பியிருக்கின்றது. ஆஃப்-ரோடை சமாளிக்கும் திறன் மற்றும் சிறந்த டார்க் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை இது வழங்கும் காராக இருக்கின்றது. குறிப்பாக இதன் டீசல் எஞ்ஜினுக்கு நாட்டில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

குறையவே குறையாது... இந்த கார்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம்... இதோ அதிக மதிப்பு உடைய 8 கார்களின் பட்டியல்!

வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90)

வால்வோ எக்ஸ்சி90 ஓர் ஆடம்பர தயாரிப்பு மட்டுமல்ல. இது மிகவும் பாதுகாப்பானதும் கூட. மேலும், அதிக வசதிகளைக் கொண்ட தயாரிப்பாகவும் இந்த எஸ்யூவி கார் காட்யளிக்கின்றது. ஏழு இருக்கைகள், சக்திவாய்ந்த டீசல் எந்திரம் என வால்வோ தயாரிப்புகளுக்கே உரித்தான பண்புகளை இக்கார் கொண்டுள்ளது. ஆகையால், இந்த காருக்கான மதிப்பும் பல அதிகமாக இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Eight cars in india that wont lose their value
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X