Just In
- 8 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 11 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 12 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 13 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 17.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்கவும்…
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அச்சு அசல் மெர்சிடிஸ் ஜி-கிளாஸை போல் இருக்குல!! பார்ப்போரை எளிதில் ஏமாற்றிவிடும் வாகனம் இது!
நம்பவே முடியாத வகையில் டாடா சுமோ கார் ஒன்று மெர்சிடிஸின் விலை உயர்ந்த தயாரிப்புகளுள் ஒன்றான ஜி-வேகனின் தோற்றத்திற்கு மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை வாகனத்தை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்ப்போம்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடலான ஜி-க்ளாஸ், பொதுவாக ஜி-வேகன் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட ரூ.2.4 கோடி வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படும் இந்த பென்ஸ் வாகனம் உலகளவில் வாடிக்கையாளர்களின் நம்பமான ஆஃப்-ரோடு வாகனங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

இத்தகைய காஸ்ட்லீயான மெர்சிடிஸ் தயாரிப்பை மனதில் வைத்து இந்தியாவின் டாடா மோட்டார்ஸின் சிறந்த தயாரிப்புகளுள் ஒன்றான சுமோ மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை வாகனம் தொடர்பான படங்கள் காடிவாடி செய்திதளம் மூலமாக நமக்கு மூலம் கிடைத்துள்ளன.

இந்த மாடிஃபை முடிவை எடுத்த டாடா சுமோ உரிமையாளருக்கு மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் கார் மிகவும் பிடிக்கும்போல. ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த மாடிஃபை சுமோ வாகனம் ஜி-வேகன் போல் காட்சியளிக்கவில்லை.

ஜி-கிளாஸை பலர் நேரில் பார்த்திருக்க மாட்டீர்கள் என்றாலும், படங்களிலாவது பார்த்திருப்பீர்கள். சுமார் 2 கோடி ரூபாயில் ஒரு வாகனம் விற்கப்படுகிறது என்றால் அதன் கம்பீரமான தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடியும்.

டாடா சுமோவும் கம்பீரமான தோற்றத்தை கொண்ட வாகனம் தான் என்றாலும், ஜி-கிளாஸ் அளவிற்கு இல்லை என்பதுதான் இதில் கசப்பான உண்மை. இந்த மாடிஃபை சுமோவில் வழங்கப்பட்டுள்ள மெர்சிடிஸ் லோகோ, பக்கவாட்டில் உள்ள ஏஎம்ஜி ஸ்டிக்கர் மற்றும் ஜி-கிளாஸில் வழங்கப்படும் அலாய் சக்கரங்களின் டிசைனில் இருக்கும் அலாய் சக்கரங்களை நீக்கி பார்த்தோமேயானால் இது வெறுமனே சுமோ கார் தான்.

ஆனால் இவ்வளவு கற்பனைகளுடன் சுமோவை ஜி-கிளாஸிற்கு இணையாக மாற்ற நினைத்த உரிமையாளரை பாராட்டியே ஆக வேண்டும். மேற்கூறப்பட்டவை மட்டுமில்லாமல் வாகனத்தின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்கள், பொனெட், முன்பக்க பம்பர், சக்கர வளைவுகள் உள்ளிட்டவையும் நமக்கு ஜி-கிளாஸை ஞாபகப்படுத்துகின்றன.

இவற்றுடன் பொனெட்டில் பொருத்தப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்கள், கருப்பு நிற பின்பக்கம் பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் முன்பக்கத்தில் இருந்து பின்பக்கம் வரையில் செல்லும் கருப்பு நிற ஸ்ட்ரிப்பையும் இந்த மாடிஃபை வாகனம் பெற்றுள்ளது.

பின்பக்கத்தில் ஸ்பேர் சக்கரத்தை தாங்கியுள்ள பின் கதவு இது டாடா சுமோ கார் என்பதை எல்லாருக்கும் தெரியப்படுத்தும் விதத்தில் உள்ளது. இருப்பினும் இந்த வாகனத்தை உள்ளே செல்லாமல் வெளியில் இருந்து பார்க்கும் ஆட்டோமொபைல் துறை சாராத எவர் ஒருவரும் இது மெர்சிடிஸ்-பென்ஸ் வாகனம் தான் என ஏமாருவார்கள் என்பது உறுதி.