Euler HiLoad மின்சார வர்த்தக வாகனம் அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

மிக மிக குறைவான விலையில் வர்த்தக பயன்பாட்டு வசதிக் கொண்ட மின்சார மூன்று சக்கர வாகனம் ஒன்றை ஆய்லர் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. இதன் விலை மற்றும் பிற முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

Euler HiLoad மின்சார வர்த்தக வாகனம் அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

தலைநகர் டெல்லியை தலைமையமாகக் கொண்டு இயங்கும் ஆய்லர் மோட்டார்ஸ் (Euler Motors), ஹைலோட் எல்5 (HiLoad L5 Commercial EV) வர்த்தக பயன்பாட்டு வசதிக் கொண்ட மின்சார ஆட்டோ ரிக்ஷா வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

Euler HiLoad மின்சார வர்த்தக வாகனம் அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

இது தலைநகர் டெல்லியில் ரூ. 3,49,999 என்ற மிக மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். மின் வாகனங்களுக்காக ஒன்றிய அரசு வழங்கும் ஃபேம்2 மானியம் மற்றும் டெல்லி அரசு வழங்கும் மானியம் ஆகியவற்றினாலயே இவ்வளவு மலிவு விலையில் ஹைலோட் எல்5 விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Euler HiLoad மின்சார வர்த்தக வாகனம் அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

இதன் விற்பனையை வரும் ஜனவரி 15ம் தேதியில் இருந்து டெல்லி என்சிஆர் பகுதியில் தொடங்க ஆய்லர் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் வாகனத்தில் ஒற்றை மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 14.21 பிஎச்பி மற்றும் 88.55 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மின் மோட்டாரே ஹைலோட் எல்5 எலெக்ட்ரிக் வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றது.

Euler HiLoad மின்சார வர்த்தக வாகனம் அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

இது ஒன்றே அதிகப்படியான எடைக் கொண்ட லோடுகளை இழுக்க போதுமானது என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. வர்த்தக ரீதியாக வாகனங்களை இயக்குவோர் அதிக லாபத்தைப் பெறும் நோக்கில் இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது சுமார் 680 கிலோ வரையிலான எடையைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது.

Euler HiLoad மின்சார வர்த்தக வாகனம் அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

ஆகையால், கார்கோ பயன்பாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக சிறந்த வாகனமாக இதன் அறிமுகம் அமைந்துள்ளது. ஹைலோடு எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தில் 72V, 12.4kW பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது லிக்யூடு கூலிங் வசதிக் கொண்டது. இது பேட்டரியை 25 டிகிரி கூலாக வைத்திருக்க உதவும். இதற்காக ஆர்க் ரியாக்டர் 100 எனும் தொழில்நுட்பத்தையும் நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது.

Euler HiLoad மின்சார வர்த்தக வாகனம் அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

மேலும், இதன் பேட்டரியை 3kW திறன் கொண்ட 3 பின் சாக்கெட்டில் வைத்துக் கூட சார்ஜ் செய்துகொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதில், வைத்து சார்ஜ் செய்தால் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய மூன்று மணி நேரங்கள் வரை ஆகும். அது ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் இதை விட மிக அதிக வேகத்தில் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.

Euler HiLoad மின்சார வர்த்தக வாகனம் அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

ஆய்லர் ஹைலோடு எல்5 மூன்று சக்கர மின்சார வாகனத்தில் மிக அதிக வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இரு விதமான சார்ஜ் செட்-அப்புகளை நிறுவனம் வழங்குகின்றது. அதனை ஃப்ளாஷ் 6 மற்றும் ஃப்ளாஷ் 27 என்றும் நிறுவனம் அழைக்கின்றது. ஃப்ளாஷ் 6 இல் வைத்து சார்ஜ் செய்யும்போது 2 மணி நேரத்தில் முழுமையான சார்ஜையும், ஃப்ளாஷ் 27இல் வைத்து சாார்ஜ் செய்யும்போது வெறும் 15 நிமிடங்களில் 50 கிமீ தூரம் வரை பயணிக்கும் சார்ஜ் திறனையும் பெற்றுக் கொள்ள முடியும்.

Euler HiLoad மின்சார வர்த்தக வாகனம் அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

இத்துடன், சார்ஜ் ஆன் வீல்ஸ் எனும் வசதியையும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக ஆய்லர் அறிவித்திருக்கின்றது. ஆம், ஆன்-ரோடு சார்ஜிங் செட்-அப்பை நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன் வாயிலாக வெறும் 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 20 கிமீ தூரம் போகக் கூடிய மின்சார திறனை பேட்டரிகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

Euler HiLoad மின்சார வர்த்தக வாகனம் அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

ரோட்-சைடு பிரேக்டவுண் அசிஸ்டன்ஸ் மற்றும் தேவைக்கேற்ப வீட்டுக்கே வந்து வழங்கும் சேவையாக இதனை நிறுவனம் வழங்க இருக்கின்றது. ஹைடுலோடு இ-மூன்று சக்கர வாகனம் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எக்ஸ் (X) மற்றும் எக்ஸ்ஆர் (XR) ஆகிய தேர்வுகளிலேயே அது கிடைக்கும்.

Euler HiLoad மின்சார வர்த்தக வாகனம் அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

இதில், எக்ஸ் வேரியண்ட் உச்சபட்சமாக 680 கிலோ எடையுள்ள பொருட்களைக் கையாளும் திறன் கொண்டது. இதற்கு அடுத்தபடியாக இருக்கும் எக்ஸ்ஆர் வேரியண்ட் 655 கிலோ வரையிலான பொதியை சுமக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இவற்றின் ரேஞ்ஜ் திறனும் மாறுபட்டு காணப்படுகின்றது.

Euler HiLoad மின்சார வர்த்தக வாகனம் அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

எக்ஸ்ஆர் அதிகபட்சமாக ஓர் முழுமையான சார்ஜில் 129 கிமீ ரேஞ்ஜை வெளியேற்றும். இதன் மின் மோட்டார் 9.1 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. ஆனால், எக்ஸ் வேரியண்ட் அதிகபட்சமாக 14.21 பிஎச்பி பவரை வெளியேற்றும். இருப்பினும் இரண்டு தேர்வுகளும் அதிகபட்சமாக மணிக்கு 42 கிமீ வேகத்தில் எனும் வேகத்திலேயே பயணிக்கும் திறனைக் கொண்டிருக்கின்றன.

Euler HiLoad மின்சார வர்த்தக வாகனம் அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

எக்ஸ் வேரியண்டின் உச்சபட்ச ரேஞ்ஜ் 151 கிமீட்டராக இருக்கின்றது. இதேபோல் உருவ அளவிலும் இரண்டும் வித்தியாசங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஹைலோடு எக்ஸ் 2100 மிமீ உயரத்திலும், எக்ஸ்ஆர் 1800 மிமீ உயரத்திலும் கிடைக்கும். எக்ஸ் வேரியண்டின் உடல் 6 x 4.7 x 4.3 அடிகளிலும், எக்ஸ்ஆர் வேரியண்ட் 6 x 4.7 x திறப்புடனும் கிடைக்கும்.

Euler HiLoad மின்சார வர்த்தக வாகனம் அறிமுகம்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா நீங்களும் ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

தொடர்ந்து, ஹைலோடு மின் வாகனத்தை இன்னும் சிறப்பான தயாரிப்பாக காட்சிப்படுத்தும் வகையில் புரஜெக்டர் ரக முகப்பு மின் விளக்கு, டிஸ்க் பிரேக், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், செல்போன் செயலி இணைப்பு வசதி, ஜியோ ஃபென்சிங் (ஜிபிஎஸ் டிராக்கிங் வசதி உடன்) ஆகிய தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், ஹைலோடு இ-வாகனம் ஸ்டைல்ஸ், பாதி லோடு பாடி, டெலிவரி வேன், ஹை டெக் மற்றும் ஃபிளாட் ஆகிய நான்கு விதமான ஸ்டைல்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

Most Read Articles
English summary
Euler motors launched hiload commercial ev in india at rs 3 50 lakhs
Story first published: Wednesday, October 27, 2021, 15:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X